பார்கின்சன்ஸ் நோயாளிகளுக்கான இயக்கக் கோளாறுகளுக்கும் DBS பிரச்சனைகளுக்கும் தீர்வுகாண மேம்பட்ட கிளினிக்-ஐத் தொடங்கும் ரேலா மருத்துவமனை

சென்னை, ஏப்ரல் 10, 2024: இம்மாநகரில் ஒரு முன்னணி பன்னோக்கு மருத்துவமனையாக புகழ்பெற்றிருக்கும் ரேலா மருத்துவமனை பார்கின்சன்ஸ் நோயாளிகளின் DBS (ஆழமான மூளைத்தூண்டல்) பிரச்சனைகளை சரிசெய்ய ஒரு மேம்பட்ட கிளினிக்-ஐ தொடங்கியிருக்கிறது. இந்த கிளினிக், தேவைப்படுபவர்களுக்கு மதிப்பாய்வு செய்து DBS, பொடூலினம் டாக்ஸின் மற்றும் அபோமார்ஃபைன் தெரபிக்குப் பிறகு உகந்த பலனளிக்கும் இமேஜ் வழிகாட்டல் புரோகிராமிங் போன்ற மேம்பட்ட பராமரிப்பை வழங்கும்.இந்த கிளினிக் தொடக்கவிழா நிகழ்வில் ரேலா மருத்துவமனையின் தலைவர் & நிர்வாக இயக்குநர் புரொபசர். முகமது ரேலா தலைமை வகிக்க கவுரவ விருந்தினராக […]

விழுப்புரம் வடக்கு மாவட்டம் இந்திய கூட்டணி சார்பில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆரணி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் M.S தரணி வேந்தனை  அறிமுகம் செய்து வைத்தார்; 

விழுப்புரம் வடக்கு மாவட்டம் செஞ்சி தனியார் திருமண மண்டபத்தில் ஆரணி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்டசெஞ்சி சட்டமன்ற தொகுதி திமுக நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி அமைச்சர் செஞ்சி மஸ்தான் தலைமையில் நடைபெற்றது.  இதில் பாராளுமன்ற  திமுக வேட்பாளர் M.S.தரணி வேந்தனை விழுப்புரம் வடக்கு மாவட்ட இந்திய கூட்டணி சார்பில் வரவேற்று அறிமுகம் செய்து வைத்தார்‌.  நிகழ்ச்சியில் அமைச்சர் செஞ்சி மஸ்தான், ஆரணி பாராளுமன்ற திமுக வேட்பாளர் M.S.தரணி வேந்தனை சுமார் 3 லட்சம் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்று கழக நிர்வாகிகளுக்கு கூறுகின்றனர். […]

சேலம் எம்மீஸ் சிறப்பு பள்ளி மற்றும் கமலம் மறுவாழ்வு மையம் நடத்திய 11 ஆவது வருட விளையாட்டு விழா;

சேலம் எம்மீஸ் சிறப்பு பள்ளி மற்றும் கமலம் மறுவாழ்வு மையம் நடத்திய 11 ஆவது வருட விளையாட்டு விழா கமலம் மறுவாழ்வு மைய வளாகத்தில் நடைபெற்றது. இதில் ஓட்டப்பந்தயம், இசை நாற்காலி, பந்து எறிதல், குண்டு எறிதல், சக்கர நாற்காலி ஓட்டுதல், பூ கோர்த்தல் போன்ற பல்வேறு விளையாட்டுகள் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக ஸ்ரீ செல்வ மாளிகை மார்க்கெட்டிங் மேனேஜர் மணிகண்டன், மற்றும் ஜெயபிரகாஷ், பள்ளியின் தாளாளர் ஹேமா பிரைட் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ், பதக்கம், […]

அருள்மிகு ஸ்ரீ இருசாயி ஸ்ரீ முனியப்பன் சுவாமி திருக்கோவில் புனராவர்த்தன ஜீர்ணோத்தாரண மஹா கும்பாபிஷேக விழா;

சேலம் மாவட்டம் நெய்க்காரப்பட்டி அருள்மிகு ஸ்ரீ இருசாயி ஸ்ரீ முனியப்பன் சுவாமி திருக்கோவில் புனராவர்த்தன ஜீர்ணோத்தாரண மஹா கும்பாபிஷேக விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக விழாவில் மங்கல இசை நான்காம் கால துவார பூஜை, வேதிகாபூஜை, ஸ்பர்ஸாஹுதி மகா பூர்ணாஹீதி, கடம் புறப்பாடு ஸ்ரீ இருசாயி, முனியப்பன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் மகா தீபாராதனை சிறப்பு அலங்காரத்துடன் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்துகொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கினார்கள். […]

திருவாலங்காடு கமலத்தேர் பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர்;

திருத்தணி முருகன் கோயிலின் உபகோயிலான திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் ஆலயத்தில் கடந்த 15ஆம் தேதி பங்குனி உத்திரபெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.  தினசரி சோமாஸ்கந்தர் பெருமான் சிங்க வாகனம். புலி வாகனம். உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி. காலை மாலை இருவேளைகளில் வீதி உலா வந்து பக்தர்கள் காட்சி அளித்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கமலத் தேர். தேரோட்டம் நேற்று காலையில் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு காலையில் மூலவர் சிவபெருமான் கடவுளுக்கு சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட கமலத் தேரில் சுவாமி எழுந்தருளினார். மங்கள […]

சுரண்டை எஸ்.ஆா்.ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ் பள்ளி மாணவி மாவட்ட அளவிலான ஓவியப் போட்டியில் சிறப்பிடம்;

தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு நெல்லை மாவட்ட அறிவியல் மையத்தில், “நிலையான எதிா் காலத்திற்கு அறிவியல்” என்ற தலைப்பில் ஓவியப் போட்டி நடந்தது. இதில் 6 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகள் மொத்தம் 20 பள்ளிகளிலிருந்து 92 போ் கலந்து கொண்டனா். சுரண்டை எஸ் .ஆா். ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ் பள்ளி 6ம் வகுப்பு மாணவி சாத்விகா சிறப்பான முறையில் ஓவியம் வரைந்து சிறப்பிடம் பெற்றுச் சாதனை படைத்தாா். சாதனை படைத்த மாணவிக்கு நெல்லை அறிவியல் மையம் சாா்பில் சான்றிதழ் மற்றும் புத்தகங்கள் பாிசாக […]

ஏரல் தாலுகா அலுவலகத்தில் மக்களவைத் தேர்தல் ஆலோசனைக் கூட்டம்- பல்வேறு அரசு துறை அதிகாரிகள் பங்கேற்பு;

ஏரல் தாலுகா அலுவலகத்தில் பல்வேறு அரசு துறை அதிகாரிகளுக்கான  மக்களவைத் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் துவங்கப்படும் நிலையில் தேர்தலுக்கான முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி உத்தரவின்படி ஏரல் தாலுகா அலுவலகத்தில் பல்வேறு அரசு துறை அதிகாரிகளுக்கான  மக்களவைத் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஏரல் தாசில்தார் கோபால் தலைமை தாங்கினார். கூட்டத்தில், பொது இடங்களில் அரசியல் கட்சி குறித்த சுவர் விளம்பரங்கள், அடையாள […]

கனரா லைஃப் இன்சூரன்ஸ் புதிய கூட்டாண்மை மூலம்வாடிக்கையாளர்களை விரிவுபடுத்த திட்டம்;

கனரா எச்எஸ்பிசி லைஃப் இன்சூரன்ஸ், தமிழ்நாடு கிராம வங்கியுடன் ஓர் செயல்திட்டக் கூட்டாண்மையை அறிவித்துள்ளது. இதன்படி, மாநிலம் முழுவதும் பரவியுள்ள டிஎன்ஜிபி-யின் பிராந்திய கிளை வலையமைப்பு மூலம் பலவிதமான ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களை வழங்குகிறது. ஒவ்வொருவரின் தனிப்பட்ட தேவைகள் மற்றும் விருப்பங்களுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட கனரா எச்எஸ்பிசி லைஃப் இன்சூரன்ஸின் பரந்த அளவிலான ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களில் இருந்து தேர்வு செய்ய இந்த செயல்திட்டக் கூட்டணி வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு திறனளிக்கும். இக்கூட்டாண்மையின் கீழ் டிஎன்ஜிபி-யின் வலுவான 659 கிளைகளை மேம்படுத்துவதன் மூலம், வங்கியின் 60 […]

இந்திய மாயா இயல் பொழுதுபோக்கு சங்கத்தின் சார்பாக  2024-2027 ஆண்டிற்கான சங்க நிர்வாகிகள் தேர்வு;

கோவை மாவட்டம் இந்திய மாயா இயல் பொழுதுபோக்கு சங்கத்தின் சார்பாக  2024-2027ஆண்டிற்கான சங்க நிர்வாகிகள் தேர்வு கோவை சவுரிய பாளையத்தில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட  மாயாஜால நிபுணர்கள் கலந்து கொண்டு வாக்களித்தனர். புதிய சங்க நிர்வாகிகளாக தலைவர்நந்தகுமார்,பொதுச் செயலாளர்பிரகாஷ் சவுகூர்,துணைத் தலைவர்அருண்,இணைச் செயலாளர்பத்மநாதன்,பொருளாளர்மிருணாளினி,மக்கள் தொடர்பு அதிகாரி அமர்,நிர்வாகக் குழு உறுப்பினர்கள்,மணிகண்டன்,பரத் சார்ஜன்ட் அட் ஆர்ம்ஸ் சிரில் வினோத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் கெளரவ ஆலோசகர்களாக பாலசுப்ரமணியம், மேரி செல்வம் நியமிக்கபட்டுள்ளனர் .இந்த தேர்தல்  ராமலிங்கம் மற்றும்  மேரி செல்வம் ஆகியோர் […]

தி இந்து யங் வேர்ல்ட் நிறுவனத்துடன் ஜே.எஸ்.டபிள்யூ பெயின்ட்ஸ் நிறுவனம் இணைந்து நடத்திய மண்டல அளவிலான ஓவியப் போட்டி ‘ஃபியூச்சர்ஸ்கேப்ஸ்’,

சேலம் ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளியில் நடைபெற்றது.பள்ளியளவில் 7000  மாணவர்கள்  பங்குப்பெற்ற நிலையில்,210 மாணவர்கள் மட்டுமே மண்டல  அளவில்  தேர்ச்சி பெற்றனர். போட்டியில் மொத்தம் 6 மாவட்டங்களில்இருந்து 160 மாணவர்கள் கலந்து கொண்ட நிலையில் எம் பள்ளி மாணவர்கள்  சப்-ஜூனியர் பிரிவில் மூன்றாம் வகுப்பைச் சேர்ந்த தியா எம்.வி. மூன்றாம் பரிசையும்  மற்றும் ஐந்தாம் வகுப்பைச் சேர்ந்த இனியா எம்.எஸ். ஆறுதல் பரிசையும் பெற்றனர்.மேலும் இந்நிகழ்ச்சிக்கு  சிறப்பு விருந்தினராக வருகைத்தந்தவர்உளவியல்  வல்லுநர்   மஞ்சு ஸ்ரீ மற்றும்சைதன்யா பள்ளியின் முதல்வர்  மாலதி ராஜா அவர்களும் சிறப்பு விருந்தினராக […]