சென்னை, நவம்பர் 2026: பாரம்பரிய மருத்துவ ஆராய்ச்சிகளை ஆய்வகத்திலிருந்து பொதுமக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டு செல்லும் திட்டத்தில் ஒரு முக்கிய முன்னேற்ற நடவடிக்கையாக, எஸ்ஆர்எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (SRMIST), நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த தாங்கள் உருவாக்கி, அதற்காக காப்புரிமை பெற்ற மூலிகை மருந்தை இந்தியா முழுவதும் தயாரித்து விற்பனை செய்வதற்காக ‘டாக்டர் ஸ்ரீவர்மாஸ் வெல்னஸ் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனத்துடன் பிரத்யேக உரிமையை வழங்காத ஒரு ஒப்பந்தத்தை செய்துள்ளது. இந்த வாழ்நாள் ஒப்பந்தத்தின் மதிப்பு ரூ. 125 லட்சமாகும்.
சென்னை கிண்டியில் உள்ள ரமாடா பிளாசா ஹோட்டலில் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்வு நடைபெற்றது. எஸ்ஆர்எம் பல்கலையின் வேந்தர் டாக்டர் டி.ஆர். பாரிவேந்தர் இவ்விழாவிற்குத் தலைமை வகித்தார். இந்நிகழ்வில் துணைவேந்தர் பேராசிரியர் சி. முத்தமிழ்ச்செல்வன், பதிவாளர் முனைவர் எஸ். பொன்னுசாமி மற்றும் டாக்டர் ஸ்ரீவர்மாஸ் வெல்னஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் ஸ்ரீவர்மா, இயக்குநர் டாக்டர் ஹெனோக் மார்சியோ ஆகியோர் பங்கேற்றனர்.
எஸ்ஆர்எம் கல்வி நிறுவனத்தின் இந்திய மருத்துவ முறைகள் நிறுவனத்தின் (IIISM) டீன் டாக்டர் சதீஷ் குமார் மற்றும் அவரது ஆராய்ச்சிக் குழுவினரால் இந்த மூலிகை தயாரிப்பு மருந்து உருவாக்கப்பட்டது. நீரிழிவை (சர்க்கரை நோய்) கட்டுப்படுத்த ஒருங்கிணைந்து செயலாற்றும் பல்வேறு மூலிகைகளின் கூட்டுச் சேர்க்கையாக இது தயாரிக்கப்பட்டுள்ளது. இரத்த சர்க்கரை அளவைக் குறைப்பதோடு மட்டுமல்லாமல், உடலுக்குத் தேவையான ஆன்டி-ஆக்ஸிடன்ட் (எதிர் உயிர்மக்கி) சக்தியை இம்மருந்து வழங்குகிறது, நீரிழிவு நோயால் சிறுநீரகம் மற்றும் இதயத்திற்கு ஏற்படக்கூடிய சிக்கல்களை குறைத்து அந்த உறுப்புகளை பாதுகாப்பதும் இந்த சிகிச்சை மருந்தின் இலக்காகும்.
