ஆடி என்றவுடன் முதலில் நம் நினைவிற்கு வருவது அம்மன் கோவிலும், வேப்பிலையும்தான். சாகை வார்த்தல், கூழ் ஊற்றுதல் என அனைத்து அம்மன் ஆலயங்களிலும் கூட்டம் அலைமோதும். கிராமப்புறங்களில் உள்ள வீடுகளில் வேப்பிலை தோரணத்தையும் காணலாம். ஆடி மாதம் என்றாலே அம்மன் தானா, மற்ற தெய்வங்கள் இல்லையா? எல்லா மாதங்களிலும்தான் வெள்ளிக்கிழமை வருகிறது; அதென்ன ஆடிவெள்ளிக்கு மாத்திரம் அத்தனை மகத்துவம் என்ற சந்தேகமும் நம் மனதில் தோன்றுகிறது. இந்த சந்தேகத்திற்கு ஜோதிடவியல் ரீதியான விளக்கத்தை காண்போம். கடக ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் காலம் என்பதால் ஆடி […]
ஆடி மாதத்தில் அம்மனுக்கு முக்கியத்துவம் தரக்காரணம் என்ன?
அருள்மிகு ஸ்ரீ எல்லையம்மன் ஆலயத்தில் நடைபெற்ற திருவிழா
வேலூர் மாவட்டம் ,வேலூர் அடுத்த ரங்காபுரத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ எல்லையம்மன் ஆலயத்தில் நடைபெற்ற திருவிழாவில் அம்மனுக்கு அபிஷேகமும் அலங்காரமும் சிறப்பு ஆராதனைகளும், கரக ஊர்வலமும் ,பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சியும் ,பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் வெகு விமரிசியாக நடைபெற்றது .இதில் விழா குழுவினர்கள் ஊர் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு அருள்மிகு ஸ்ரீ எல்லையம்மனை தரிசனம் செய்தனர் .
ஆடி மாதம் முழுவதும் தினமும் மறக்காமல் தீபம் ஏற்றுங்கள்….
ஆடி மாதம் முழுவதும் பெண்கள் தினமும் தீபம் ஏற்றி வழிபட்டால் குடும்பத்தில் லட்சுமி கடாட்சம் ஏற்படும். ஆடி மழைக்காலத்தின் துவக்கமாகும். பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் நோய்க் கிருமிகளைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் வேப்பிலைக்கும் எலுமிச்சைக்கும் உண்டு. எனவே, ஆடி வழிபாடுகளில் இவை இரண்டும் முக்கியத்துவம் பெறுகின்றன. திருமணமாகாத பெண்கள் ஆடி வெள்ளியில் குத்துவிளக்கினை அலங்கரித்து தீபம் ஏற்றி, மானசீகமாக அதில் அம்மனை எழுந்தருளச் செய்து, லலிதா சஹஸ்ரநாமம் பாராயணம் செய்து வழிபட நல்ல கணவன் அமைவார்கள். மேலும், ஆடி வெள்ளிக்கிழமைகளில் கன்யா பூஜை, ராகு கால […]
ஸ்ரீ வேம்புலி அம்மன் கோவிலில் 50வது ஆண்டு ஆடித் திருவிழா
. ஆரணி கோட்டை ஸ்ரீ வேம்புலி அம்மன் கோவில் 50வது ஆண்டு ஆடித் திருவிழா நடைபெற்றது. ஆடித்திருவிழா முன்னிட்டு காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடைபெற்றது. பின்னர் ஆரணி கமண்டல நாக நதியில் இருந்து பூங்கரகம் ஜோடிக்கப்பட்டு ஆரணி பழைய பஸ் நிலையம், மார்க்கெட் ரோடு, கோட்டை மைதானம், காவலர் குடியிருப்பு பகுதி வழியாக கோவிலை வந்தடைந்தது. பின்னர் பகல் 12 மணியளவில் கூழ்வார்த்தல் நடைபெற்றது பக்தர்கள் பொங்கல் வைத்து படையல் வைத்து சுவாமி தரிசனம் செய்தனர். இரவு […]
தூய பனிமய மாதா பேராலய தங்கத்தேர் திருவிழா;வரும் 26-ந் தேதி தொடங்குகிறது :
தூத்துக்குடி தெற்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தில் பெருவிழா ஆண்டு தோறும் ஜூலை மாதம் 26-ந் தேதி முதல் ஆகஸ்டு 5-ந் தேதி வரை 11 நாட்கள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. பெருவிழா அன்று தூத்துக்குடி மாவட்ட மக்கள் அனைவரும் திரளாக வந்து கலந்து கொள்வதால், அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். மேலும், முக்கிய நிகழ்வுகளை கொண்ட ஆண்டுகளில் மட்டும் […]
9 வாரங்கள் “ஊஞ்சல் உற்சவம்”
