திரவுபதி அம்மன் கோயில்  பால்குட காவடி திருவிழா ஏராளமானோர் பங்கேற்பு

பெருங்கரை திரவுபதி அம்மன் கோயில்  பால்குட காவடி திருவிழா ஏராளமானோர் பங்கேற்பு தஞ்சை மாவட்டம். பாபநாசம் தாலுக்கா, வடக்குமாங்குடி அருகே உள்ள  பெருங்கரை  கிராமத்தில் எழுந்தருளியுள்ள திரவுபதி அம்மன் கோயில்  பால்குட திருவிழா  மிக விமர்சையாக நடைபெற்றது.திரவுபதி அம்மன் கோயில் வைகாசி  உற்சவ திருவிழாவை முன்னிட்டு அகரமாங்குடி அருகே உள்ள பொய்கை ஆற்றங்கரையில் கிராமவாசிகள்,  பெண்கள் பால்குடம், செடில் காவடி  எடுத்து மேள தாளத்துடன் புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தனர் பின்னர் அம்பாளுக்கு  அபிஷேக, ஆராதனை செய்து அம்மனை  வழிபட்டனர். இரவு […]

ரயில்வே தளத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பச்சையம்மன்

வேலூர் மாவட்டம் ,காட்பாடி குடியாத்தம் ரோடு ரயில்வே தளத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பச்சையம்மன் வேப்பமரம் ஒற்றை பனை மரத்தில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு ஸ்ரீ ஜடா முனீஸ்வரர் திருக்கோயிலில் நடைபெற்ற 6 ஆம் ஆண்டு சிறப்பு வழிபாடு விழாவில் சுவாமிக்கு அபிஷேகமும், புஷ்ப அலங்காரமும், விசேஷ பூஜைகளும், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது .இந்நிகழ்ச்சியில் திமுக காட்பாடி தெற்கு பகுதி பிரதிநிதி சீ. நாயுடு பாபு , ஆலய அர்ச்சகர் பாபுஜி சுவாமிகள், ஏ.வி .பாலமுருகன் மற்றும் விழா குழுவினர்கள் ஊர் பொதுமக்கள் […]

சித்ரா பௌர்ணமி முன்னிட்டு திருத்தணி வனதுர்க்கை அம்மன் ஆலயத்தில் 108 பால்குடம் அபிஷேகம்.

திருத்தணி மடம் கிராமத்தில்.எழுந்தருளியுள்ள. ஸ்ரீ வனதுர்க்கையம்மன் ஆலயத்தில். சித்ரா பௌர்ணமி விழா மற்றும் மழை வேண்டி.19 ம் ஆண்டு 108 பால்குட அபிஷேகமும் நடைபெற்றது. பரந்து விரிந்து. தோப்பும் துறவுமாய். மலை சார்ந்த பகுதியில். இயற்கையான இரம்மியத்தோடு எழில் கொஞ்சும் வகையில். அமைந்திருக்கிற இவ்வாலயம். வனம் சார்ந்த பூமி என்பதால் வனதுர்க்கையம்மன் ஆலயம் என்று பக்தர்கள் மூலம் அழைக்கப்படுகிறது. இங்கே ஆண்டுதோறும் தீமிதி திருவிழா. மற்றும் மாதம் ஒரு முறை பௌர்ணமி காலங்களில் அம்மனுக்கு அபிஷேகம. மஞ்சள் காப்பு. சந்தன காப்பு.  ஊஞ்சல் சேவை […]

பொன்னியம்மன் பல்லக்கில் வீதி உலா

வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம் அரும்பருத்தி கிராமத்தில் கிராம தேவதை அருள்மிகு பொன்னியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற தேர் திருவிழா மற்றும் படுகுழி பெருவிழாவில் பொன்னியம்மன் பல்லக்கில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அருளினார் இதில் குழந்தைகளை படுகுழியில் இடும் நேர்த்திக் கடன் நிகழ்ச்சியும் நடைபெற்றது விழாவில் அரும்பருத்தி கிராம மக்கள் விழா குழுவினர்கள் இளைஞர் அணியினர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மெலட்டூர்  திரௌபதி அம்மன் கோயில்  தீமிதி திருவிழா விடையாற்றிவிழாவுடன்   நிறைவு

