சென்னை, நவம்பர் 2026: காவேரி மருத்துவமனை 200-க்கும் மேற்பட்ட ஹைபெக் (HIPEC) எனும் ‘ஹைப்பர்தெர்மிக்இன்ட்ராபெரிட்டோனியல் கீமோதெரபி’ சிகிச்சைகளைவெற்றிகரமாக செய்துள்ளது. இந்த சிகிச்சை பெரிட்டோனியம்எனும் வயிற்றுப் பகுதியின் உட்சவ்விற்கு பரவியுள்ளபுற்றுநோய்களுக்கு அளிக்கப்படும் ஒரு அரிதான கீமோதெரபிசிகிச்சையாகும். இதில் வெப்பமூட்டப்பட்ட கீமோதெரபிமருந்து பயன்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் ஹைபெக் சிகிச்சை ஒரு சிலமருத்துவமனைகளில் மட்டுமே அதிக எண்ணிக்கையில்செய்யப்படுகிறது. இந்த துறையில் தனது நிபுணத்துவத்தைமேலும் வலுப்படுத்த காவேரி மருத்துவமனை, ஹைபெக்மற்றும் ‘சைட்டோரிடக்டிவ்’ என்னும் புற்றுநோய் கட்டியைக்குறைக்கும் அறுவை சிகிச்சைக்களுக்கென்று ஒரு பிரத்யேகமையத்தையும் தொடங்கியுள்ளது. இம்மையம் முற்றியநிலையிலுள்ள வயிற்றுப் புற்றுநோய்களுக்குச்சிகிச்சையளிப்பதில் கவனம் செலுத்தும். சைட்டோரிடக்டிவ் அறுவை சிகிச்சையில் கண்ணுக்கு தெரிந்தபுற்றுநோய் கட்டிகள் அகற்றப்படுகின்றன. அதனைத்தொடர்ந்து, ஹைபெக் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இச்சிகிச்சையின் போது வெப்பமூட்டப்பட்ட கீமோதெரபிமருந்து நேரடியாக வயிற்றுக் குழிக்குள் செலுத்தப்பட்டுஎஞ்சியிருக்கும் கண்களுக்குத் தெரியாத நுண்ணியபுற்றுநோய் செல்கள் அழிக்கப்படுகிறது. சைட்டோரிடக்டிவ்மற்றும் ஹைபெக் சிகிச்சைகளை இணைந்து செய்வதன்மூலம், நோய் பாதித்த இடத்தில் தீவிர சிகிச்சை அளிக்கவும், கீமோதெரபி மருந்து உடலின் மற்ற பகுதிகளின் மேல் அதிகம்படாமல் பார்த்துக் கொள்ளவும் முடிகிறது. கருப்பை மற்றும் பெருங்குடல் புற்றுநோய்கள் உட்பட, வயிற்றுக்குழி மற்றும் வயிற்று உட்சவ்வைப் பாதித்துப் பரவும்புற்றுநோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளில்மருத்துவரீதியாக தகுதியானவர்களுக்கு இந்தச் சிகிச்சைஅளிக்கப்படுகிறது. ஹைபெக் சிகிச்சை அளிப்பது ஒரு கூட்டு முயற்சியாகும். சிகிச்சை அளிக்கும் மருத்துவ குழுவில் அறுவை சிகிச்சைபுற்றுநோயியல் நிபுணர்கள், மருத்துவப் புற்றுநோயியல்நிபுணர்கள், நோயியல் நிபுணர்கள் இடம்பெற வேண்டும். இந்தஅறுவை சிகிச்சை நீண்ட நேரம் நடைபெறும் என்பதாலும், கணிசமான இரத்த இழப்பு மற்றும் வெப்ப அழுத்தம் ஏற்படவாய்ப்புள்ளதாலும், அனுபவம் வாய்ந்த மயக்கவியல் மற்றும்தீவிர சிகிச்சைக் குழுவும் இதற்கு அவசியமாகிறது. இவர்களுக்குத் துணையாக இத்தகைய நோயாளிகளைப்பராமரிப்பதில் அனுபவம் வாய்ந்த செவிலியர்கள் மற்றும்ஊட்டச்சத்து நிபுணர்கள் தேவைப்படுகின்றனர். முன்னதாக நோயாளிகளை சரியாகத் தேர்வு செய்ய வேண்டும். இதற்கு நோய் பரவியுள்ள அளவை துல்லியமாககண்டறிவதற்கு மேம்பட்ட ஸ்கேன் பரிசோதனைகள்தேவைப்படும். இதற்கு அனுபவம் வாய்ந்த கதிரியக்கவியல்நிபுணர்கள் தேவை. இச்சிகிச்சைக்கு