
ஜோலார்பேட்டையில் சமுதாய வளைகாப்பு விழா, அதிமுக எம்எல்ஏ பங்கேற்பு!
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கர்ப்பிணிப் பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு விழா, ஜோலார்பேட்டையில் உள்ள தனியார் மஹாலில் 22/10/2026 அன்று காலை 10 மணியளவில் மாவட்ட திட்ட அலுவலர் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் பா. கந்தன் தலைமையில் நடைபெற்றது.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் கே சி.வீரமணி, தமிழக வெற்றி கழக ஜோலார்பேட்டை மாவட்ட செயலாளர் முனிசாமி கலந்துகொண்டு கர்ப்பிணிப் தாய்மார்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து சீர்வரிசை வழங்கி சிறப்பித்தார்கள்.
உடன் வட்டார மருத்துவ அலுவலர் ஜோலார்பேட்டை வட்டார மருத்துவ அலுவலர் ஜோலார்பேட்டை நாட்றம்பள்ளி வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் செல்வி, சுஜாதா மற்றும் 200க்கும் மேற்பட்ட கர்ப்பிணி தாய்மார்கள் சுகாதார செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளாட்சிப் பிரதிநிதி கலந்து கொண்டு சிறப்பித்தனர். ஜோலார்பேட்டை முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் ரமேஷ், நகர அதிமுக செயலாளர் சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
