மெஜெஸ்டிக் ப்ரைடு கேசினோ நிறுவனத்தின் 15 ஆம் ஆண்டு நிறைவு விழா

கோவாவில் புகழ்பெற்ற கேசினோ விளையாட்டு நிறுவனமான மெஜஸ்டிக் ப்ரைடு கடந்த ஜனவரியில் தனது 15 ஆம் ஆண்டை நிறைவு செய்துள்ளது. இதனை கொண்டாடும் விதமாக ஜனவரி மாதம் முழுவதும் பல்வேறு கேளிக்கை நிகழ்ச்சிகளை நடத்தியது. பாலிவுட் நட்சத்திரங்கள், கிரிக்கெட் வீரர்கள், ஸ்டாண்ட்அப் காமெடியன்கள், பாடகர்கள் ஆகியோர் இந்த கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். ஜனவரி முதல் வாரத்தில், பாலிவுட் நடிகை மௌனி ராய் கலந்துகொண்டு ஆட்டம் பாட்டம் என அரங்கத்தை அதிரவிட்டதோடு, தனது கையெழுத்திட்ட டீ ஷர்ட்டுகளை ரசிகர்களுக்கு வழங்கினார். இரண்டாம் வாரத்தில் நடிகை மலைக்கா […]

தெலுங்கு தேசம் கட்சியினர் மறியல்- வாகனங்கள் உடைப்பு- ஆந்திராவில் 144 தடை உத்தரவு;

ஆந்திர மாநிலத்தில் திறன் மேம்பாட்டு கழகத்தில் ஊழல் செய்ததாக முன்னால் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவை சி.ஐ.டி. போலீஸ்சார் கைது செய்தனர். பின்னர் விஜயவாடாவில் உள்ள ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் சந்திரபாபு நாயுடுவை ஆஜர் படுத்தினர். கோர்ட்டில் இருதரப்பு வாதங்கள் முடிந்த பிறகு சந்திரபாபு நாயுடுவை வரும் 22-ந் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து சந்திரபாபு நாயுடுவை ராஜ மகேந்திரபவரத்தில் உள்ள ஜெயிலில் நள்ளிரவு அடைத்தனர். ஜெயிலில் அவருக்கு 7691 கைதி எண் வழங்கப்பட்டது. ஜெயிலில் சந்திரபாபு நாயுடுவுக்கு தனி […]

ஏழைகள் விபத்து காப்பீட்டு திட்டத்துக்கு பிரிமியம் செலுத்த ரூ.92 லட்சம் நிதி;

புதுவை அரசின் பல்வேறு திட்டங்கள், செலவினங்களுக்கு கவர்னர் தமிழிசை ஒப்புதல் அளித்து வருகிறார். கடந்த ஆகஸ்டு 11-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை புதுவை அரசு அனுப்பிய 32 கோப்புக்கு கவர்னர் தமிழிசை ஒப்புதல் அளித்துள்ளார். பிரதமரின் பீமா யோஜனா திட்டத்தின் கீழ் வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் அனைவருக்கும் விபத்து காப்பீடு திட்டத்தின் கீழ் ஆண்டு சந்தா ரூ.92 ¼ லட்சம், எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்துக்கு ரூ.59. லட்சத்து 69 ஆயிரம் மானியம், ஹர்கர்திரங்கா பிரச்சாரத்துக்கு ரூ.47 லட்சம் வழங்க ஒப்புதல் […]

மேற்கு வங்காள பஞ்சாயத்து தேர்தல் – மம்தா பானர்ஜி நாளை மறுதினம் பிரச்சாரம்!!

 மேற்கு வங்காளத்தில் ஜூலை 8-ம் தேதி பஞ்சாயத்து தேர்தல் நடைபெற உள்ளது. 2019 மக்களவை தேர்தலில் வடக்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெறவில்லை கொல்கத்தா: மேற்கு வங்காளத்தில் அடுத்த மாதம் 8-ம் தேதி பஞ்சாயத்து தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், முதல் மந்திரி மம்தா பானர்ஜி பஞ்சாயத்து தேர்தலுக்கான பிரச்சாரத்தை வரும் திங்கட்கிழமை தொடங்குகிறார். வடக்கு வங்காளத்தில் உள்ள கூச் பெஹார் மாவட்டத்தில் பொது பேரணியுடன் தொடங்க உள்ளார். 2019 மக்களவை தேர்தலில் வடக்கு வங்காளத்தில் இருந்து ஒரு தொகுதி கூட திரிணாமுல் […]

வானிலை மையம் எச்சரிக்கை!!

குஜராத்தில் நாளைமறுதினம் கரையை கடக்கும் என எதிர்பார்ப்பு 150 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என எச்சரிக்கை  அரபிக் கடலின் கிழக்கு மத்திய பகுதியில் இந்த மாத தொடக்கத்தில் குறைந்த காற்றழுத்தம் உருவானது. அதன்பிறகு அது கடந்த 6-ந்தேதி புயலாக மாறியது. அந்த புயலுக்கு ‘பிபோர்ஜோய்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. அந்த புயல் வடக்கு திசை நோக்கி கடந்த சில தினங்களாக நகர்ந்து வந்தது. இந்த நிலையில் அது தீவிர புயலாகவும், அதி தீவிர புயலாகவும் அடுத்தடுத்து மாறியது. வடகிழக்கு அரபிக் கடலில் நிலை கொண்டிருக்கும் […]

ஈரோடு மாவட்டஅகில உலக எம்ஜிஆர் பாசறைசார்பாக!!

