
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழறிஞர்கள். எழுத்தாளர்களைச் சிறப்பிக்கும் வகையில் இலக்கியக் கூட்டம் திருவள்ளூர் அருகே உள்ள கொசவன் பாளையம் திருமுருகன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித் தலைவர் மு. பிரதாப்தலைமை தாங்கினார்.இலக்கியக் கூட்டத்தில் 2025 தமிழ் வளர்ச்சி துறை சார்பில் பள்ளி மற்றும் கல்லூரி அளவிலான தமிழ் மொழி தொடர்பாக கவிதை. கட்டுரை. பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் மு. பிரதாப் பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவிக்கையில்,
திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழறிஞர்கள் எழுத்தாளர்களை சிறப்பிக்கும் வகையில் இலக்கிய கருத்தரங்கம் நடைபெறும் இந்த இனிய வேளையில் தமிழறிஞர்கள் பற்றிய தகவல்கள் நமக்கு சுமார் பத்து தமிழர் அறிஞர்களை தெரிந்துவைத்துயிருப்போம். அவர்களின் பெயர்களை சொல்லச் சொன்னால் உடனே தெரியாது.
அந்த அடிப்படையில் தான் நாம் உள்ளோம். முதலில் மாவட்டத்தில் தமிழுக்காக தொண்டாற்றிய தமிழர் அறிஞர்களை கண்டறிந்து அவர்களை போற்றும் விதமாக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக கருதுகிறேன். இந்த மாதிரி நிகழ்வுகளுக்கு நமக்கு அளித்த தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான தமிழ் வளர்ச்சித் துறை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது மிகவும் நல்ல விஷயமாக கருதுகிறேன்.
அதேபோல தமிழ் அறிஞர்களுடன் உறவினர்களை கண்டறிந்து அவர்களை சிறப்பித்து அவர்கள் மூலம் தமிழ் அறிஞர்களின் கதைகளை குறிப்பு எடுப்பது ஒரு நல்ல விஷயம்.
ஒவ்வொரு மாவட்டங்களில் உள்ள தமிழறிஞர்களை கண்டறிந்து அவர்களின் தகவலை தெரிந்து கொள்வது நம்முடைய கடமையாகும்.
அதேபோல தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் பள்ளி மற்றும் கல்லூரி அளவில் பல்வேறு போட்டியில் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு இன்று பரிசு பெறும் மாணவ, மாணவியர்களுக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் நூலிழையில் வெற்றினை தவறவிட்ட வர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
தோல்வியை கண்டு துவண்டு விடாமல் முதல் வெற்றிக்காக தொடர்ந்து போராடுங்கள். முதல் வெற்றி எங்கும் இல்லை உங்களிடம் நான் உள்ளது. நீங்கள் தன்னம்பிக்கையுடன் நீங்கள் கடந்து செல்லும் பொழுது அந்த வெற்றியை
எளிதாக நீங்கள் அடையலாம் .
ஆகவே, வெற்றிக்காக தொடர்ந்து தன்னம்பிக்கையுடன் போராடுங்கள் எளிதில் வெற்றி அடையலாம்.
அதேபோல தான் தமிழ் மொழி. அப்படித்தான் தமிழுடன் பிறந்த மொழிகள் ஒன்றினை இரண்டு கூறுவார்கள். அந்த மொழிகள் தற்போது வழக்காடு மொழிகளாக இல்லை. அந்த மொழிகளில் பெயர்கள் கூட நிறைய நபர்களுக்கு தெரியாது. ஆனால் தமிழ் மொழி இன்னமும் வழக்காடு மொழியாக இருக்கிறது.
தமிழ்மொழி அந்தந்த காலத்திற்கு ஏற்றாற் போல் புது புது தகவல்களை உள்வாங்கி கொண்டு தமிழ் மொழியில் தன்மையினை மாறாமல் கொண்டு வந்ததுதான் இதற்கு சான்று என்று நினைக்கின்றேன்.
