இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை சாலை தெரு ஓடைக்கரைப் பள்ளி ஜமாஅத்திற்கு உட்பட்ட மஹான் 18 வாலிபர்கள் ஷஹீத் வலியுல்லாஹ் தர்ஹாவில் 849ம் ஆண்டு கொடியேற்ற வெகு விமரிசையாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் கீழக்கரை புதுப் பள்ளி கதீப் மன்சூர் நூரி ஆலிம், ஜமாஅத் உலமா பெருமக்கள் ஆரிப் அன்வாரி ஆலிம், அப்துல் சலாம் பாக்கவி ஆலிம், கலீல் ரஹ்மான் ஆலிம், முகம்மது அஸ்லம் ஆலிம் ஆகியோர் கலந்து கொண்டு உலக நன்மைக்கு சிறப்பு பிராத்தனை செய்தார்கள்
இந்த சிறப்பு நிகழ்வில் ஜமாஅத் பிரமுகர்கள் க.கு.அப்துல் ஜப்பார், ஜனாப் சிக்கந்தர் பாட்சா, சாகுல் ஹமீது என்ற ஹாஜா ஆகியோர் கீழக்கரை புரவலர்கள் சீனாதானா செய்யது அப்துல் காதர், PRL சதக் அப்துல் காதர் மற்றும் கீழக்கரை நகர துணை சேர்மன் ஹமீது சுல்தான் ஆகியோர் கொடியேற்ற விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வை கீழக்கரை ஒடைக்கரைப் பள்ளி நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் N. சீனி முஹம்மது , பசீருதீன், MS ஹாஜா, ராசிக் பரீத், சபிர்கு ஆகியோரும் 18 ஷுஹதாக்கள் ஜகாத் கமிட்டி உறுப்பினர்கள் ஹபீப் முஹம்மது சுஐபு,
சுல்த்தான், யூசுப் அமீன், ஹபீப் முஹம்மது நெய்னா, குத்புதீன் ஆகியோரும் , பாஹிர்தீன் தலைமையிலான MRF இளைஞர் குழுவும் அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தார்கள்’
ஜமாஅத்தை நிர்வகிக்கும் கீழக்கரை உஸ்வத்துன் ஹஸனா முஸ்லிம் சங்க தலைவர் செ.மு. யூசுப் சாஹிப், சங்க உறுப்பினர்கள், மற்றும் சங்க மேலாளர் அப்துல் ரசாக் உட்பட அனைவரும் விழா சிறப்புற நடைபெறுவதற்கு எல்லாவிதமான ஒத்துழைப்பும் நல்கினார்கள்.
இந்த நிகழ்ச்சியை நகர மன்ற உறுப்பினர்கள் உட்பட நகர பிரமுகர்களும் கீழக்கரை அனைத்து ஜமாஅத்தை சேர்ந்த சகோதர சகோதரிகளும் அரூஸ்யா பாடசாலை மாணவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
பாதுகாப்பு ஏற்பாடுகளை கீழக்கரை காவல் துறையினர் சிறப்பாக செய்தனர்..
மேலும் 18 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் பிராத்தனை நிகழ்வில் தினமும் இரவு மவ்லிது ஓதி நார்சா வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது .