தென் கொரியாவின் யெச்சியோனில் நடைபெற்ற 20வயதுக்குட்பட்டோருக்கான 20ஆவது ஆசிய தடகளப் போட்டியில் கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம், கல்லூத்து கிராமத்தைச் சேர்ந்த மாணவி அபிநயா பங்கேற்று, பதக்கங்களை வென்றார். அவர் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதிஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றிருந்தார்.
இந்நிலையில் பாவூர்சத்திரத்தில் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வக்கீல் பொ.சிவபத்மநாதனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் ஆறுமுகச்சாமி மற்றும் மாணவியின் பெற்றோர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.