திருப்பூர் அருகே வீரபாண்டி பகுதியில் உள்ள ஆத்தாள் தோட்டத்தில் தியாகி சுந்தராம்பாள் அறக்கட்டளை சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீ சீரடி சாய்பாபா திருக்கோவில் நூதன அஷ்ட பந்த மகா கும்பாபிஷேக விழா கணபதி ஹோமம், கோ பூஜையுடன் துவங்கியது, தொடர்ந்து ஆலயத்தில் விமான கோபுரங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டன,தொடர்ந்து பூஜையில் பஞ்சகாவிய பூஜை,யாகசாலை பிரவேசம், திக் பூஜை,மகா பூர்ணாஹூதி,மகாதீபாராதனையும் நடைபெற்றது, அதனைத் தொடர்ந்து பூஜையில் அருட் கலசங்கள் வலம் வருதல் நிகழ்ச்சியும்,பிம்பசுத்தி ரக்ஷா பந்தன் நடைபெற்றது தொடர்ந்து,ஸ்ரீ சீரடி சாய்பாபா கோவில் ஸ்தூல லிங்க விமான […]
ஸ்ரீ சீரடி சாய்பாபா திருக்கோவில் நூதன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்.,
123 ஆண்டுகளுக்கு பின் ஸ்ரீஅரியநாதசுவாமி கோவில் கும்பாபிஷேக விழா!
ஸ்ரீ அரியநாதசுவாமி கோவில் கும்பாபிஷேக விழா! திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி தாலுகா அரிகேசவநல்லூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ அரியநாதர் சுவாமி திருக்கோவில் மகாகும்பாபிஷேக விழா அடுத்த மாதம் (ஜூலை) 5ஆம் தேதி நடைபெற இருக்கிறது. முன்னதாக ஜூலை மாதம் 2ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 5.30 மணிக்கு ஸ்ரீ மகா கணபதி ஹோமம், ஸ்ரீ நவகிரக ஹோமம், ஸ்ரீ மகாலட்சுமி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. 3ஆம் தேதி திங்கள்கிழமை காலை 7.15 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜையும், 4ஆம் […]
சிவபெருமானுக்கு உகந்த 5 வகையான சிவராத்திரி விரதங்கள்…
சிவராத்திரி என்பது சிவனுக்கான இரவு. அந்த சிவராத்திரி ஐந்து வகையாக கூறப்பட்டுள்ளது. 1. நித்திய சிவராத்திரி: ஒவ்வொரு மாதமும் கிருஷ்ணபட்ச, சுக்லபட்ச சதுர்த்தசிகளில் வருவது நித்திய சிவராத்திரி. இது போல் மாதம் இரண்டாக வரும் நித்திய சிவராத்திரியை தொடர்ந்து 24 முறையும் அனுசரிக்க வேண்டும். 2. பட்ச சிவராத்திரி: தை மாதம் கிருஷ்ணபட்ச பிரதமை முதல் 13 நாட்கள் ஒரு நேரம் மட்டும் உணவு உண்டு 14-ம் நாளான சதுர்த்தசியில் முழு நேர உபவாசம் இருப்பது பட்ச சிவராத்திரி. 3. மாத சிவராத்திரி: ஒவ்வொரு […]
ஸ்ரீ மஹிசாசுரமர்த்தினி திருகோவிலில்-கூட்டு பிராத்தனை நிகழ்ச்சி!
கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் பாபா நகர் பிஎன்டி காலனியில் அமைந்துள்ளது ஸ்ரீ மஹிசாசுரமர்த்தினி திருகோவில் 30 வருடங்களுக்கும் மேலாக பழமைவாய்ந்தக்கோவிலுக்கு அதன் சுற்று வட்டார பகுதியில் இருந்து தினமும் 100க்கனக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். அதனை தொடர்ந்து இக்கோவிலில் உலக நலன் காக்கவும், உலக ஒற்றுமைக் காகவும் இக்கோவிலின் நிறுவனர் பார்வதி அம்மாள் தலைமையில் கூட்டு பிராத்தனை நிகழ்ச்சி நடைபெற்றது இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக சிவசேனா கட்சி மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் மா.முருகன்,ஸ்ரீ விவேகானந்தர் பேரவை நிறுவனர் ஜி.ஆர் ஜலேந்திரன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர் […]
திருமுல்லைவாயல் சிவன் கோவிலில் ஜூலை 6-ந்தேதி கும்பாபிஷேகம்..,
கும்பாபிஷேக விழா ஜூலை 2-ந்தேதி தொடங்குகிறது. 3-ந்தேதி கஜபூஜை, நவகிரக ஹோமம், அங்குரார்ப்பணம் நடக்கிறது. சென்னை வடதிருமுல்லைவாயலில் உள்ள கொடியிடை நாயகி உடனுறை மாசிலாமணீஸ்வரர் கோவிலில் ஜூலை மாதம் 6-ந்தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. கும்பாபிஷேக விழா ஜூலை 2-ந்தேதி தொடங்குகிறது. அன்று காலை 9 மணிக்கு விநாயகர் பூஜை, சங்கல்பம், கோபூஜை, தனபூஜை, மகா கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம் நடக்கிறது. 3-ந்தேதி காலை 9 மணிக்கு கஜபூஜை, நவகிரக ஹோமமும், மாலை 6 மணிக்கு அங்குரார்ப்பணமும் நடக்கிறது. 4-ந்தேதி காலை 8.30 மணிக்கு […]
ஸ்ரீ கங்கை அம்மன் ஆலய வைகாசி கூழ்வார்த்தல் திருவிழா!