கீமோதெரபி திரவத்தைச் சுமார் 41-43°C வெப்பநிலைக்குச் சூடாக்கி, வயிற்றுக்குழிக்குள் சுழலச்செய்து, அதன் வெப்பநிலையைத் தொடர்ந்து கண்காணிக்கும்பிரத்யேக இயந்திரங்கள் தேவைப்படுகின்றன. இத்தகையபன்றுபட்ட தேவைகளால் தமிழகத்தில் குறிப்பிட்ட சிலமருத்துவ மையங்களில் மட்டுமே ஹைபெக் சிகிச்சைவழங்கப்படுகிறது. ஹைபெக் சிகிச்சை குறித்து பேசிய காவேரிமருத்துவமனையின் புற்றுநோயியல் மூத்த ஆலோசகர்டாக்டர் சுஜய் சுசிகர் கூறுகையில், “200 ஹைபெக்சிகிச்சைகள் என்ற மைல்கல்லை நாங்கள் கடந்துள்ளதில்மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். இது மேம்பட்ட புற்றுநோய்சிகிச்சையை வழங்குவதில் எங்கள் குழுவின் அனுபவத்தையும்அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கிறது. பெரிட்டோனியத்திற்குப்பரவியுள்ள முற்றிய நிலை புற்றுநோய்களால் பாதிக்கப்பட்டநோயாளிகளுக்கு ஹைபெக் ஒரு முக்கியமான சிகிச்சைவாய்ப்பை வழங்குகிறது. வழக்கமான நரம்பு வழி கீமோதெரபிமருந்துகள் இப்பகுதியில் உள்ள புற்றுநோய் படிவுகளைமுழுமையாகச் சென்றடையாமல் போகலாம். ஆனால், சைட்டோரிடக்டிவ் அறுவை சிகிச்சையைத் தொடர்ந்துவெப்பமூட்டப்பட்ட கீமோதெரபியை நேரடியாகவயிற்றுக்குழிக்குள் சுழலச் செய்வதன் மூலம் ஹைபெக் இந்தப்பிரச்னைக்கு தீர்வு அளிக்கிறது,” என்றார். காவேரி குழும மருத்துவமனைகளின் இணை நிறுவனர்மற்றும் செயல் இயக்குநர் டாக்டர் அரவிந்தன் செல்வராஜ்தனது கருத்தில், “முற்றிய நிலையிலுள்ள வயிற்றுப்புற்றுநோய்களுக்குச் சிகிச்சையளிப்பது எப்போதுமே மிகவும்சவாலான ஒன்றாக இருந்து வருகிறது. ஹைபெக்சிகிச்சையின் மூலம் நோயாளிகளுக்குப் பயனுள்ள சிகிச்சைதீர்வுகளை எங்களால் வழங்க முடிகிறது. சிகிச்சைகளின் பலன்சிறப்பாக அமைவதற்காக , சரியான வசதிகள், மருத்துவநிபுணத்துவம் மற்றும் பல்துறை அணுகுமுறை ஆகியவற்றைஒருங்கிணைப்பதில் நாங்கள் தொடர்ந்து கவனம் செலுத்திவருகிறோம்,” என்று தெரிவித்தார். சமீபத்தில் சிகிச்சை பெற்றவர்களில், முற்றிய நிலை கருப்பைபுற்றுநோய் மற்றும் பெரிட்டோனியல் பாதிப்புடன் சிறப்புசிகிச்சைக்காக மொரீஷியஸ் நாட்டில் இருந்து சென்னை வந்தஒரு பெண்மணியும் அடங்குவார். சைட்டோரிடக்டிவ் அறுவைசிகிச்சை மற்றும் ஹைபெக் சிகிச்சைக்குப் பிறகு, அவர்முழுமையாக குணமடைந்து நாடு திரும்பினார். மற்றொருவர், கருப்பை புற்றுநோய் மற்றும் பெரிட்டோனியல் பரவலால்பாதிக்கப்பட்ட 32 வயது தாய் ஆவார்; அவருக்கும் விரிவானஅறுவை சிகிச்சையைத் தொடர்ந்து ஹைபெக் சிகிச்சைவெற்றிகரமாக அளிக்கப்பட்டது.
Day: November 19, 2026
சென்னை, நவம்பர் 2026: மருத்துவத் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாக, ஆசியாவிலேயே முதல் முறையாக மிகப்பெரிய பெருநாடி-தமனி அழற்சி (‘அயோர்டோஆர்டெரிடிஸ்’) எனப்படும் அரியவகை நோயால்...
