வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம் தண்டலம் கிருஷ்ணாபுரம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ கெங்கை அம்மன் ஆலயத்தில் சிரசு ஏற்றும் திருவிழாவில் சிரசு ஊர்வலமும் ,பொங்கலிடுதலும், கூழ்வார்த்தலும், பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துதல் , கொக்ககளிக்கட்டை , சிலம்பாட்டம் குழுவினர்களின் நிகழ்ச்சிகளும் வெகு விமரிசையாக நடைபெற்றது. இவ்விழாவில் தண்டலம் கிருஷ்ணாபுரம் கிராமம் ஊர் பொதுமக்கள் ,விழா குழுவினர்கள் ,பக்தர்கள் மற்றும் இளைஞர்கள் பலர் கலந்து கொண்டனர். கெங்கை அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற சிரசு ஏற்றும் திருவிழாவில் விழா குழுவினர்களின் சார்பாக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.
கெங்கை அம்மன் ஆலயத்தில் சிரசு ஏற்றும் திருவிழா.,
அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி!!
வேலூர் மாவட்டம் ,வேலூரில் பிரசித்தி பெற்ற அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவின் தொடர்ச்சியாக சிவானந்த லஹரி ஆன்மீக பஜனையை சௌந்தர்ய லஹரி என்னும் குழுவினரால் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற கும்பாபிஷேகம் விழாவினையொட்டி நிலையில் நடைபெற இருக்கும் மண்டல அபிஷேக விழாவினை முன்னிட்டு பக்தர்கள் பஜனை செய்தனர். உமா விஜயசங்கர் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சௌந்தர்ய லஹரி குழுவினர் சுமார் 18-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிவானந்த லஹரி பாடல்களை பாடி மகிழ்ந்தனர் […]
சங்கடஹரா சதுர்த்தியினை முன்னிட்டுஅரசமர பிள்ளையாருக்கு சிறப்பு பூஜைகள்;
தேனி அருகே பழனிசெட்டிப்பட்டியில் அரச மர விநாயகர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த திருக்கோவிலானது மிகவும் பழமை வாய்ந்த திருக்கோவிலாகும். இந்நிலையில சங்கடஹரா சதுர்த்தியினை முன்னிட்டு இந்த திருக்கோவிலில் அரசமர பிள்ளையாருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.விபூதி ,பால், தயிர், இளநீர், பழங்கள், தேன் ,நெய் ,சந்தனம் ,மஞ்சள், பன்னீர் ,திருமஞ்சல் பொடி, அருகம்புல் பொடி மற்றும் 13 வகையான மங்களகரமான பொடிகளைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. அதனை தொடர்ந்து சிறப்பு பூஜைகளும் சிறப்பு ஆராதனைகளும் நடைபெற்றது.இந்த சிறப்பு பூஜையில் பழனிசெட்டிபட்டி ,தேனி உள்ளிட்ட பல்வேறு […]
அருள்மிகு படவேடு ஸ்ரீ எல்லையம்மன் திருக்கோயிலில் மகா கும்பாபிஷேக விழா!!
வேலூர் மாவட்டம் ,காட்பாடி வட்டம் அக்கிரெட்டிபுதூர் (எ) புளியாமரத்தூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு படவேடு ஸ்ரீ எல்லையம்மன் திருக்கோயிலில் மகா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் சிறப்பு யாகங்களும் ,கோ பூஜையும் ,அஷ்டபந்தன கலச புறப்பாடும் ,விமான கலசம் கோபுர நன்னீராட்டு விழா நிகழ்ச்சியில் வண்டரந்தாங்கல் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.பி .ராகேஷ் ,ஒன்றிய குழு உறுப்பினர் வி .சாந்தி வீராசாமி நாட்டாமைதளர்கள் ஜி. சாமிநாதன் ,ஆர் .கோவிந்தசாமி ,மேட்டுக்குடி ஜி. பாண்டு ,தர்மகர்த்தா பி .சிவா, இந்து முன்னணி மாவட்ட […]
அருள்மிகு ஸ்ரீ பவானி அம்மன் ஆலயத்தில் 34 ஆம் ஆண்டு ஆனி மாத தீமிதி திருவிழா நடைபெற்றது.
. சென்னை செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் ஊராட்சியில் பவானி நகரில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு ஸ்ரீ பவானி அம்மன் ஆலயத்தில் 34 ஆம் ஆண்டு ஆனி மாத தீமிதி திருவிழா நடைபெற்றது. இந்த நிகழ்வை முன்னிட்டு கடந்த வியாழக்கிழமை அன்று காலை கணபதி ஹோமம் இதனை தொடர்ந்து வெள்ளிக்கிழமை காலையில் பால்குடம் ஸ்ரீ பவானி நகர் ஸ்ரீ நாகாத்தம்மன் ஆலயத்தில் இருந்து ஸ்ரீ பவானி அம்மன் ஆலயம் வந்தடைந்து ஸ்ரீ பவானி அம்மனுக்கு பாலபிஷேகம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து அம்பாளுக்கு கொடியேற்றத்துடன் பக்தர்களுக்கு […]
அருள்மிகு ஸ்ரீ செல்வ சித்தி விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேக விழா!!
