பயணி ஒருவரை காலி மதுபாட்டிலால் ஒருவர் தாக்குவது போன்ற காட்சியும் காணப்பட்டது. குயின்ஸ்லாந்தில் இருந்து ஆஸ்திரேலியாவின் வடக்கு பகுதிக்கு சென்ற விமானத்தில் நடந்தது உறுதி படுத்தப்பட்டது. விமானத்தில் பெண் உள்பட சிலர் எழுந்து நிற்பதும், அவர்கள் ஒருவருக்கொருவர் ஆவேசமாக பேசிக்கொள்வதும், குடுமிப்பிடி சண்டையில் ஈடுபடுவதுமான வீடியோ ஒன்று ஆஸ்திரேலிய சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. வீடியோவில் ஹைலைட்டாக பயணி ஒருவரை காலி மதுபாட்டிலால் ஒருவர் தாக்குவது போன்ற காட்சியும் காணப்பட்டது. இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியதை தொடர்ந்து இதுபற்றி விசாரிக்க அதிகாரிகள் உத்தரவிட்டனர். […]
விமானத்தில் பயணிகள் குடுமிப்பிடி சண்டை
சூடானில் தவிக்கும் இலங்கை மக்களை மீட்க உதவி- இந்தியாவுக்கு இலங்கை பாராட்டு
உள்நாட்டுப்போர் நடந்து வரும் சூடானில் இலங்கை மக்கள் 30 பேரும் தத்தளித்து வருகின்றனர் இந்தியா ஆதரவுக்கரம் நீட்ட முன் வந்துள்ளது. கொழும்பு: உள்நாட்டுப்போர் நடந்து வரும் சூடானில் இலங்கை மக்கள் 30 பேரும் தத்தளித்து வருகின்றனர். அவர்களை அங்கிருந்து பத்திரமாக மீட்டுக்கொண்டு வருவதற்கு இந்தியா உதவிக்கரம் நீட்டுகிறது. இதற்காக இந்தியாவை இலங்கை மனதார பாராட்டி உள்ளது. இதையொட்டி இலங்கை வெளியுறவு மந்திரி அலி சப்ரி டுவிட்டரில் கூறி இருப்பதாவது:- சூடானில் தவித்து வருகிற இலங்கை மக்களின் நிலை குறித்து உன்னிப்பாக கவனித்து வருகிறோம். அவர்களைப் […]
சிறுத்தையை அறைந்த ராட்சத பல்லி
காட்டின் பயங்கர விலங்குகளில் ஒன்றான சிறுத்தையை, சிறிய விலங்கான பல்லி அறைவது போன்ற காட்சி வைரலாகி வருகிறது. காட்டில் நிற்கும் ராட்சத பல்லி ஒன்றை வேட்டையாடுவதற்காக சிறுத்தை அதன் அருகே செல்கிறது. டுவிட்டரில் தி பிகென் என்பவர் பகிர்ந்துள்ள வீடியோவில் காட்டின் பயங்கர விலங்குகளில் ஒன்றான சிறுத்தையை, சிறிய விலங்கான பல்லி அறைவது போன்ற காட்சி வைரலாகி வருகிறது. அதாவது, காட்டில் நிற்கும் ராட்சத பல்லி ஒன்றை வேட்டையாடுவதற்காக சிறுத்தை அதன் அருகே செல்கிறது. அப்போது அந்த பல்லி தனது வாலை சுழற்றி பளார் […]
சிங்கப்பூர் செயற்கை கோளுடன் விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி.-சி55 ராக்கெட்
பூமி ஆய்வு, இயற்கை பேரிடர் கண்காணிப்பு உள்ளிட்ட பல்வேறு தகவல்களை பெற முடியும். இதற்கு முன்பு 2015-ம் ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி டெலியோஸ்-1 செயற்கைக்கோள் ஏவப்பட்டது. ஸ்ரீஹரிகோட்டா: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) இந்தியாவிற்கு தேவையான செயற்கை கோள்கள் மட்டுமின்றி, வணிக ரீதியிலான வெளிநாட்டு செயற்கைக்கோள்களையும் விண்ணில் செலுத்துகிறது. அந்த வகையில் சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த செயற்கைக்கோளை விண்ணில் ஏவுவதற்காக, இஸ்ரோவின் என்.எஸ்.ஐ.எல். நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. சிங்கப்பூர் நாட்டுக்குச் சொந்தமான டெலியோஸ்-2 எனும் பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள், இஸ்ரோவின் […]
சூடானில் ராணுவம், துணை ராணுவம் மோதல் – பலி எண்ணிக்கை 413ஆக அதிகரிப்பு
சூடானில் இருக்கும் இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி இந்திய தூதரகம் அறிவுறுத்தியது. சூடானின் சுகாதார அவசரகால இயக்கங்களுக்கான மையத்தின் அமைச்சகம் வெளியிட்ட தகவலின் அடிப்படையில் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. ராணுவ ஆட்சி நடந்து வரும் சூடானில் ராணுவத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் ஆர்.எஸ்.எப். என்ற துணை ராணுவ படையே ஈடுபட்டு வருகிறது. தலைநகரான கார்டோமில் உள்ள அதிபர் மாளிகை மற்றும் சர்வதேச விமான நிலையத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக சமீபத்தில் துணை ராணுவ படை அறிவித்தது. இதனால் கார்டோமில் ராணுவத்துக்கும், துணை ராணுவ படையினருக்கும் […]
