வேலூர் மாவட்டம் கே வி குப்பம் வட்டம் லத்தேரி கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ பத்மாவதி தாயார் சமேத ஸ்ரீ வெங்கடேச பெருமாள் திருக்கோயிலில் 25ஆம் ஆண்டு திருக்கல்யாண மஹோற்சவ விழா விழாவில் சாமிக்கு அபிஷேகமும் அலங்காரமும் சீர்வரிசை ஊர்வலமும் ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல் கல்யாண வைபோகமும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் புஷ்ப அலங்காரத்துடன் கருட வாகனத்தில் சுவாமி திருவிதி உலாவும் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் வேலூர் மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர், லத்தேரி முன்னாள் துணைத் தலைவர் ரவி […]
அருள்மிகு ஸ்ரீ பத்மாவதி தாயார் சமேத ஸ்ரீ வெங்கடேச பெருமாள் திருக்கோயிலில் திருக்கல்யாண மஹோற்சவ விழா;
மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதியில் புரட்டாசி திருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்
மணலி புதுநகரில் உள்ள அய்யா வைகுண்ட தர்மபதி மிகவும் பிரசித்தி பெற்றது, இங்கு ஆண்டு தோறும் 10 நாள் புரட்டாசி திருவிழா வெகு விமரிசையாக நடை பெறும். இந்த விழா காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது இதையொட்டி அய்யாவின் பக்தர்கள் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திரு நாமக்கொடியை கையில் ஏந்தியவாறு பள்ளியறையை 5 முறையும்,கொடி மரத்தை 5 முறையும் அய்யா அரஹர சிவ என்ற நாமத்தை உச்சரித்தபடி சுற்றி வந்தனர். பின்னர் பதிவலம் வந்து காலை 6.30 மணியளவில் திருநாமக்கொடி ஏற்றப்பட்டது. இரவு 8 மணிக்கு காளை வாகனத்தில் அய்யாபதிவலம் வருகிறார். […]
அரிய மனித முகம் கொண்ட விநாயகர் கோவில்……
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டம் பூந்தோட்டம் அருகிலுள்ள கூத்தனூரில் புகழ்பெற்ற சரஸ்வதி கோயில் உள்ளது. இக்கோவிலுக்கு அருகில் ஒரு கிலோமீட்டர் வடக்கேதிலதர்ப்பணபுரி என்கிற செதலபதி என்ற கிராமம் உள்ளது. இங்கு அருள்மிகு முக்தீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் எங்கும் தரிசிக்க முடியாத வகையில் தும்பிக்கை இல்லாமல், இரண்டு கைகளுடன் விநாயகர் மனித முகத்தில காட்சி தருகிறார். விநாயகர் என்றாலே யானை முகத்தில் தோன்றுவதுதான் அனைவரும் அறிந்தது. மனிதமுக விநாயகர் செதலபதியிலுள்ள முக்தீஸ்வரர் கோவிலில் மட்டுமே விநாயகர் மனித முகத்துடன் பக்தர்களுக்கு காட்சி தந்து அருள் பாலிக்கிறார். […]
அருள்மிகு குளத்தூர் ஐயன் திருக்கோயில் திருவிழா;
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள அரியப்பபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு குளத்தூர் ஐயன் திருக்கோயில் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது அதன்படி புதன்கிழமை குளத்தூர் ஐயனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று கேரளா பிண்ணனி பாடகர்கள் இணைந்து வழங்கிய பிரைட் இன்னிசை கச்சேரியும், வியாழக்கிழமை கணபதி ஹோமம் மதியம் கேரள மாநிலம் குளத்துபுழாவில் இருந்து புனித நீர் எடுத்து வந்து குளத்தூர் ஐயனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது, வெள்ளிக் கிழமை மதியம் அன்னதானம் நிகழ்ச்சியும் மாலையில் பொதிகை சிலம்பாட்ட நிகழ்ச்சியும், இரவு […]
குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா: குடும்பத்துடன் விரதம் தொடங்கும் பக்தர்கள்;
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தென் மாவட்டங்களில் மிகவும் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றாகும். இங்கு நடைபெறும் தசரா திருவிழா தமிழகத்தில் முதலிடமும், இந்தியாவில் 2-வது இடமும் வகிக்கிறது. இந்த ஆண்டு தசரா திருவிழா அடுத்த மாதம் (அக்டோபர்) 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 24-ந்தேதி மகிசா சூரசம்காரம் நடக்கிறது. இதையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் வேடமணிந்து தர்மம் வாங்கி தங்களது வேண்டுதல்களை செலுத்துவார்கள். இதற்காக பக்தர்கள் தங்கள் வசதிக்கு ஏற்ப 7 நாள், 11 நாள், 21 நாள், 31 மற்றும் 41 […]
ஒன்பது நாட்கள் ஒன்பது வடிவங்களில் அம்பிகை;
நவராத்திரியின் ஒன்பது நாட்களும் அம்பிகை 9 வடிவங்களில் வணங்கப்படுகிறாள்.முதல் மூன்று நாட்கள் துர்க்கை அம்சமாக வழிபடப்படுவாள். அடுத்த மூன்று நாட்கள் லட்சுமி அம்சமாக அம்பிகை வழிபடப்படுவாள். இறுதி மூன்று நாட்கள் சரஸ்வதி அம்சமாக அம்பிகை வழிபடப்படுவாள். இந்த ஒன்பது நாட்களும் ஒவ்வொரு நாளும் அன்னை எடுத்த அவதார நோக்கத்துக்கு ஏற்ப அலங்காரம் செய்யப்படும். பாடல், கோலம், நைவேத்தியங்களும் அம்பிகையின் அவதார நோக்கத்தை வெளிப்படுத்துவதாக இருக்கும்.
