திருப்பூர் அருகே வீரபாண்டி பகுதியில் உள்ள ஆத்தாள் தோட்டத்தில் தியாகி சுந்தராம்பாள் அறக்கட்டளை சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீ சீரடி சாய்பாபா திருக்கோவில் நூதன அஷ்ட பந்த மகா கும்பாபிஷேக விழா  கணபதி ஹோமம், கோ பூஜையுடன் துவங்கியது,

தொடர்ந்து ஆலயத்தில் விமான கோபுரங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டன,தொடர்ந்து பூஜையில் பஞ்சகாவிய பூஜை,யாகசாலை பிரவேசம், திக் பூஜை,மகா பூர்ணாஹூதி,மகாதீபாராதனையும் நடைபெற்றது,

அதனைத் தொடர்ந்து பூஜையில் அருட் கலசங்கள் வலம் வருதல் நிகழ்ச்சியும்,பிம்பசுத்தி ரக்ஷா பந்தன் நடைபெற்றது தொடர்ந்து,ஸ்ரீ  சீரடி சாய்பாபா கோவில் ஸ்தூல லிங்க விமான கோபுரத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம்,அதனைத் தொடர்ந்து சூஷ்ம லிங்க, பத்ரலிங்க மூலஸ்தானத்திற்கு மகா கும்பாபிஷேகமும் வெகு விமரிசையாக நடைபெற்றது.தொடர்ந்து மகா ஆரத்தியும்,மகா விசேஷ புஷ்பாஞ்சலி,மகா தீபாராதனையும் நடைபெற்றது.