ஸ்ரீ அரியநாதசுவாமி கோவில் கும்பாபிஷேக விழா!
திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி தாலுகா அரிகேசவநல்லூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ அரியநாதர் சுவாமி திருக்கோவில் மகாகும்பாபிஷேக விழா அடுத்த மாதம் (ஜூலை) 5ஆம் தேதி நடைபெற இருக்கிறது.
முன்னதாக ஜூலை மாதம் 2ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 5.30 மணிக்கு ஸ்ரீ மகா கணபதி ஹோமம், ஸ்ரீ நவகிரக ஹோமம், ஸ்ரீ மகாலட்சுமி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. 3ஆம் தேதி திங்கள்கிழமை காலை 7.15 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜையும், 4ஆம் தேதி செவ்வாய்கிழமை காலை 8:30 மணிக்கு 4ஆம் கால யாகசாலை பூஜையும், அன்று மாலை 6:00 மணிக்கு 5ஆம் கால யாகசாலை பூஜையும் நடைபெறுகிறது.
அதனைத் தொடர்ந்து 5ஆம் தேதி புதன்கிழமை காலை 9.15 மணி முதல் அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி சமேத ஸ்ரீ அரியநாதசுவாமி விமான கோபுரங்கள், மூலஸ்தானம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகாகும்பாபிஷேகம் நடைபெறுகிறது. கும்பாபிஷேக நிகழ்ச்சிகளை தூத்துக்குடி ஸ்ரீ சங்கர ராமேஸ்வரர் திருக்கோவில் சிவஸ்ரீ சு.செல்வம் பட்டர் என்ற கல்யாணசுந்தர சிவாச்சாரியார் நடத்துகிறார். இத்தகவலை சேரன்மகாதேவி அரிகேசநல்லூர் முக்கியப் பிரமுகர் கலைமாமணி வெங்கட்ராமன் செய்தியாளரிடம் தெரிவித்தார். அப்போது கணபதி பாலாஜி, அரிகேஷ், சீனிவாசன் ஆகியோர் உடன் இருந்தனர்.