திருப்பூர் எம்ஜிஆர் பக்தர்கள் பேரவை சார்பாகமறைந்தும் மறையாமலும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கும் புரட்சித் தலைவர் பொன்மனச் செம்மல்பாரதரத்னா எம்ஜிஆர் அவர்களின் 106 -ஆவது பிறந்தநாள் விழா திருப்பூரில்(11-06.2023) ஞாயிற்றுக்கிழமைமிகச் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் சென்னை பெருநகரமுன்னாள்மேயர்  சைதைசா.துரைசாமி அவர்கள்கலந்துகொண்டு எம்ஜிஆர் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்துமலர் தூவிமரியாதை செய்தார். இவ்விழாவில்ஈரோடு மாவட்டஅகில உலக எம்ஜிஆர் பாசறைசார்பாக காசிபாளையம் ராஜமாணிக்கம், சத்தியமங்கலம் மூர்த்தி,ஆசிரியர் சாமுவேல் மனிதநேயம்கே. கோதண்டபாணி ஆகிேயோர் குடும்பத்துடன் கலந்து கொண்டுஉலக எம்ஜிஆர் பேரவை தலைவர்சைதையார் அவர்களுக்கு கிரீடம் சூட்டி பொன்னாடை அணிவித்து […]

 3 ரெயில்கள் மோதி பயங்கர விபத்து- பலி எண்ணிக்கை 261ஆக உயர்வு..,

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹனாகா என்ற இடத்தில் நேற்றிரவு கோர மண்டல் மற்றும் பெங்களூரு ரெயில்களின் பெட்டிகள் அருகில் தண்டவாளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு ரெயிலுடன் மோதி நொறுங்கின. இவ்வாறு 3 ரெயில்கள் அடுத்தடுத்து மோதியதால் அந்த பகுதி முழுவதுமே அதிர்ந்தது. சில நிமிடங்களுக்குள் அரங்கேறிய இந்த விபத்தால் அந்த பகுதி முழுவதும் பெரும் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது. விபத்து குறித்து தகவலறிந்ததும் தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உள்ளூர் மக்கள் துணையுடன் மீட்புப் […]

இன்று இரவு வானில் தோன்றும் அபூர்வ நிகழ்வு!

சில நேரங்களில் ஒரே நேர்கோட்டில் கிரகங்கள் வரிசை கட்டி நிற்கும் அதிசய நிகழ்வு அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது. இன்று இரவு சந்திரன், வெள்ளி மற்றும் செவ்வாய் கிரகங்கள் ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் நிகழ்வு வானில் தோன்றுகிறது.  நவகிரகங்களில் சூரியன், சந்திரன், குரு, சுக்கிரன், புதன், சனி, செவ்வாய் ஆகிய கிரகங்களை வானில் பார்க்க முடியும். சூரிய உதயத்திற்கு முன்பு அதிகாலையில் விடிவெள்ளி தென்படும். மாலை நேரத்தில் சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு சந்திரன், வியாழன், சுக்கிரன், செவ்வாய் ஆகிய கிரகங்களை கண்களால் பார்க்க முடியும். சில […]

கர்நாடகா சட்டசபை தேர்தல்: பிரதமர் மோடி-சோனியா நாளை போட்டி பிரசாரம் 

பிரதமர் மோடி கர்நாடகத்தில் 3 நாட்கள் முகாமிட்டு சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட உள்ளார். பிரதமர் மோடியின் தொடர் பிரசாரத்தால் பா.ஜனதாவுக்கு ஆதரவான அலை மக்களிடையே வீசுவதாக கூறப்படுகிறது. பெங்களூரு: 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் பிரசாரம் 8-ந்தேதியுடன் நிறைவு பெறுகிறது. பிரசாரத்துக்கு 3 நாட்களே இருப்பதால், தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த தேர்தலில் ஆளும் பா.ஜனதா வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக பா.ஜனதா […]

20 அடி தூரம் தூக்கி வீசப்பட்ட வாகனம்..

20 அடி தூரம் தூக்கி வீசப்பட்ட வாகனம்… மாவோயிஸ்ட் தாக்குதலில் 10 போலீசார் பலி.. அதிர்ச்சி பின்னணி  P போலீஸ் வாகனம் வரும் வழியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்து சிதறியது. உளவுத்துறை அளித்த தகவலின்படி அப்பகுதியில் போலீசார் ரோந்து சென்றுள்ளனர். ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தார் மாவட்டம், தண்டேவாடா பகுதியில் மாவோயிஸ்டுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வரும் காவல்துறையை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. போலீஸ் வாகனம் வரும் வழியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்து சிதறியது. இதில் 10 […]