விழுப்புரம் வடக்கு மாவட்டம் செஞ்சி தனியார் திருமண மண்டபத்தில் ஆரணி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்டசெஞ்சி சட்டமன்ற தொகுதி திமுக நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி அமைச்சர் செஞ்சி மஸ்தான் தலைமையில் நடைபெற்றது. இதில் பாராளுமன்ற திமுக வேட்பாளர் M.S.தரணி வேந்தனை விழுப்புரம் வடக்கு மாவட்ட இந்திய கூட்டணி சார்பில் வரவேற்று அறிமுகம் செய்து வைத்தார். நிகழ்ச்சியில் அமைச்சர் செஞ்சி மஸ்தான், ஆரணி பாராளுமன்ற திமுக வேட்பாளர் M.S.தரணி வேந்தனை சுமார் 3 லட்சம் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்று கழக நிர்வாகிகளுக்கு கூறுகின்றனர். […]
விழுப்புரம் வடக்கு மாவட்டம் இந்திய கூட்டணி சார்பில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆரணி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் M.S தரணி வேந்தனை அறிமுகம் செய்து வைத்தார்;
சுரண்டை எஸ்.ஆா்.ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ் பள்ளி மாணவி மாவட்ட அளவிலான ஓவியப் போட்டியில் சிறப்பிடம்;
தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு நெல்லை மாவட்ட அறிவியல் மையத்தில், “நிலையான எதிா் காலத்திற்கு அறிவியல்” என்ற தலைப்பில் ஓவியப் போட்டி நடந்தது. இதில் 6 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகள் மொத்தம் 20 பள்ளிகளிலிருந்து 92 போ் கலந்து கொண்டனா். சுரண்டை எஸ் .ஆா். ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ் பள்ளி 6ம் வகுப்பு மாணவி சாத்விகா சிறப்பான முறையில் ஓவியம் வரைந்து சிறப்பிடம் பெற்றுச் சாதனை படைத்தாா். சாதனை படைத்த மாணவிக்கு நெல்லை அறிவியல் மையம் சாா்பில் சான்றிதழ் மற்றும் புத்தகங்கள் பாிசாக […]
ஏரல் தாலுகா அலுவலகத்தில் மக்களவைத் தேர்தல் ஆலோசனைக் கூட்டம்- பல்வேறு அரசு துறை அதிகாரிகள் பங்கேற்பு;
ஏரல் தாலுகா அலுவலகத்தில் பல்வேறு அரசு துறை அதிகாரிகளுக்கான மக்களவைத் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் துவங்கப்படும் நிலையில் தேர்தலுக்கான முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி உத்தரவின்படி ஏரல் தாலுகா அலுவலகத்தில் பல்வேறு அரசு துறை அதிகாரிகளுக்கான மக்களவைத் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஏரல் தாசில்தார் கோபால் தலைமை தாங்கினார். கூட்டத்தில், பொது இடங்களில் அரசியல் கட்சி குறித்த சுவர் விளம்பரங்கள், அடையாள […]
இந்திய மாயா இயல் பொழுதுபோக்கு சங்கத்தின் சார்பாக 2024-2027 ஆண்டிற்கான சங்க நிர்வாகிகள் தேர்வு;
கோவை மாவட்டம் இந்திய மாயா இயல் பொழுதுபோக்கு சங்கத்தின் சார்பாக 2024-2027ஆண்டிற்கான சங்க நிர்வாகிகள் தேர்வு கோவை சவுரிய பாளையத்தில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாயாஜால நிபுணர்கள் கலந்து கொண்டு வாக்களித்தனர். புதிய சங்க நிர்வாகிகளாக தலைவர்நந்தகுமார்,பொதுச் செயலாளர்பிரகாஷ் சவுகூர்,துணைத் தலைவர்அருண்,இணைச் செயலாளர்பத்மநாதன்,பொருளாளர்மிருணாளினி,மக்கள் தொடர்பு அதிகாரி அமர்,நிர்வாகக் குழு உறுப்பினர்கள்,மணிகண்டன்,பரத் சார்ஜன்ட் அட் ஆர்ம்ஸ் சிரில் வினோத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் கெளரவ ஆலோசகர்களாக பாலசுப்ரமணியம், மேரி செல்வம் நியமிக்கபட்டுள்ளனர் .இந்த தேர்தல் ராமலிங்கம் மற்றும் மேரி செல்வம் ஆகியோர் […]
தி இந்து யங் வேர்ல்ட் நிறுவனத்துடன் ஜே.எஸ்.டபிள்யூ பெயின்ட்ஸ் நிறுவனம் இணைந்து நடத்திய மண்டல அளவிலான ஓவியப் போட்டி ‘ஃபியூச்சர்ஸ்கேப்ஸ்’,
சேலம் ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளியில் நடைபெற்றது.பள்ளியளவில் 7000 மாணவர்கள் பங்குப்பெற்ற நிலையில்,210 மாணவர்கள் மட்டுமே மண்டல அளவில் தேர்ச்சி பெற்றனர். போட்டியில் மொத்தம் 6 மாவட்டங்களில்இருந்து 160 மாணவர்கள் கலந்து கொண்ட நிலையில் எம் பள்ளி மாணவர்கள் சப்-ஜூனியர் பிரிவில் மூன்றாம் வகுப்பைச் சேர்ந்த தியா எம்.வி. மூன்றாம் பரிசையும் மற்றும் ஐந்தாம் வகுப்பைச் சேர்ந்த இனியா எம்.எஸ். ஆறுதல் பரிசையும் பெற்றனர்.மேலும் இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வருகைத்தந்தவர்உளவியல் வல்லுநர் மஞ்சு ஸ்ரீ மற்றும்சைதன்யா பள்ளியின் முதல்வர் மாலதி ராஜா அவர்களும் சிறப்பு விருந்தினராக […]