ஸ்பேஸ் எக்சின் பிரமாண்ட ராக்கெட் சோதனை தோல்வி
நிலவுக்கும், செவ்வாய் கிரகத்துக்கும் மனிதா்கள் மற்றும் பொருள்களை அனுப்பும் நோக்கில் ஸ்டாா்ஷிப் ராக்கெட்டை ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனம் உருவாக்கியுள்ளது. ராக்கெட்டின் பலகட்ட சோதனைகளில் வெற்றி, தோல்வி இரண்டையும் ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனம் சந்தித்தது நினைவுகூரத்தக்கது. விண்வெளிக்கு மனிதா்களை அழைத்து செல்லக்கூடிய, மீண்டும் பயன்படுத்தத்தக்க ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனத்தின் பிரமாண்ட ‘ஸ்டாா்ஷிப்’ ராக்கெட்டை முதல்முறையாக விண்ணில் செலுத்தும் சோதனை தோல்வி அடைந்தது. அமெரிக்க தொழில் அதிபா் எலான் மஸ்குக்கு சொந்தமான ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ள ஸ்டாா்ஷிப் ராக்கெட், இதுவரை தயாரிக்கப்பட்டதிலேயே மிகவும் பிரமாண்டமான, அதிக எடையை சுமந்து செல்லக்கூடிய ராக்கெட் […]
துபாய் நாட்டில் தீ விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு
துபாய் நாட்டில் தீ விபத்தில் உயிரிழந்த கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள ராமராஜபுரத்தை சேர்ந்த முகமது ரபீக் மற்றும் இமாம் காசிம் ஆகிய இருவரின் உடல் சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டது.இதற்கு அமைச்சர் செஞ்சி மஸ்தான் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி10 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை இரண்டு குடும்பத்தினருக்கும் வழங்கினார். இந்த நிகழ்வில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் மற்றும் சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன் ஆகியோர் உடனிருந்தனர்.
இலவசத்தை நம்பியதால் வீங்கிய உதடு- அமெரிக்க மாடல் அழகியின் அறிவுரை
சில நிமிடத்தில் ஜெசிகாவின் உதடுகள் வீங்கத் தொடங்கி அலர்ஜி ஏற்பட்டது. நேரம் செல்ல செல்ல ஜெசிக்கா புர்கோ உதடுகள் வீங்கிக் கொண்டே இருந்தது. அமெரிக்காவை சேர்ந்தவர் மாடல் அழகி ஜெசிக்கா புர்கோ. இவர் தனது உதட்டை அழகாக்குவதற்காக லிப் பில்லர் எனப்படும் சிகிச்சையை ஒரு மையத்தில் எடுத்து வந்துள்ளார். இதுவரை 6 முறை அந்த சிகிச்சையை எடுத்த நிலையில், அவருக்கு டாக்டர் போன் செய்து தற்போது மார்க்கெட்டில் புதிய லிப் பில்லர் வந்துள்ளது. அதை உங்களுக்கு இலவசமாக தருகிறேன் என கூறி உள்ளார். […]
10 முறை எவரெஸ்ட் சிகரம் ஏறிய வீரர் மரணம்
10 முறை எவரெஸ்ட் சிகரம் ஏறிய வீரர் மரணம்: அன்னபூர்ணா சிகரத்தில் இருந்து இறங்கியபோது உயிரிழப்பு அன்னபூர்ணா சிகரத்தில் மலையேற்ற பயணம் மேற்கொள்வது மிகவும் ஆபத்தானதாக கருதப்படுகிறது. மலையேற்றத்தின்போது இதுவரை 72 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் கூறி உள்ளனர். காத்மாண்டு: நேபாளத்தில் உள்ள அன்னபூர்ணா மலைச்சிகரம் உலகின் 10வது உயரமான மலைச்சிகரம் ஆகும். 8,091 மீட்டர் உயரம் கொண்ட இந்த சிகரத்தில் ஏறி சாதனை படைப்பதற்காக ஏராளமான மலையேற்ற வீரர்கள் நேபாளம் வருகின்றனர். ஆனால் அடிக்கடி பனிச்சரிவு ஏற்படும் என்பதால் இங்கு மலையேற்ற பயணம் […]
சூடானில் வன்முறை – இந்தியர்கள் வெளியே வரவேண்டாம் என இந்திய தூதரகம் வேண்டுகோள்
சூடானில் வன்முறை – இந்தியர்கள் வெளியே வரவேண்டாம் என இந்திய தூதரகம் வேண்டுகோள் சூடான் ராணுவத்துக்கும், துணை ராணுவப் படைக்கும் இடையே மோதல் வெடித்தது. இருதரப்பினர் இடையே துப்பாக்கிச் சூடு நடந்து அப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது. கார்டோம்: சூடான் தலைநகர் கார்டோமில் அந்நாட்டு ராணுவத்துக்கும் துணை ராணுவப்படையினருக்கும் இடையே மோதல் வெடித்தது. இதனால் அப்பகுதியில் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டது. துணை ராணுவக் குழுவினரின் சமீபத்திய நடவடிக்கைகள் ஒருங்கிணைப்பு இல்லாமல் நடந்ததாகவும், அவை சட்டவிரோதமானவை எனவும் ராணுவம் கூறியிருந்தது. இதனால் இரு தரப்பினர் இடையே […]