தற்பொழுது கணினி, இன்டர்நெட் போன்று இருப்பதால் நம் தமிழ் மொழியினை அதனுடன் இணைப்பது தமிழறிஞர்கள் அடுத்த கட்டத்திற்கு தமிழ் மொழியை கொண்டு செல்ல முடியும்.
தமிழ்நாடு அரசு இணைய தமிழ் மாநாடு நடத்தி வருகிறார்கள். அது மட்டுமல்லாமல் இணைய வழிக் கொள்கை தமிழ் மொழி கொள்கையினை வரையறுக்கும் பணி நடைபெற்று வருகிறது.
நமக்கு தெரியாத பல்வேறு நூல்கள் கூட டிஜிட்டல் செய்து பராமரிக்கும் பணிகள் மேற்கொண்டு வருகிறார்கள்.
தமிழ் வளர்ச்சித் துறையும் தற்பொழுது தமிழ் சார்ந்த பணிகளை சிறப்பான முறையில் செய்து வருகிறது. இதன் தொடர்ச்சி தான் இந்த தமிழறிஞர்களை சிறப்பிக்கும் நிகழ்வாகும்.
எந்த ஒரு தாய் மொழியையும் நாம் கற்கும் பொழுது, படிக்கும் பொழுது எளிதாக புரிந்து கொள்ள முடியும். ஆகவே தாய் மொழிக்கான தனி பாசம் பற்று இருக்கும். பல்வேறு மொழிகள் தெரிந்தாலும் தன் தாய் மொழியின் மீது பற்றும் பாசமும் இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் மு. பிரதாப் தெரிவித்தார்..
முன்னதாக உலகத் தாய்மொழி தினத்தை முன்னிட்டு உலகத் தாய்மொழி தின உறுதி மொழியினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஏற்றுக்கொள்ள அனைவரும் ஏற்றுக் கொண்டனர்..
தொடர்ந்து திருவள் ளூர் மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் பள்ளி மற்றும் கல்லூரி அளவிலான பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, கவிதை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு முதல் பரிசு ரூ.10 ஆயிரம் , பாராட்டு சான்றிதழ்களும், இரண்டாம் பரிக ரூ.7 ஆயிரம் பாராட்டு சான்றிதழ்களும், மூன்றாம் பரிசு ரூ.5 ஆயிரம் பாராட்டு சான்றிதழ்களை வழக்கினார்.
பின்னர் தமிழறிஞர்களை சிறப்பிக்கும் வகையில் இலக்கியத் தென்றல் சென்னை சகுந்தலா அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த் துறை தலைவர் பேரா.மா. விஜயகுமார், தமிழ் தென்றல் வி. கலியாணசுந்தரம் போற்றும் வகையில் கருத்துரையும். சென்னை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகம் முதன்மை ஒருங்கிணைப்பு பதிப்பாசிரியர் முனைவர் தி.பரமேசுவரி, சிலம்பு செல்வர் ம.பொ சிவஞானம் போற்றும் வகையில் கருத்துரையும், சென்னை சிக்கராயபுரம் ஸ்ரீ முத்துக்குமரன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ் துறை பேரா.அ. விஜயகுமார், சைவ இலக்கியப் பேரறிஞர் மா.இராசமாணிக்கனார் போற்றும் வகையில் கருத்துரையும். கடலூர் பெரியார் அரசு கலைக்
கல்லூரி உதவி பேராசிரியர் முனைவர் ஜா. இராஜா கவி வேந்தர் கா.வேழவேந்தன் போற்றும் வகையில் கருத்துரைகளை வழங்கினார்கள்.
இந்நிகழ்வில் உதவி இயக்குநர் தமிழ் வளர்ச்சி முனைவர். இரா. அன்பரசி, சென்னை தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் அருள். கல்லூரி முதல்வர் முனைவர்.அமுதா கல்லூரி தமிழ் துறை தலைவர் முனைவர். சரசுவதி மற்றும் தமிழ் செம்மல் விருத்தாளர்கள் தமிழறிஞர்கள் தமிழ் கலை இலக்கிய அமைப்புகளில் நிர்வாகிகள் பேராசிரியர்கள் மாணவ மாணவியர்கள் உட்பட பல கலந்து கொண்டனர்..