கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே நாககுப்பம் கிராமத்தில் நாககுப்பம், மறவானத்தம், தென் செட்டியந்தல் ஆகிய மூன்று ரோடுகள் சங்கமிக்கும் இடத்தில் சுமார் 12 அடி நீளம் உள்ள மலைப்பாம்பு இருந்தது. இதனை அறிந்த பொதுமக்கள் சின்னசேலம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதன் அடிப்படையில் நிலைய அலுவலர் பரமசிவம், உதவி நிலைய அலுவலர் பழனிவேல் ஆகியோர் தலைமையில், அலுவலர்கள் விரைவாக சென்று அங்கிருந்த மலைப் பாம்பினை பிடித்து கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.