சென்னை, ஏப்ரல் 2023

இந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள உலக சோலார் சேலஞ்ச் 2023-க்காக (Solar Challenge 2023) மெட்ராஸ் இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (Indian Institute of Technology Madras – IITM) அக்னிரத் குழுவுடன்(Agnirath Group)  இணைந்து செயல்படுகிறது பிரிட்ஜ்ஸ்டோன் (Bridgestone) நிறுவனம். உலக சோலார் சேலஞ்ச் டார்வின் (Darwin) நகரத்திலிருந்து அடிலெய்டு (Adelaide) வரையிலான 3000 கி.மீ. சோலார் கார் பந்தயத்தில் பல்வேறு அணிகள் போட்டியிடுகின்றன. உலக சோலார் சேலஞ்சில் அணிகள் தங்கள் அதிநவீன வடிவமைப்பு, பொறியியல் தீர்வுகளை வெளிப்படுத்த உள்ளன. இந்த போட்டியானது எதிர்கால தலைமுறை பொறியாளர்களை ஊக்குவிக்கவும், நீடித்ததன்மை மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை மேம்படுத்துவதற்கும் ஒரு தளமாக செயல்படுகிறது.

டயர்கள் மற்றும் ரப்பரில் உலகளாவிய முன்னணி நிறுவனமான பிரிட்ஜ்ஸ்டோன் கார்ப்பரேஷன் (Bridgestone Corporation), உலக சோலார் சேலஞ்ச் 2023-க்கு தனது டைட்டில் ஸ்பான்சர்ஷிப்பை தொடர்ச்சியாக அறிவித்துவருகிறது. உலகின் முன்னணி சூரிய தொழில்நுட்பம் மற்றும் மேம்பட்ட பொறியியல் பந்தயமான இதில்சூரிய சக்தியில் இயங்கும் வாகனங்களை வடிவமைத்தல், உருவாக்குதல், அணிகளுக்கான போட்டி இது.

“உலக சோலார் சேலஞ்சிற்கு நிதியுதவி செய்வதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். மேலும் வாகனத் துறையில் புதுமை மற்றும் நீடித்ததன்மையை மேம்படுத்துவதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக நாங்கள் இருப்பதில் பெருமிதம் கொள்கிறோம்” என்று பிரிட்ஜ்ஸ்டோன் இந்தியாவின் நிர்வாக இயக்குர் திரு. ஸ்டெபானோ சன்சினி (Mr. Stefano Sanchini) கூறினார். 

இந்த ஸ்பான்சர்ஷிப், ஐ.ஐ.டி.-எம். உடனானகைகோர்ப்பின் மூலம், அடுத்த தலைமுறை பொறியாளர்கள், முன்னணி செயல்பாட்டாளர்களுக்கு ஆதரவளித்து உத்வேகம் அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளோம், எதிர்கால நீடித்த போக்குவரத்து வசதிகளை வடிவமைப்பதில் அவர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள்.