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா, மெலட்டூர் திரௌபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழா வெகுவிமர்சியாக நடைபெற்றது.  மெலட்டூர்  திரௌபதி அம்மன்  ஆலய தீமிதி திருவிழாவை முன்னிட்டு கடந்த 14ந்தேதி காலையில் கணபதி ஹோமமும், சக்தி பூஜையுடனும் தொடங்கி 11நாட்கள் நடைபெற்றது  தினசரி இரவு அம்மன் பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா காட்சி  நடைபெற்றது. விழாவின் 11வது நாள் முக்கிய நிகழ்ச்சியாக காலை பக்தர்கள் பால்குடம் எடுத்துவரும் நிகழ்ச்சியும் இரவு  பக்தர்கள் தீமிதிக்கும் நிகழ்ச்சியும்   நடைபெற்றது. இதில்  கோயில் அருகே அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில்  ஏராளமான பக்தர்கள் […]

கோபி அருகே உள்ள புஞ்சை துறையம்பாளையம்

கோபி அருகே உள்ள புஞ்சை துறையம்பாளையம் வனப்பகுதியில் உள்ளநவக்கினறுமாதேஸ்வரன் திருக்கோவில் 102-வதுகுண்டம்திருவிழாமிகச் சிறப்பாக நடைபெற்றது.இவ்விழாவில் பூசாரிகள்குண்டம்இறங்கினர்.தொடர்ந்துபக்தர்கள் குண்டம் இறங்கிநேர்த்திக்கடன் செலுத்தினர்.

திருச்சி சமயபுரம் அருள்மிகு மாரியம்மன்

திருச்சி திருச்சி சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோவிலில் சித்திரை மாத திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக நேற்று தொடங்கியது – பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே அமைந்துள்ள சமயபுரம் மாரியம்மன் திருக்கோவில் சத்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்தலமாகும் .இங்கு ஆண்டுதோறும் சித்திரை தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம் அந்த வகையில் இந்த வருடம் சித்திரை தேரோட்டத்திற்கான கொடி ஏற்றம் ஏப்ரல் 9ம் தேதி நடைபெற்ற நிலையில் நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாரியம்மன் திருவீதி […]

கங்கை நீர் பல ஆண்டுகள் வைத்திருந்தாலும் கெடாது.

கங்கை நீர் பல ஆண்டுகள் வைத்திருந்தாலும் கெடாது.. சாதாரணமாக எலும்பு, தண்ணீரில் கரையாது. ஆனால் கங்கை நீரில் கரைந்து விடுகிறது. கங்கை நதி முழுவதுமே ஓர் ரசாயனச் சாலை. கங்கை நீர் பற்றிய அதிசய தகவல்களை அறிந்து கொள்ளலாம். கங்கை நதி பாயும் அதே மலையிலிருந்து பிறந்து பாயும் வேறு ஆற்று நீருக்கு கங்கையின் தனிச் சிறப்பு இல்லை! அதே மலை. அதே மேகங்கள். அதே மழை. அதே பனி உருகல். என்றாலும் கங்கையின் நீர் வேறாக இருக்கிறது. ஏன் என்பதைக் கண்டுபிடித்து நிரூபிக்க […]

தென்காசி மாவட்டம், கடையம் பகுதியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில்

தென்காசி மாவட்டம், கடையம் பகுதியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் உள்ள ஒரு குன்றின் மேல் பகுதியில் அமைந்துள்ளது தோரணமலை முருகன்கோவில். அகஸ்தியர், தேரையர் உள்ளிட்ட பல்வேறு சித்தர்கள்  தரிசனம் செய்த இந்த கோவிலானது தென் மாவட்டங்களில் உள்ள முருகன் திருத்தலங்களில் மிகவும் பிரபலமான திருத்தலங்களில் ஒன்றாகும். இந்த கோவிலில், வருடம் தோறும் தைப்பூசம், வைகாசி விசாகம், தமிழ்புத்தாண்டு, ஆங்கிலப்புத்தாண்டு உள்ளிட்ட முக்கிய தினங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.  அந்த வகையில், தமிழ் புத்தாண்டு தினமான நேற்று தோரணமலை முருகன் கோவிலில் […]

வெள்ளநாயக்கனேரி கிராமத்தில் 

வெள்ளநாயக்கனேரி கிராமத்தில் ஸ்ரீ சாமுண்டீஸ்வரி அம்மன் 48 நாள் மண்டல பூஜை நிறைவு விழாவில் 1008 பால்குடங்கள் எடுத்து நேர்த்திக்கடன் கடன் செலுத்திய பக்தர்கள் திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த வெள்ளநாயக்கனேரி கிராமத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ சாமுண்டீஸ்வரி அம்மன் 48 ஆம் நாள் மண்டல பூஜை நிறைவு விழா ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்த விழாவில் நாட்டறம்பள்ளி சுற்றுவட்டார பத்திற்கும் மேற்பட்ட கிராமத்தில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டனர். மேலும் 1008 பால்குடங்கள் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர் மேலும் […]