சென்னை போரூர் அடுத்த கொளப்பாக்கம் ஸ்ரீ நாராயணா நகரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ செல்வ சித்தி விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. கும்பாபிஷேக விழா ஏற்பாட்டினை ஆலய திருப்பணி குழுவினர் நாராயணா நகர் பகுதி வாழ் மக்கள், ஆன்மீக அன்பர்கள், உபயதாரர்கள், கிராம பெரியவர்கள் ஆகியோர் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தனர். கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு ஜூன் 25ஆம் தேதி அன்று முகூர்த்த பந்தக்கால் பூஜை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து ஜூலை மூன்றாம் தேதி முதல் கால யாக பூஜை […]
கருங்குழி ஸ்ரீராகவேந்திரா ஸ்வாமிகள் பிருந்தாவனத்தில் சத்யநாரயணபூஜை.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த கருங்குழி ஸ்ரீ ராகவேந்திரா ஸ்வாமிகள் பிருந்தாவனத்தில் ஆனி பெளர்ணமியை முன்னிட்டு யோகபிரவேசம் செய்து பூட்டிய அறையில் 9 ஆண்டுகளுக்கு மேலாக தவத்தில் அமர்ந்திருக்கும் கருங்குழி பிருந்தாவன் சித்தர் யோகிரகோத்தமா பக்தர்களை சந்திக்கும் 110-வது பெளர்ணமி தரிசனம் நடைபெற்றது. காலை 11 மணிமுதல் 12 மணிவரை சேஷபீடத்தில் தியானத்தில் அமர்ந்திருந்த சித்தருக்கு பக்தர்கள் தங்கள் திருகரங்களால் ஓம் நமசிவாய மந்திர உச்சாடனைவுடன் அபிஷேகம் செய்து சித்தரின் அருளையும் ஆசியும் பெற்றனர். அதனை தொடர்ந்து மக்கள் சுபிஷமுடன் வாழ ஞானலிங்கத்திற்கு பூஜை செய்யப்பட்டு ஸ்ரீ ராகவேந்திரா ஸ்வாமிகள் பிருந்தாவனத்தில் யாகம் வளர்த்து […]
அருள் நிறை ஸ்ரீ ஷீரடி சாய்பாபா ஆலயத்தில்14 ஆம் ஆண்டு குரு பூர்ணிமா விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
வேலூர் மாவட்டம் வேலூர் அடுத்த அரியூரில் அமைந்துள்ள அருள் நிறை ஸ்ரீ ஷீரடி சாய்பாபா ஆலயத்தில்14 ஆம் ஆண்டு குரு பூர்ணிமா விழாவில் விசேஷ றபூஜைகள் ,நான்கு வேளை ஆரத்தி, சிறப்பு பஜனை, சாவடி ஊர்வலம், மற்றும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அன்னதான மண்டபத்தில் கோ பூஜையும் ,சத்திய நாராயணா விரத பூஜை , கணபதி ஹோமம் ,லட்சுமி ஹோமம் ,நவகிரக ஹோமம் ஆகிய நிகழ்ச்சிகளில் ஊர் பொதுமக்கள் ,விழா குழுவினர்கள் ,சீரடி சாய்பாபா பக்தர்கள் […]
ஸ்ரீ சந்திரசூடேஸ்வரர் மலைக்கோயில் ராஜகோபுர கும்பாபிஷேகம்-ஹெலிகாப்டரில் மலர்கள் தூவி தீர்த்தம் .,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் 900 ஆண்டுகள் பழமை வாய்ந்ததும் வரலாற்று சிறப்புமிக்கதுமான பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ மரகதாம்பிகை உடனாய ஸ்ரீ சந்திர சூடஸ்வரர் திருக்கோவிலில் புதிதாக கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட ராஜ கோபுரத்திற்கு கும்பாபிஷேகம் வெகு விமர்சியாக நடைபெற்றது. முன்தினம் கணபதி ஓமத்துடன் துவங்கிய மகா கும்பாபிஷேக உற்சவத்தில், நேற்று யாகசாலை பூஜைகள் மற்றும் வான வேடிக்கைகள் வெகு விமர்சையாக நடைபெற்றன இதைத்தொடர்ந்து விழாவின் முக்கிய முக்கிய நிகழ்வான ராஜகோபுர மகா கும்பாபிஷேக வைபவம் நடைபெற்றது. இதில் யாகசாலை பூஜையில் வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் […]
ஸ்ரீசந்திரசேகர சுவாமியின் ஈஸ்வரன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் சிறப்புடன் நடைபெற்றது..,
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி ஸெளராஷ்ட்ர பிராஹ்மண மஹாஜனங்களுக்குச் சொந்தமான ஸ்ரீ சுந்தரராஜப்பெருமாள் கோவில், ஸ்ரீவிசாலாக்ஷியம்பிகா-ஸ்ரீசந்திரசேகர சுவாமியின் ஈஸ்வரன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் சிறப்புடன் நடந்தேறியது. கும்பாபிஷேகத்தையொட்டி, கோவில் முன்பு படித்துறையில் யாகசாலை அமைக்கப்பட்டு பூஜைகள் மங்கள இசையுடன் தொடங்கி திருமுறை பாராயணம், தேவதா அனுக்ஞை, கணபதி பூஜை, வருண பூஜை,மகா கணபதி ஹோமம், தன பூஜை, கோ பூஜை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, தீர்த்த சங்க்ரஹணமும்,திசா ஹோமம், பரிவார தேவதா கலாகர்ஷணம், ரஷா பந்தனம், கும்ப அலங்காரம், யாகசாலை பிரவேசம், பூர்ணாஹுதி, தீபாராதனைகளும், […]