செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் பிரசித்திபெற்ற அருள்மிகு ஏரிகாத்த கோதண்டராமர் ஆலயம் உள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமான பழமையான திருத்தேர் ஆனது கடந்த சுமார் 4 ஆண்டுகளாக மேற்கூரை இல்லாமல் வெறும் தார்பாய் மட்டுமே கொண்டு மூடப்பட்டு வருகின்றது. இதனால் மழை,வெயில் காலங்களில் தேர் சிறுக சிறுக சேதம் அடையும் சூழல் ஏற்படுகின்றது. மேலும் தேர் திறந்த வண்ணம் உள்ளதால் அதனை சுற்றி மது அருந்துதல் போன்ற சமூக அவல செயல்கள் நடைபெறுகின்றன. சமூக அவல செயல் கூடாரமாக மாறிவரும் தேரடியை பாதுகாக்க தேருக்கு பழையபடி மேற்கூரை அமைத்து தர வேண்டும் என பக்தர்கள் சார்பாக இந்து முன்னணி  இந்து சமய அறநிலையத்துறைக்கு கோரிக்கை வைக்கின்றது.