அடிபணியப்போவதில்லை. சர்வதேச சமூகத்துடன் தொடர்பு கொள்வதை நிறுத்தப்போவதில்லை. எதுவும் எங்களைத் தடுக்க முடியாது” என்றார்.

இந்நிலையில் சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் கூறுகையில், “தைவான் சீனாவின் ஒருங்கிணைந்த பகுதி. அதை யாராலும் சீனாவிடமிருந்து பிரிக்க முடியாது. சீனாவின் இறையாண்மை, பிராந்திய உரிமை எப்போதும் துண்டாடப்பட முடியாத ஒன்று. தைவானின் எதிர்காலம் அதன் தாய் மண்ணுடன் இணைவதில்தான் இருக்கிறது” என்றார்.