
செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஊராட்சி ஒன்றியம்
சின்னகயப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த ராமமூர்த்தி ரஞ்சிதா இவர்களின் 13 வயது உடைய மகன் சுஜித் என்கிறசிறுவன் பொது அறிவு வினா விடையில் 1500 கேள்வி பதில்களுக்கு பதில் அளித்தும், போதை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி 20க்கு மேற்பட்ட அவார்டுகள் மற்றும் கேடயம் பெற்றுள்ள இந்த சிறுவன் தற்போது கின்னஸ் சாதனையும் பெற்றுள்ளார். இவருக்கு அப்பகுதி மக்கள் நெஞ்சார்ந்த பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
1500 கேள்வி பதில்களுக்கு விடை அளித்தும்,
போதையால் ஏற்படும் பாதிப்புகளையும் போதையால் சிக்கிக் கொண்டிருக்கும் தமிழக மக்களையும் மீட்டெடுக்க தனது பேச்சின் மூலம் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
இவர் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பற்றியும் மற்றும் வாழ்க்கையை அழிக்கும் போதை பற்றியும் மற்றும் போதையால் பாதிப்படையும் இளைஞர்கள் என்ற தலைப்பிலும் பேசி தனது பேச்சின் மூலம் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தி சாதனை படைத்துள்ளார்.
இச்சாதனையை ஏற்றுக் கொண்ட இந்தியன் புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட் என்ற நிறுவனம் இச் சாதனை செய்த சிறுவனை அழைத்து பாராட்டியும் பட்டமும் அளித்து கௌரவித்தனர்… சென்னையில் உள்ள இந்தியன் புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்டு நிறுவனத்தின் சென்னை கிளையில் இச்சாதனை சிறுவனுக்கு பட்டம் அளித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது.இவர் போதை இல்லா தமிழகத்தையும் மற்றும் போதை இல்லா இந்தியாவையும் உருவாக்க போராடிக் கொண்டு வருகிறார்..
பல்வேறு சாதனைகளை புரிந்து வரும் சிறுவனுக்கும் சுற்று வட்டார கிராம பொதுமக்கள் தங்கள்
பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்..
