கள்ளக்குறிச்சி மாவட்டம், ஆலத்தூர் கிராமத்தில் இந்தியன் வங்கி கிளை அமைந்துள்ளது. இந்த கிளையில் 40 -க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வாடிக்கையாளராக இருந்து வருகிறார்கள். இந்த இந்தியன் வங்கிக் கிளையில் சுமார் ஒரு மாத காலமாக வங்கி மேலாளர் இல்லாத காரணத்தால் விவசாயக் கடன், கல்லூரி மாணவர்களின் கல்விக் கடன், நகைக் கடன் பெறுவதில் பெரிதும் அவதிப்பட்டு வருகிறார்கள். மேலும் வாடிக்கையாளர்களின் அனைத்து கோப்புகளும் கிடைப்பில் இருந்து வருகிறது. இதனால் வங்கியின் வாடிக்கையாளர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். வங்கியின் வேலை செய்யும் ஊழியர்கள் குறைவாக இருப்பதால் வாடிக்கையாளரின் பணிகள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகிறது. வாடிக்கையாளர்களின் கூட்டமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே உடனடியாக கடலூர் மண்டல மேலாளர் அவர்கள் ஆலத்தூர் இந்தியன் வங்கி கிளைக்கு புதிய வங்கி மேலாளரை நியமிக்க வேண்டுமென்று ஆலத்தூர் இந்தியன் வங்கி வாடிக்கையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள்: