தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் 534, 535 மற்றும் 536வது கிளைகள் கோயம்புத்தூர் மாவட்டம் பாப்பம்பட்டி, கன்னியாகுமரி மாவட்டம் மறவன் குடியிருப்பு மற்றும் தர்மபுரி மாவட்டம் பெரியனஹள்ளி ஆகிய இடங்களில் ஏடிஎம் / சிஆர்எம் வசதியுடன் இன்று துவக்கியுள்ளது.

          கோயம்புத்தூர் மாவட்டம் பாப்பம்பட்டியில் 534வது கிளையை முன்னாள் பஞ்சாயத்து தலைவர் எஸ்ஆர்டி டிரான்ஸ்போர்ட் குரூப் நஞ்சப்பன், திறந்து வைத்தார். கன்னியாகுமரி மாவட்டம் மறவன் குடியிருப்பில் 535வது கிளையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரிகிரன் பிரசாத் திறந்து வைத்தார். தர்மபுரி மாவட்டம் பெரியனஹள்ளியில் 536வது கிளையை பச்சைமுத்து குழும கல்வி நிறுவன தலைவர் பாஸ்கர் திறந்து வைத்தார். விழாவில் வங்கியின் ஊழியர்கள், அலுவலர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

          புதிய கிளைகள் திறப்பு குறித்து வங்கியின் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான கிருஷ்ணன் விளக்கி கூறியதாவது : “பங்கு சந்தைகளில் பட்டியலிட்ட பிறகு வங்கியானது அதனை நாடு முழுவதும் விரிவாக்கம் செய்யும் திட்டத்தில் வேகம் காட்டும் விதமாக தனது செயல்பாடுகளை செய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று தமிழகத்தில் 534, 535 மற்றும் 536வது புதிய கிளைகளை திறந்திருக்கிறது. 

          மேலும் இன்னும் அதிகமான கிளைகளை இந்தியா முழுவதும் திறந்திட திட்டமிட்டு இருக்கிறது. இந்த புதிய கிளைகளின் துவக்க விழாவின் மகிழ்ச்சியினை வங்கியின் அனைத்து உடைமைதாரர்களுக்கும் பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன்” என்றார்.