கொலுவில் ஒன்பது படிகள் அமைப்பதன் நோக்கம்;
மனிதன் எவ்வகையிலேனும் தன்னை உயர்த்திக் கொள்ள வேண்டும். ஆன்மரீதியாக மனிதன் தம்மை படிப்படியாக உயர்த்திக்கொண்டு இறுதியில் இறைவனில் கலக்க வேண்டும். இதுவே மனிதப் பிறப்பின் அடிப்படை தத்துவம். இதை விளக்கும் பொருட்டே கொலுக் காட்சியில் ஒன்பது படிகள் வைத்து அதில் பொம்மைகளை அடுக்கி வழிபடுகிறோம். ஒன்பது படிகள் வைத்து ஒவ்வொரு படியிலும் பின்வருமாறு பொம்மைகளை வைத்து வழிபட வேண்டும். * முதல் படியில் ஓரறிவு உயிர்ப் பொருட்களை உணர்த்தும் புல், செடி, கொடி போன்ற தாவர பொம்மைகள் இருத்தல் வேண்டும். * இரண்டாவது படியில் […]
கிருஷ்ணரின் வாழ்க்கை வரலாறு;
திரேதாயுகத்தில் விஷ்ணு பகவான் ராமாவதாரத்தை முடித்து வைகுண்டம் சென்ற பிறகு பூலோகத்தில் தன்னைத்தானே அரசன் என்று பிரகடனம் செய்துகொண்ட பெரும் அரக்கர்களின் பெருஞ்சுமையை தாங்கிக்கொள்ள முடியாத பூமாதேவி விஷ்ணு பகவானிடம் முறையிட்டபோது அரக்கர்களை அழித்து தர்மத்தை நிலைநிறுத்த நானே யது வம்சத்தில் வாசுதேவரின் மகனாய் பிறந்து பல லீலைகள் புரிந்து வாசுதேவ கிருஷ்ணராய் பூமியில் அவதரிப்பேன் என்று பூமாதேவிக்கு வாக்களிக்கிறார். அதன்படி போஜவம்சத்தை சேர்ந்த உக்கிரசேனனின் மகனான கம்சனின் சகோதரி தேவகிக்கும், யது வம்ச மன்னரான வாசுதேவருக்கும் திருமணம் நடக்கிறது. கம்சனின் சகோதரி தேவகியை […]
திருவாரூர் தியாகராஜர் கோவில்-கருவறை சிறப்பு…
திருவாரூர் தியாகராஜப் பெருமான் கோவிலில் கருவறைச் சுவற்றில் தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, பிரம்மன் ஆகிய உருவங்கள் கல் திருமேனிகளாக உள்ளன. இக்கருவறைச் சுவர்கள் முழுவதும் கல்வெட்டுகளால் நிரம்பியுள்ளன. புற்றிடங் கொண்ட பரம்பொருள் கருவறை சுவர்கள் தூண்களால் சூழப்பட்டு அத்தூண்களுக்கு இடையே தட்சிணாமூர்த்தி, லிங்கோற்பவர் ஆகிய உருவங்கள் சுதைச் சிற்பங்களாக உள்ளன. லிங்கோற்பவரின் இருபுறமும் அன்னமூர்த்தியான பிரம்மனும் வராகமூர்த்தியான விஷ்ணுவும் நின்றுள்ளனர். இது மட்டுமின்றி கருவறை சுவர்களும் கூரைகளும் முழுவதம் ஊசிமுனை இடைவெளியின்றி வண்ண வண்ண ஓவியங்களால் நிரம்பியுள்ளன. திரிபுரதகனம், காம தகனம், காலசம்காரம், கஜசம்காரம், ஜலந்தர […]
திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம்.
திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆவணி மாதத்திற்கான பவுர்ணமி 30-ந் தேதி (புதன்கிழமை) . காலை 10.58 மணிக்கு தொடங்கி மறுநாள் 31-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 7.05 மணி வரை கிரிவலம் செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ள அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பவுர்ணமியையொட்டி வருகிற 30-ந் தேதி சென்னையில் இருந்து 250 பஸ்களும், பெங்களூரு மற்றும் சேலம் மார்க்கத்தில் இருந்து 50 […]