இந்தியாவின் சிறுகுறுநடுத்தர தொழில் துறை குறித்து முன்னெப்போதும் இல்லாத
வகையில் மிகப் பெரிய ஆய்வு ஒன்று நடத்தப்பட்டதில் 16 தொழில்களைச் சேர்ந்த சுமார் 1 லட்சம் பேர் இதில் பங்கேற்று
ஆய்வில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்தனர். இது தொடர்பாக சிறு,குறு,நடுத்தர தொழில்களின் டிஜிட்டல்
தொழில்நுட்ப தயார் நிலை குறித்த தொலைநோக்கு பார்வையை விஐ பிசினஸ் பகிர்ந்து கொண்டது. சிறு,குறு,நடுத்தர
தொழில்களின் டிஜிட்டல் நிபுணத்துவ வளர்ச்சியையும், அவற்றின் டிஜிட்டல் மயப்படுத்துதலின் அளவையும் புரிந்து
கொள்வதை இந்த ஆய்வு நோக்கமாகக் கொண்டுள்ளது. ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு, உற்பத்தி, தகவல் தொழில்
நுட்பம், கல்வி, சரக்கு பரிவர்த்தனை, தொழில்முறை சேவைகள், வங்கி, கட்டுமானம், சுரங்கம் உள்ளிட்ட 16 தொழில்கள்
இவற்றில் அடங்கும்.ரெடி ஃபார் நெக்ஸ்ட் 2.0 திட்டம் முழுமையான அறிமுகம் கீழ்கண்ட அம்சங்களை உள்ளடக்கியுள்ளது.
‘சிறு தொழில்கள் வளர்ச்சி குறித்த தொலைநோக்கு ஆய்வு 2023’ அறிக்கையிலிருந்து தொலைநோக்கு பார்வகளை பெறுவது,
சிறு,குறு,நடுத்தரத் தொழில்கள் தொழில்நுட்பத்தை தன்வயப்படுத்திக் கொள்ள உதவும் வகையில் மேம்படுத்தப்பட்ட
டிஜிட்டல் சுய மதிப்பீட்டு உபகரணங்களை வழங்குதல், பிரத்யேகமான சிறு,குறு,நடுத்தரத் தொழில்களுக்கான சலுகைகள்
அவற்றின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக உள்ளன – இப்பிரிவில் ஏற்படும் வளர்ச்சியில் அதன் கவனத்தை விஐ பிசினஸ்
மேலும் வலுப்படுத்தியுள்ளது.இத்திட்டம் குறித்து வோடஃபோன் ஐடியா நிறுவனத்தின் தலைமை நிறுவன வர்த்தக அதிகாரி,
அர்விந்த் நெவாதியா கூறுகையில், “இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் சிறு,குறு,நடுத்தர தொழில்கள்
சுமார் 30% பங்களிக்கின்றன. இந்தத் துறையானது முன்னெப்போதும் இல்லாத வகையில் டிஜிட்டல்மயமாகியுள்ள
போதிலும், பெருந்தொற்று கால கட்டத்துக்குப் பிறகு, அதன் டிஜிட்டல் முதிர்ச்சி குறியீடு 55 முதல் 60% வரை மட்டுமே
காணப்படுகிறது. சரியான தொழில்நுட்பக் கருவிகள் மூலம், சிறு,குறு,நடுத்தரத் தொழில்கள் தங்கள் வளர்ச்சித்திறனை
முடுக்கி விட்டு, நாட்டின் பொருளாதாரத்திற்கு இன்னும் மிகப் பெரிய வகையில் வளர்ச்சிக்கான உந்துசக்தியாக விளங்க
முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். ரெடி ஃபார் நெக்ஸ்ட் திட்டமானது சிறுகுறுநடுத்தர தொழில்களின் முடிவெடுக்கும்
செயல்முறையை எளிதாக்குவதுடன், நீண்ட கால தீர்வுகளை அளிப்பதற்கான எங்களது உறுதிப்பாடாகும். அத்துடன்
வணிகத்திற்கான சரியான கவனம், திசை, தீர்வு ஆகியவற்றை அடையாளம் கண்டு, அவர்களை எதிர்காலத்துக்கு
தயார்படுத்தவும் உதவுகிறது. இன்றைய டிஜிட்டல் யுகத்தில் சிறுகுறுநடுத்தர தொழில்களுக்கான உற்பத்தித் திறன்,
வாடிக்கையாளர் தொடர்பு, பாதுகாப்பு ஆகியவற்றை மேம்படுத்தும் வகையில் எங்களது விரிவான தயாரிப்பு உள்ளடக்கம்
வடிவமைக்கப்பட்டுள்ளது” என்றார். ஆய்விலிருந்து பெறப்பட்ட பார்வைகளின் அடிப்படையில் சிறு,குறு,நடுத்தர
தொழில்களுக்கான பொருத்தமான பரிந்துரைகளை வழங்கும் விதமாகவும், சிறு,குறு,நடுத்தர தொழில்களின் வளர்ந்து வரும்
வணிகத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலும் விஐ பிசினஸ் இதை உருவாக்கியுள்ளது. அதுமட்டுமின்றி கூடுதலாக,
விஐ பிசினஸ் நிறுவனம் இந்தாண்டு தனது டிஜிட்டல் மதிப்பீட்டு கருவியை மேலும் மேம்படுத்தியுள்ளது.