கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் தேசிய நெடுஞ்சாலையில் சாலையோர பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்துள்ள கடைகளை அகற்றச் சொல்லி சம்பந்தப்பட்ட உரிமையாளர்களிடம் நெடுஞ்சாலைத்துறை சார்பாகவும், பேரூராட்சி சார்பாகவும் ஒரு வாரத்திற்கு முன்னதாகவே ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் எனவும், அகற்றப்படாமல் இருந்தால் சம்பந்தப்பட்ட துறையைச் சேர்ந்த அதிகாரிகளினால் ஆக்கிரமப்புகள் அகற்றப்படும். அதற்கு உண்டான செலவுகளை உரிமையாளர்களே கொடுக்க வேண்டும் எனவும் நோட்டீஸ் வழங்கப்பட்டது.
இதன் அடிப்படையில் நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த் துறையின் உதவியோடு சாலையோரம் உள்ள ஆக்கிரமப்பு பகுதிகளை அகற்றி சாலைகளை விரிவுபடுத்தி வருகின்றனர். இந்த ஆக்கிரமிப்பு பணியில் எவ்வித பிரச்சனையும் நடைபெறாமல் இருக்க சின்னசேலம் பேரூராட்சி மன்ற தலைவர் லாவண்யா ஜெய்கணேஷ், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் ராகேஷ் மற்றும் வார்டு கவுன்சிலர்கள் உட்பட சின்னசேலம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜாராமன் தலைமையில், உதவி ஆய்வாளர் மணிகண்டன் மற்றும் போலீசார் உதவியுடன் அகற்றப்பட்டு வருகிறது.