ராமேஸ்வரம் கோவில் அக்னி தீர்த்த கரையில் டன் கணக்கில் கடல் பாசி குவிந்து குவிந்து, துர்நாற்றம் வீசுவதால் பக்தர்கள் அருவருப்புடன் நீராடுகின்றனர்.கோடை காலமான ஏப்., முதல் ஜூன் வரை பாக் ஜலசந்தி கடலில் வளரும் கடல் பாசிகள் முதிர்ச்சியால் பெயர்ந்து, அலை வீசும் திசையில் கரை ஒதுங்கும் அதன்படி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் அக்னி தீர்த்த கரையில் கடந்த சில நாட்களாக தினமும் டன் கணக்கில் கடல் பாசி ஒதுங்குகிறது.இவற்றை நகராட்சி நிர்வாகம் தினமும் மாலையில் மண் அள்ளும் இயந்திரம் மூலம் டிராக்டரில் ஏற்றி அகற்றுகின்றனர்.எனினும், இரவு, பகலாக டன் கணக்கில் குவியும் கடல் பாசிகளால் துர்நாற்றம் துர்நாற்றம் வீசுகிறது.

 இதனால் பக்தர்கள் அருவருப்புடன் நீராடினர்.