தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பொட்டல்புதுரை சேர்ந்த  மாற்றுத்திறனாளி பெண் நாகூர் ஆஷியாள் தனது கணவர் முத்துசாமியுடன் பெட்ரோலை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு.

தென்காசி மாவட்டம் கடையம் யூனியன் பொட்டல்புதூரை சேர்ந்த இஸ்லாமிய சமூகத்தைச் சார்ந்த மாற்றுத்திறனாளி பெண் நாகூர் ஆஷியாள் தனது கணவர் முத்துசாமியுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த அவர்கள் தங்களது சொத்தை அபகரிக்க நினைப்பவர்கள் மீது பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறி தங்களது உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்ய முயன்றனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் இருவரின் உடலிலும் தண்ணீர் ஊற்றி காப்பாற்றி ஆட்சியரிடம் மனு அளிக்க அழைத்து சென்றனர்.

அவர்கள் அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

எனது மாமனார் வழி பூர்வீகமாக 16 ஆண்டுகளாக அனுபவித்து வந்த இடத்தை, தனது பணபலம் மற்றும் அதிகார பலத்தால் அதிகாரிகளின் துணையோடு ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். நான் இஸ்லாமிய குடும்பத்தைச் சார்ந்தவள். மேலும் மாற்றுத்திறனாளி ஆவேன். நான் தேவர் சமூகத்தைச் சார்ந்தவரை கலப்புத் திருமணம் செய்துள்ளேன். எனது மாமனார். சுப்பிரமணிய பாண்டி வழி 75 ஆண்டுகளாக அனுபவித்து வந்த நிலம் பொட்டல்புதூர் – முக்கூடல் சாலையில் உள்ளது. இதனை நாங்கள் சுமார் 16 வருடமாக அனுபவித்து வருகிறோம். மேற்படி இடத்தை உடையார் தேவர் மகன் ஆதிமூலம் அபகரிக்கும் நோக்கத்துடன் இடைஞ்சல் ஏற்படுத்தி எங்களுக்கு நெருக்கடி அளித்து வருகிறார்

மேலும் ஆதிமூலம் மற்றும் அவரின் சகோதரர்களினால் எங்கள் வாழ்க்கை மற்றும் அச்சம் அதிகரித்துக் கொண்டே வருகிறது.ஆகவே சமூகம் மேற்படி நபர் ஆதிமூலத்திடமிருந்து எங்கள் குடும்பத்தினருக்கு உயிர் பாதுகாப்பும், எங்கள் இடத்தையும் மீட்டுத் தருமாறு வேண்டிக்கேட்டுக்கொள்கிறேன். அரசால் எங்களுக்கு அளிக்கப்பட்ட பட்டாவை அதிகார பலத்தால் ஆதிமூலம் சில அரசு அதிகாரிகளுடன் இணைந்து அதனை ரத்து செய்ய

முயன்று வருகிறார்.

எனவே எனது பூர்வீக சொத்தை மீட்டு தரக்கோரி மனு அளித்தார்.