கரூர் மாவட்டம் கிருஷ்ண ராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பறக்கும் படை குழு சரியான ஆவணம் இல்லாமல் கொண்டுவரப்பட்ட பணம் பறிமுதல்;
கரூர் மாவட்டம் 23 கரூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட 136 கிருஷ்ணராயபுரம் (தனி ) சட்டமன்ற தொகுதி பறக்கும் படை குழு (FST1)18.03.2024 பிற்பகல் 1.15 மணி அளவில் கரூர் – திருச்சி செல்லும் நெடுஞ்சாலையில் மணவாசி சோதனை சாவடி அருகே வாகன சோதனை மேற்கொண்ட போது TN 28 BD 1605 (BOLERO Pik-up)எண் கொண்ட வாகனத்தில் திருச்சி மாவட்டம் முசிறி வட்டம் சூரம்பட்டி என்ற முகவரியைச் சேர்ந்த . சஞ்சய் காந்தி என்பவரிடம் ரூ24,000/- மற்றும் திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம், வசந்தபுரம் […]
மதுரை மத்திய சிறையில் சிறைவாசிகளுக்கு சிறு தானிய உணவுப்பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி;
மதுரை மத்திய சிறையில் உள்ள தண்டனை சிறைவாசிகளுக்கு பல்வேறு வகையான தொழில் பயிற்சிகள் அவர்கள் சிறையில் உள்ள போதே வழங்கப்பட்டு வருகிறது அந்த வகையில் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வரும் சிறுதானிய உணவு பொருட்கள் தயார் செய்யப்படும் பயிற்சி வகுப்பு மதுரை மத்திய சிறையில் உள்ள தண்டனை சிறைவாசிகளுக்கு சாஜர் ஹெல்த் எஜுகேஷன் அண்ட் சாரிட்டபிள் டிரஸ்ட் மதுரை மூலம் உதவித்தொகையுடன் 30 நாள் பயிற்சி வகுப்பாக நடைபெறுகிறது அதன் துவக்க நாளான இன்று மதுரை சரக சிறைத்துறை டிஐஜி திரு பழனி […]
குடியிருப்பு பகுதியில் அரசு மதுபான கடை இயங்கி வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து காஞ்சிபுரம்-மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆரம்பாக்கம் பொதுமக்கள் மனு.
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அடுத்த ஆரம்பாக்கம் கிராமத்தில் 250க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். பள்ளி கல்லூரி மாணவர்கள் அருகில் உள்ள படப்பை பகுதியை சுற்றியுள்ள பகுதியை நாட வேண்டிய நிலையில், கடந்த காலங்களில் ஆரம்பாக்கம் கிராம வெளிப்பகுதியில் செயல்பட்டு வந்த அரசு மதுபானக் கடை எண் 4096 வை கடந்த சில நாட்களுக்கு முன்பு கிராமத்திற்குள் இடமாற்றம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனைக் கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் பெண்கள் என பலர் போராட்டம் நடத்திய நிலையில் மணிமங்கலம் காவல்துறையினர் […]
பாஜக முன்பெல்லாம் எம்எல்ஏக்களை தான் சேர்த்து வந்தனர், தற்பொழுது கட்சிளை சேர்த்து வருகின்றனர்-விசிக எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி பேச்சு.
தருமபுரி கிழக்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வெல்லும் சனநாகயம் மாநாட்டின் தீர்மான விளக்க பொதுக்கூட்டம் அரூரில் கிழக்கு மாவட்ட செயலாளர் சி.கே.சாக்கன்சர்மா தலைமையில் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்திற்கு திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி கலந்து கொண்டு, வெல்லும் ஜனநாயக மாநாட்டின் தீர்மானங்கள் குறித்து விளக்கி சிறப்புரை ஆற்றினார். இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் எஸ் எஸ் பாலாஜி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் திருச்சியில் நடைபெற்ற வெல்லும் ஜனநாயக மாநாட்டில் மக்களின் மக்களின் தேவையை உணர்ந்து, மாநில, மத்திய […]
கலைஞர் நூற்றாண்டு விழாதிருவாரூர் மாவட்ட திமுக பொறியாளர் அணி சார்பில் மாபெரும் பேச்சுப்போட்டி;
திருவாரூர் மாவட்ட திமுக பொறியாளர் அணி சார்பில் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான மாபெரும் பேச்சுப்போட்டி நடைபெற்றது. இந்த போட்டிக்கு மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கே கலைவாணன், நகர செயலாளர் வாரை .எஸ். பிரகாஷ் மற்றும் பொறியாளர் அணி தலைவர் ஆர்.வி. எல்.ரவிச்சந்திரன், மாவட்ட அமைப்பாளர் இரா.பிரபாகரன் ஆகியோர் பங்கேற்றனர். தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் கலைஞர் நூற்றாண்டு விழா சிறப்பு நிகழ்வுகளில் திமுக பொறியாளர் அணி சார்பில் மாவட்டம் தோறும் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு இடையேயான பேச்சுப்போட்டி நடைபெற்று வருகிறது. இதன் […]