சென்னை, மதுரவாயல் அடுத்த வானகரம், மேட்டுகுப்பம், சர்வீஸ் சாலையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கெங்கை அம்மன் ஆலயத்தில் வைகாசி மாத ஆடி திருவிழா சிறப்பாக நடைபெற்றது. காலை ஸ்ரீ கெங்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்து, தீப ஆராதனை நடைபெற்றது. கூழ்வார்த்தல் திருவிழாவை முன்னிட்டு ஆலய மண்டபத்தில் பதிவிளக்கு போடபட்டு, பம்பை உடுக்கை வர்ணிப்பு நடைபெற்றது. அதனை தொடர்ந்து கெங்கை அம்மன் கரகம் ஜோடிக்கபட்டு, காப்பு கட்டும் நிகழ்வு நடைபெற்றது. அதனை தொடர்ந்து கங்கை அம்மன் கரகம் ஆலயத்தில் இருந்து புறப்பட்டு, மேட்டுகுப்பம் சேனியம்மன் கோவிலுக்கு சென்று, பம்பை உடுக்கை வர்ணிப்பு நடைபெற்று, ஆட்டு கிடா பலியிட்டு, அங்கிருந்து கரகம் ஊரை வலம் வந்து மீண்டும் கெங்கை அம்மன் ஆலயம் வந்தடைந்தது. கரகம் ஆலயம் வந்தவுடன், ஆட்டுகிடா பலியிட்டு, கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. கூழ்வார்த்தல் விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனின் அருட்பிரசாதமான கூழ்ழை உண்டு மகிழ்ந்தனர். இரவு கெங்கை அம்மனுக்கு கும்பம் படைக்கபட்டு, கும்ப உணவானது பக்தர்களுக்கு வழங்கபட்டது. அதனை தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. கூழ்வார்த்தல் திருவிழாவை முன்னிட்டு இரவு தெரு கூத்து, நடைபெற்றது.
சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு நாளை முதல் 4 நாட்களுக்கு அனுமதி!!
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பிரதோஷம் மற்றும் வைகாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு வருகிற ஜூன் 1-ந் தேதி முதல் ஜூன் 4-ந் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் மலை ஏறி சாமி தரிசனம் செய்ய வனத்துறையினர் மற்றும் கோவில் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளனர். காலை 7 மணி முதல் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கோவிலுக்கு வருபவர்கள் மலைப்பாதைகளில் உள்ள நீரோடை பகுதிகளில் இறங்கி […]
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா 2-ந்தேதி நடக்கிறது.,
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா வருகிற 2-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. விசாக தினத்தன்று முருகனை வழிபட்டால் ஆண்டு முழுவதும் வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். திருவிழாவை முன்னிட்டு வருகிற 1-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும், 10.30 மணிக்கு உச்சிகால அபிஷேகமும், தீபாராதனையும் நடக்கிறது. மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், இரவு […]
பழனி முருகன் கோவிலில் அலைமோதிய பக்தர்கள்கூட்டம்: 2 மணி நேரம் காத்திருந்து தரிசனம்.
உலக பிரசித்தி பெற்ற ஆன்மிக தலமாகவும், அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடாகவும் பழனி முருகன் கோவில் திகழ்கிறது. இங்கு முருகப்பெருமானை தரிசிக்க தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். குறிப்பாக திருவிழா காலங்களில் காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். இதேபோல் முகூர்த்தம், வாரவிடுமுறை நாட்களிலும் பழனிக்கு பக்தர்கள் வருகை அதிகரித்து காணப்படும். அந்தவகையில் தற்போது கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளதால் வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் நேற்று வாரவிடுமுறை […]
வருதினி ஏகாதசி விரதம் அனுஷ்டித்தால் கிடைக்கும் பலன்கள்.
நாம் செய்ய வேண்டியது என்ன என்பதையும் இங்கு தெரிந்து கொள்ளலாம். வைகுண்ட ஏகாதசிக்கு நிகரான ஒரு ஏகாதசி தினமாக வருதினி ஏகாதசி தினம் இருக்கிறது. வைகாசி மாதத்தில் முருகப் பெருமான் மற்றும் பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜைகள், உற்சவங்கள் நடைபெறும். மற்ற எல்லா மாதங்களில் வரும் ஏகாதேசி தினங்களைப் போலவே, வைகாசி மாதத்தில் வருகின்ற ஏகாதசி தினங்களும் பல சிறப்புகளைக் கொண்டதாக இருக்கின்றன. அப்படி இந்த வைகாசி மாதத்தில் வருகின்ற வைகாசி தேய்பிறை ஏகாதசி தினத்தின் மகிமையை குறித்தும், அந்த தினத்தில் நாம் செய்ய […]