நீர்மோ மற்றும் தர்பூசணி பழம் இலவசமாக வழங்கிய திமுகவினர்.
தேனி தெற்கு மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள காமாட்சிபுரத்தில் அருள்மிகு பகவதி அம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது.
இந்த திருவிழாவில் கலந்து கொள்ளும் பக்தர்கள் மற்றும் ஊர் பொதுமக்களுக்கு வெப்பத்தின் தாக்கத்தை குறைப்பதற்காக காமாட்சிபுரம் ஊராட்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் ‘ சார்பாக நீர் மோர் மற்றும் தர்பூசணி பழம் இலவசமாக வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியை காமாட்சிபுரம் ஊராட்சி மன்ற தலைவர் அழகுமுத்து மற்றும் உதவி தலைமை ஆசிரியர் ஜெயராஜ் ஆகியோர் தலைமையிலும், திராவிட முன்னேற்றக் கழக கிளைச் செயலாளர் கதிரவன், ஆசைத்தம்பி ஆகியோர் முன்னிலையிலும், முருகேசன் அவர்கள் இந்த நிகழ்ச்சி துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் கோவில் திருவிழாவில் கலந்து கொண்ட பக்தர்கள், பள்ளி மாணவ மாணவிகள், பொதுமக்கள், துப்புரவு பணியாளர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்