காளிகாம்பாள் திருத்தலத்தில் ஆடி மாதத்தில் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது. இதில் பக்தர்களின் மனதை மிகவும் மகிழ்ச்சிப்படுத்துவது, அம்பாளுக்கு நடத்தப்படும் `ஊஞ்சல் உற்சவம்’ நிகழ்ச்சியாகும். வெள்ளிக்கிழமை தோறும் இரவு 7 மணிக்கு இந்த ஊஞ்சல் உற்சவம் நடத்தப்படுகிறது.இந்த நாட்களில் இரவு 7 மணிக்கு உற்சவர் அம்பாளை ஊஞ்சலில் வைத்து தாலாட்டுவார்கள். உற்சவர் அம்மன் வீற்றிருக்கும் மண்டபத்தில் இந்த உற்சவம் நடைபெறும். அப்போது சிறப்பு தீபாராதனைகள் நடத்தப்படும். இதில் கலந்து கொண்டு நாம் உற்சவர் அம்பாளை வழிபட்டால், அவள் மனம் மகிழ்ந்து நமது வேண்டுதல்களை எல்லாம் […]
கிருஷ்ண ஜெயந்தி வழிபாடு..,,
நமது பண்டிகைகளில் கிருஷ்ண ஜெயந்திக்கு என்றுமே தனி இடம் உண்டு. தென்னகத்தில் `கோகுலாஷ்டமி’ என்றும், வட இந்தியாவில் `ஜென்மாஷ்டமி’ என்றும் இது அழைக்கப்படுகிறது. எப்போதெல்லாம் உலகத்தில் அதர்மம் தலை தூக்குகிறதோ, அப்போதெல்லாம் பகவான் அவதரிக்கிறார். அந்த வகையில் அதர்மத்தை அழிக்க பகவான் கிருஷ்ணன் பூலோகத்தில் வந்து பிறந்த நாளே கிருஷ்ண ஜெயந்தியாகக் கொண்டாடப்படுகிறது. ஆவணி மாதம் தேய்பிறை அஷ்டமியன்று, ரோகிணி நட்சத்திரத்தில் நள்ளிரவு நேரத்தில் சிறைக்குள் வசுதேவர்-தேவகிக்கு மகனாகக் கிருஷ்ணன் அவதரித்தார். பிறந்தபோது சங்கு, சக்கரம், தாமரை, கதாயுதம் ஏந்திய கைகளுடன் கிருஷ்ணன் காட்சியளித்தான். […]
திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் பவித்ரோற்சவம் தொடக்கம்..,
திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் ஆண்டு முழுவதும் நடக்கும் அர்ச்சனைகள், பூஜைகள், திருவிழாக்களின்போது அதிகாரிகள், அர்ச்சகர்கள், பக்தர்கள் தெரிந்தும், தெரியாமலும் செய்த சில தவறுகளால் ஏற்படுகின்ற தோஷ நிவர்த்திக்காக ஆகம சாஸ்திரப்படி பவித்ரோற்சவம் நடத்துவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான 3 நாள் பவித்ரோற்சவம் தொடங்கியது. அதன் ஒரு பகுதியாக உற்சவர்களான சீதா, ராம, லட்சுமணர் விமான பிரகாரமாக யாக சாலைக்கு கொண்டு வரப்பட்டனர். அங்கு உற்சவர்களுக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம், பால், தயிர், தேன், இளநீர் ஆகிய சுகந்த திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. […]
விருத்தாசலம் விருத்தாம்பிகைஅம்மனுக்கு ஆடிப்பூர திருக்கல்யாண உற்சவம் தொடங்கியது;-
விருத்தாசலத்தில் பிரசித்தி பெற்ற விருத்தாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் உள்ள விருத்தாம்பிகை அம்மனுக்கு ஆண்டு தோறும் ஆடி மாதத்தில் ஆடிப்பூர திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டிற்கான உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி விருத்தாம்பிகை அம்மனுக்கு பல்வேறு விதமான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் உற்சவமூர்த்திகளான விநாயகர், விருத்தாம்பிகை அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கொடி மரத்தின் முன்பு எழுந்தருளினர். தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, விழா கொடியேற்றப்பட்டது. 11 நாட்கள் நடைபெறும் விழாவில் தினசரி சாமிக்கு சிறப்பு […]
ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை 16-ந்தேதி திறப்பு;-
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டு தோறும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடை பெறும். இதுதவிர ஒவ்வொரு மலையாள மாதத்தின் (நிகரான தமிழ் மாதத்தின்) முதல் 5 நாட்களிலும், விஷு, ஓணம் பண்டிகை, பங்குனி உத்திரம் திருவிழா நாட்களிலும் நடை திறக்கப்படும். அதன்படி ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 16-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில், மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி […]