ஜப்பான் பிரதமர் புமியோலின் இலங்கை பயணம் திடீர் ரத்து.

ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, இந்தியாவில் நடக்கும் ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்றுள்ளார். அவர் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு ஒரு நாள் பயணமாக செல்ல திட்டமிட்டிருந்தார். இந்த நிலையில் ஜப்பான் பிரதமரின் இலங்கை பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவரது பயண ரத்துக்கான காரணம் குறித்தும் தெரிவிக்கப்படவில்லை. சமீபத்தில் இந்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங், இலங்கைக்கு பயணம் மேற்கொள்ள இருந்த நிலையில் அப்பயணம் தள்ளி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரே ஆண்டில் 777 திரைப்படங்கள் பார்த்து கின்னஸ் சாதனை படைத்த சினிமா ஆர்வலர்;

சமீபகாலமாக பல்வேறு துறைகளிலும் கின்னஸ் சாதனை படைப்பவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே வருகிறது. அந்த வகையில் சினிமா ஆர்வலர் ஒருவரும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளார். அமெரிக்காவை சேர்ந்த சாக்ஸ்வோப் என்பவர் கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை முதல் 2023 ஜூலை வரையிலான ஒரு ஆண்டில் மட்டும் மொத்தம் 777 திரைப்படங்கள் பார்த்து கின்னஸ் சாதனையை படைத்துள்ளார். 32 வயதான இவர் ஒவ்வொரு வருடமும் சராசரியாக 100 முதல் 150 படங்கள் வரை தியேட்டரில் பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கின்னஸ் சாதனை படைப்பதற்காக அங்குள்ள ரீகல் […]

அமெரிக்காவை நரகத்தை நோக்கி நகர்த்துகிறார் பைடன்: டொனால்ட் டிரம்ப் விமர்சனம்.

அமெரிக்காவின் 45-வது அதிபராக 2017-இல் இருந்து 2021 வரை பதவியில் இருந்தவர் குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்ட் டிரம்ப் (77). அமெரிக்காவில் 2024-இல் மீண்டும் அதிபர் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், தற்போதைய அதிபரான ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடனும், அவருக்கு போட்டியாக களமிறங்க துடிக்கும் டொனால்ட் டிரம்பும் ஒருவரையொருவர் சமீப காலமாக கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். சில நாட்களுக்கு முன் ஒரு வழக்கில் சிறை சென்று சில மணி நேரங்களில் பிணையில் வெளி வந்தார் டொனால்ட் டிரம்ப். அப்போது சிறைச்சாலை விதிமுறைகளின்படி […]

11 வயது சிறுமி மீது ஆசிட் வீசிய மற்றொரு சிறுமி; விபரீதமான சிறுமிகள் சண்டை.

அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் உள்ள டெட்ராய்ட் நகரில் அதிர்ச்சி தரும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள வெர்னர் ஆரம்ப நிலை பள்ளி மைதானத்தில் குழந்தைகள் சண்டையின்போது 12-வயது சிறுமி மற்றொரு 11-வயது சிறுமியின் மீது ஆசிட் ஊற்றி உள்ளார். ஜூலை 9ஆம் தேதி  டியரா   சம்மர்ஸ் எனும் 11 வயது சிறுமி தன் இளைய சகோதரிகளுடனும், உறவுக்கார சிறுமிகளுடனும் பூங்காவில் விளையாடி கொண்டிருந்திருக்கிறாள். அப்போது, அவளை விட மூத்த ஒரு அடையாளம் தெரியாத சிறுமிக்கும், டியராவின் உறவுக்கார சிறுமி ஒருவருக்குமிடையே சண்டை ஏற்பட்டுள்ளது.அந்த அடையாளம் தெரியாத சிறுமிக்கு […]

சிங்கப்பூர்- தமிழ்நாடு இடையேயான தொடர்பு ஆயிரம் ஆண்டுக்கும் மேலானது- மு.க.ஸ்டாலின் பெருமிதம்!!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலிலுக்கு தமிழக பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. சிங்கப்பூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று முதலீட்டாளர்களை சந்தித்து பேசினார். மேலும், சிங்கப்பூர் முதலீட்டாளர்கள் மாநாட்டிலும் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சி முடிந்ததும் சிங்கப்பூர் வாழ் தமிழர்கள் ஏற்பாடு செய்துள்ள கலாச்சார சந்திப்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். கலாச்சார சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலிலுக்கு தமிழ் அமைப்புகள் சார்பில் தமிழக பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- திராவிட இயக்கத்தால் […]

இந்தியாவில் நடைபெறும் உலக கோப்பை போட்டியை காண வாருங்கள்- ஆஸ்திரேலிய பிரதமருக்கு மோடி அழைப்பு.,,

இந்தியா-ஆஸ்திரேலியாவுக்கு இடையே உறவு டி20 கிரிக்கெட் போல அடுத்தக்கட்டத்துக்கு சென்றுள்ளது. சிட்னி: 10 அணிகள் பங்கேற்கும் 13-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) அக்டோபர் 5-ந் தேதி முதல் நவம்பர் 19-ந் தேதி வரை இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. இந்த நிலையில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை காண இந்தியா வருமாறு ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானிசுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். ஆஸ்திரேலியா சென்றுள்ள அவர் இது தொடர்பாக சிட்னியில் நிருபர்களிடம் கூறியதாவது:- இந்தியா-ஆஸ்திரேலியாவுக்கு இடையே உறவு […]

5 நாட்கள் சண்டைக்கு பிறகு இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே போர் நிறுத்தம்  

இரு தரப்புக்கும் 5 நாட்களாக சண்டை நடந்து வந்த நிலையில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. சண்டையை முடிவுக்கு கொண்டு வர இஸ்ரேலுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது. இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. இதற்கிடையே பாலஸ்தீனிய ஆயுத குழுவின் தலைவர் காதர் அதானென், கடந்த 2-ந் தேதி இஸ்ரேல் சிறையில் உயிரிழந்தார். இதையடுத்து காசா முனையில் இருந்து இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் ஆயுதக் குழுவை குறிவைத்து இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில் 30 பேர் உயிரிழந்தனர். […]

கனடாவில் பயங்கர காட்டுத்தீ- 13 ஆயிரம் பேர் வெளியேற்றம் 

கொளுந்து விட்டும், வேகமாகவும் தீ பரவி வருகிறது. காட்டுத் தீயில் 1458 ஹெக்டேர் பகுதி எரிந்து நாசமாகி இருக்கிறது. கனடா நாட்டில் உள்ள ஆல்பர்ட்டா பகுதியில் பயங்கர காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. கொளுந்து விட்டும், வேகமாகவும் தீ பரவி வருகிறது. இதனால் பல அடி உயரத்துக்கு புகை மண்டலம் எழும்பி உள்ளது. காட்டுத் தீயில் 1458 ஹெக்டேர் பகுதி எரிந்து நாசமாகி இருக்கிறது. தீயை அணைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி வருகிறார்கள். காட்டுத் தீயில் சிக்கி ஏராளமான […]

சூடானில் இருந்து 3,862 இந்தியர்கள் மீட்பு 

சூடானில் போர் முனையில் சிக்கி தவிக்கும் தங்கள் நாட்டினரை மீட்கும் முயற்சியில் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் ஈடுபட்டு வருகின்றன. இந்திய விமானப் படை விமானம் மூலம் 47 இந்தியர்கள் தாயகம் திரும்பி உள்ளனர். கார்ட்டூம்: சூடான் நாட்டில் கடந்த மாதம் 15-ந்தேதி முதல் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. சூடானில் போர் முனையில் சிக்கி தவிக்கும் தங்கள் நாட்டினரை மீட்கும் முயற்சியில் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் ஈடுபட்டு வருகின்றன. ஆபரேஷன் காவேரி என்ற பெயரில் இந்தியர்களை மத்திய அரசு மீட்டு வருகிறது. […]

இங்கிலாந்து மன்னர் சார்லஸ் முடிசூட்டு விழாவுக்கு பிரமாண்ட ஏற்பாடுகள்

இங்கிலாந்து மன்னர் சார்லஸ் முடிசூட்டு விழாவுக்கு பிரமாண்ட ஏற்பாடுகள்  கோலாகல விழாவை காண ஒட்டு மொத்த இங்கிலாந்தும் இப்போதே தயாராகி வருகிறது. விழாவில் இங்கிலாந்து மன்னர் சார்லசை அழைத்து செல்வதற்காக பாரம்பரியமிக்க சாரட்டு வண்டி மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது. லண்டன்: சினிமாவில் தான் மன்னர் ஆட்சி, பிரமாண்டமான அரண்மனை, குதிரை பூட்டிய சாரட் வண்டி போன்ற காட்சிகளை நாம் பார்க்கலாம். ஆனால் இங்கிலாந்து நாட்டில் இந்த காலத்திலும் பாரம்பரியமிக்க இது போன்ற காட்சிகள் நிஜத்தில் அரங்கேறி வருவது பெருமைப்பட கூடிய விஷயம். முடியாட்சி முறை […]