உலக சோலார் பந்தயம் சார்ந்த பிரிட்ஜ்ஸ்டோன்நிறுவனத்தின் ஈடுபாடு, நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதற்கான நிறுவனத்தின் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது. அத்துடன் கார்பன் வெளியீட்டை குறைக்க உதவும் புதிய தொழில்நுட்பங்களின் வளர்ச்சியை ஆதரிப்பதில் அதன் அர்ப்பணிப்பையும் சேர்த்தே பிரதிபலிக்கிறது. இந்தப் போட்டிக்காக, மெட்ராஸ் ஐ.ஐ.டி. அணியான அக்னிரத்தின் வாகனத்தில் பிரிட்ஜ்ஸ்டோன் டயர்கள் பொருத்தப்படும். இது சூரிய சக்தியில் இயங்கும் அவர்களுடைய வாகனத்தின் செயல்திறனை மேம்படுத்தக்கூடிய முன்னோடி தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் உதாரணமாக, டயர் உருவாக்கத்தில்பிரிட்ஜ்ஸ்டோனின் புதுமையான அணுகுமுறையாக என்லைடென் (ENLITEN) டயர் தொழில்நுட்ப தளம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் இடம்பெற்றுள்ள பல அதிநவீன தொழில்நுட்பங்களின் கலவையானது, ஓட்டுநர்களுக்கு அதிகபட்ச பாதுகாப்பு, சிறந்த டயர் செயல்திறனை வழங்குகிறது. அதே நேரத்தில் டயரின் நீடித்ததன்மை பண்புகளையும்மேம்படுத்துகிறது. அது மட்டுமல்லாமல், சமீபத்திய மொபிலிட்டி பரிணாமத்திற்கு ஏற்றவாறு பிரிட்ஜ்ஸ்டோன் டயர் போர்ட்ஃபோலியோவை என்லைடென் மாற்றுகிறது. இவை அனைத்து பிரிட்ஜ்ஸ்டோன் டயர்களையும் முழுமையாக மின்வாகனப் பயன்பாட்டுக்குத் தயார் செய்கிறது.

“ஐஐடி மெட்ராஸின் டீம் அக்னிரத் மற்றும் ஐ.ஐ.டி.மெட்ராஸ் புதுமைகளுக்கான மையம் ஆகியவை டார்வின் நகரம் முதல் அடிலெய்டு வரையிலான 3,000 கிலோமீட்டர் சூரிய சக்தியில் இயங்கும் கார் பந்தயத்தில் போட்டியிடுவதை எதிர்நோக்கியுள்ளன.பிரிட்ஜ்ஸ்டோன் எங்கள் குழுவுடன் கைகோர்த்தது எங்களுக்குப் பெரும் கௌரவம். இந்த நிகழ்வில் எழக்கூடிய சவாலையும் கற்றல் அனுபவத்தையும் நாங்கள் எதிர்நோக்கியுள்ளோம்” என்று ஐ.ஐ.டி. மெட்ராஸ் அப்ளைடு மெக்கானிக்ஸ் துறை தலைவரும், டீம் அக்னிரத் சிரிய ஆலோசகருமான பேராசிரியர் சிவக்குமார் கூறினார்.

பிரிட்ஜ்ஸ்டோன் இ.எம்.ஐ.ஏ.வின் தலைமை நீடித்ததன்மை அதிகாரி மற்றும் மேலாண்மை வாரிய உறுப்பினர் திரு. கோஜி டகாகி (Mr. Koji Takagi) இதுகுறித்து கூறுகையில், “உலக சோலார் சேலஞ்சிற்கு நாங்கள் அளித்துவரும் தொடர்ச்சியான ஆதரவு சமூகத்திலும், எங்கள் வாடிக்கையாளர்களிடமும் மற்றும் எதிர்கால சந்ததியினரிடமும் நாம் ஏற்படுத்த விரும்பும் மதிப்பை அதிகரிக்கிறது. 2050ஆம் ஆண்டுக்குள் கார்பன் வெளியீட்டை பூஜ்யமாகக் குறைக்கவும், 100% மறுசுழற்சி செய்யப்பட்ட மற்றும் புதுப்பிக்கத்தக்க பொருட்களுடன் பணிபுரியவும் விரும்புகிறோம்.அத்துடன் எதிர்கால சந்ததியினருக்காக சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நிலையான டயர் தொழில்நுட்பங்கள் மற்றும் தீர்வுகளை மேம்படுத்த விரும்புகிறோம்” என்றார்.

அக்டோபரில் நடைபெறும் உலக சோலார் சேலஞ்ச் 2023 ஆஸ்திரேலியாவில் 3000 கி.மீ. தொலை கொண்ட இந்தப் பந்தயத்தில் பங்கேற்கும் உலகெங்கும் உள்ள அணிகள், பொறியியல் திறன்கள் மற்றும் நீடித்ததன்மை மீதான தங்களின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் சவாலுக்காகப்போட்டியிட உள்ளன.