ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி ஸெளராஷ்ட்ர பிராஹ்மண மஹாஜனங்களுக்குச் சொந்தமான ஸ்ரீ சுந்தரராஜப்பெருமாள் கோவில், ஸ்ரீவிசாலாக்ஷியம்பிகா-ஸ்ரீசந்திரசேகர சுவாமியின் ஈஸ்வரன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் சிறப்புடன் நடந்தேறியது.

கும்பாபிஷேகத்தையொட்டி, கோவில் முன்பு படித்துறையில் யாகசாலை அமைக்கப்பட்டு பூஜைகள் மங்கள இசையுடன் தொடங்கி திருமுறை பாராயணம், தேவதா அனுக்ஞை, கணபதி பூஜை, வருண பூஜை,மகா கணபதி ஹோமம், தன பூஜை, கோ பூஜை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, தீர்த்த சங்க்ரஹணமும்,திசா ஹோமம், பரிவார தேவதா கலாகர்ஷணம், ரஷா பந்தனம், கும்ப அலங்காரம், யாகசாலை பிரவேசம், பூர்ணாஹுதி, தீபாராதனைகளும், ஆறாம் கால யாக பூஜைகள் ஆரம்பித்து ஜபம், ஹோமம், மஹா பூர்ணாஹூதி, தீபாராதனைகள் நடைபெற்றது.

யாகசாலையிலிருந்து கங்கை, பிரம்மபுத்திரா, கோதாவரி, யமுனை, காவேரி, கொள்ளிடம், காசி, ராமேஸ்வரம், தாமிரபரணி, வைகை போன்று பல்வேறு புனித ஆறுகளின் புனித தீர்த்தக்குடங்கள் பூஜை செய்யப்பட்டு, தீர்த்தக்குடங்கள் யாகசாலையிலிருந்து புறப்பட்டு இராஜ கோபுரம் உள்பட அனைத்து கோபுரங்களையும் சென்றடைந்து காலை 06.36 – மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது இவ்விழா ஏற்பாடினை ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தான மேனேஜிங் டிரஸ்டி நாகநாதன். டிரஸ்டி&டிரஷர் பாலமுருகன். டிரஸ்டிகள் நாகநாதன். கோவிந்தன். முரளிதரன். மற்றும் திருப்பணிகமிட்டியினர் விழா ஏற்பாடு  சிறப்பாக செய்தனர்