ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவிலில் அடிப்படை வசதிகளை செய்து தரக்கூடிய பாரம்பரிய உரிமைகளை பாதுகாக்க கோரியும் வரக்கூடிய யாத்திரைகளுக்கு அடிப்படை வசதி செய்த கோரியும் தமிழக அரசை வலியுறுத்தி ஆளும் அரசின் கூட்டணி கட்சிகள் சார்பில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் பேருந்து நிலையம் முன்பு நடைபெற்றது

அதுமட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்து யாத்திரிகள் கொண்டு வரும் கங்கை தீர்த்தத்தை வைத்து பூஜை செய்யும் இடத்தை இடம் மாற்றம் செய்யாமல் தொடர்ந்து அதே இடத்தில் பூஜை செய்வதற்கு அனுமதிக்க வேண்டும் என்றும் உள்ளூர் பொதுமக்கள் மற்றும் கோவிலுக்கு வரக்கூடிய யாத்திரைகள் சிரமமின்றி எளிதாக தரிசனம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஸ்படிகலிங்க தரிசனம் கட்டணம் 200ஐ ரத்து செய்ய வேண்டும் என்று சாமி தரிசனத்திற்கு செல்லும் இலவசம் வழியை கூடுதல் படுத்திட வேண்டும் என்று மாற்றுத்திறனாளிகளுக்கும் முதியோர்களுக்கும் தரிசனம் செய்வதற்கு தனி வழி அமைத்து கொடுக்க வேண்டும் என்றும் திருக்கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்களுக்கு இலவச தங்கு வசதி குடிநீர் கழிப்பிட வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்றும் நீண்ட காலமாக சாமியை பல்லாக்கில் தூக்கி  செல்லும் ஊழியர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி கொடுப்பது அவர்களை  நிரந்தர படுத்த வேண்டும் என்றும் பிர்லா காட்டேஜ் அருகில் உள்ள இலவச கழிப்பறையை திறந்து பயன்பாட்டில் கொண்டுவர வேண்டும் என்றும் வடக்கு ரத வீதியில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்களாக மூடி கிடக்கும் கழிப்பறையை திறந்து கொடுக்க வேண்டும் என்றும் ஆளும் அரசின் கூட்டணி கட்சிகள் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது

 இதில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி மறுமலர்ச்சி திமுக தமிழக வாழ்வுரிமைக் கட்சி   மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி மனிதநேய மக்கள் கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் உள்ளூர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்