8 பகுதி செயலாளர்களில் 5 பேர் முன்னாள் MLA-க்கு சீட் வழங்க கூடாது என போர் கொடி
பல்லாவரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் வரக்கூடிய சட்டமன்ற தேர்தலில் போட்டியிட போட்டோ போட்டி போட்டு கொண்டு இரு கோஷ்டியினர் தலைமைக்கு மாறி மாறி புகார் அளித்து வருகின்றனர்.
குறிப்பாக பல்லாவரம் தொகுதியில் அதிமுக சார்பில் சீட் பெறுவதற்காக முன்னாள் எம்.எல்.ஏ. தன்சிங் தலைமையிடம் முறையீட்டு வரும் நிலையில், அவருக்கு சீட் வழங்க கூடாது என குரோம்பேட்டை, திருநீர்மலை, பம்மல் , அஸ்தினாபுரம், அனகாபுத்தூர் உள்ளிட்ட பகுதி செயலாளர்கள் போர் கொடி தூக்கி உள்ளனர்.
தன்சிங்க்கு ஆதரவான இடத்தில் அவர்கள் எதிர்ப்பாளர்கள் சென்று நிகழ்ச்சி நடத்துவதும் எதிர்ப்பாளர்கள் இடங்களில் சென்று முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தன்சிங் நிகழ்ச்சி நடத்துவதுமாக போட்டோ போட்டி நடந்து கொண்டிருக்கிறது.
பல்லாவரத்தில் வன்னியர் சமுதாயம் மக்கள் அதிக அளவில் வசிக்கும் நிலையில் இந்த முறை வன்னியர் சமுதாயத்தை சேர்ந்த நபருக்கு அதிமுக தலைமை வாய்ப்பளிக்க வேண்டுமென அதிமுகவின் ரத்தத்தின் ரத்தங்கள் கூறுகின்றனர்
இந்நிலையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தன்சிங் எதிராக பல்லாவரம் தொகுதியில் போட்டியிட பல அதிமுகவினர் விருப்ப மனு அளித்தனர்.
இதனால் இருதரப்பினரும் போட்டோ போட்டி போட்டு கொண்டு கட்சி நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.
தற்போது எதிர்ப்பாளராக இருக்கும் பகுதி கழக செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தன்சிங் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது அவருடன் பயணித்துள்ளனர் ஆனால் அவர்களின் மகன் ஜெயப்பிரகாஷ் (பல்லாவரம் பகுதி கழகச் செயலாளராக இருப்பவர்) பழைய ஆட்களை ஓரங்கட்டியுள்ளார் இதனால் கடுப்பில் இருந்த ரத்தத்தின் ரத்தங்கள் இம்முறை இவர்களுக்கு நிச்சயம் பாடம் புகட்ட வேண்டும் என தலைமையிடம் தொடர்ந்து போர் கொடியை தூக்கி வருகின்றனர் .
இந்நிலையில் அமைப்பு ரீதியாக 8 பகுதிகளாக உள்ள பல்லாவரம் சட்டமன்ற தொகுதியில் ஐந்து பகுதி கழகச் செயலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் தன்சிங்கிற்கோ அல்லது தன்சிங் சார்ந்தவர்களுக்கு இம்முறை சீட்டு வழங்கினால் அவர்கள் நிச்சயம் மண்ணை கவ்வது உறுதி என என ரத்தத்தின் ரத்தங்கள் கூறுகின்றனர்.
இந்தநிலையில் கடந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு அஸ்தினாபுரத்தில் அதிமுகவினர் இரு தரப்பினரும் ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் எதிர் எதிரே நலத்திட்ட உதவியை வழங்கியது பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது.
கட்சி ஒன்று நிகழ்ச்சி இரண்டா என பொதுமக்களே வியக்கும் அளவிற்கு அஸ்தினாபுரம் பகுதி கழகத்திற்கு எதிராக முன்னாள் தன்சிங் தரப்பினரும் போட்டி போட்டு நிகழ்ச்சி நடத்தியது வெடிக்கையாக அமைந்தது.
குறிப்பாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தன்சிங்க்கு சீட் வழங்க கூடாது சொந்த கட்சியை சேர்ந்த சில பகுதி செயலாளர்களே போர்கொடி தூக்கிய சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே பல்லாவரம் சட்டமன்ற தொகுதியில் சிறுபான்மையினர் ஓட்டு கணிசமாக உள்ள நிலையில் திமுக வுக்கு சாதகமாக உள்ளது இந்த நிலையில் அதிமுகவில் ஒரு சில சமூகத்தினர் தன்சிக்கு சீட்டு வழங்குவதை எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த சமூக ஓட்டு மூலம் பாதிப்பு ஏற்படுவதால் அதிமுக இந்த முறை தேர்தலுக்கு முன்பே தோல்வி உறுதியாக எழுதப்பட்டு விட்டதாக அரசியல் விமர்சனங்களும் பகுதி வாழ் மக்களும் கூறுகின்றனர்
இதனால் பல்லாவரம் தொகுதியை அதிமுக கூட்டணி கட்சியான பாமக, பாஜகவிற்கு ஒதுக்கீடு செய்யலாமா எனவும் அதிமுக தலைமை யோசித்து வராஙகளாம்.
