
சென்னை, 2025: தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் புகழ்பெற்ற பன்முக சிறப்புப் பிரிவுகளுடன் இயங்கி வரும் முன்னணி மருத்துவமனையான ரேலா மருத்துவமனை, குடல் சார்ந்த மறுவாழ்வு மற்றும் ஊட்டச்சத்து ஆதரவிற்கான ஒரு மையத்தை தொடங்கியிருக்கிறது. அரிதான குடல்சார் செயலிழப்புகள் மற்றும் சிக்கலான இரைப்பை குடல் கோளாறுகளுக்கு மருத்துவ, அறுவைசிகிச்சை சார்ந்த மற்றும் ஊட்டச்சத்து சிகிச்சைகளின் விரிவான தொகுப்பை இம்மையம் வழங்கும். இத்தகைய மருத்துவ மையம் இந்நாட்டின் தொடங்கப்படுவது இதுவே முதன் முறையாகும். அத்துடன், ஒன்றுக்கும் மேற்பட்ட குடல் மாற்று சிகிச்சைகளுக்கு மருத்துவ ரீதியில் தகுதியில்லாத குறைமாத பிரசவத்தில் பிறந்த குழந்தைகள் மீது தனிப்பட்ட கூர்நோக்கத்துடன் இம்மையம் சேவைகளை வழங்கும்.
குடல்களின் பழுதுநீக்கல், மறுஉருவாக்கம் மற்றும் குறுகிய குடல்களின் விரிவாக்கம் ஆகியவற்றிற்கு மிக அவசியமான ஒருங்கிணைக்கப்பட்ட சிகிச்சைப் பராமரிப்பை வழங்குவதற்கு நிபுணத்துவம் மிக்க அறுவைசிகிச்சையாளர்கள், இரைப்பை குடலியல் மருத்துவர்கள், உணவுமுறை நிபுணர்கள் மற்றும் அனுபவம் மிக்க செவிலியர்கள் உட்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த குழுவுடன் இம்மையம் செயல்படுகிறது. அடிவயிற்றின் பல்வேறு உறுப்புமாற்று சிகிச்சை துறையின் இயக்குனர் புரொஃபசர் அனில் வைத்யா, மகளிர் மற்றும் குழந்தை நலத்துறையின் இயக்குனரும், முதுநிலை ஆலோசகருமான டாக்டர். நரேஷ் சண்முகம் மற்றும் குழந்தைகளுக்கான இரைப்பை குடலியல் துறையின் முதுநிலை நிபுணர் தலைமையில் இயங்கும் இக்குழுவில் இன்னும் 10 மருத்துவ நிபுணர்கள் இடம்பெற்றுள்ளனர். குறைமாத பிரசவத்தில் பிறந்த பச்சிளம் குழந்தைகளிலிருந்து, வளரிளம் பருவத்தினர் வரை குடல்சார் செயலிழப்பிற்கு முழுமையான சிகிச்சையை இக்குழு வழங்கும். மரபியல் பிரச்சனைகள் அல்லது நோயின் காரணமாக சிறுகுடல் அகற்றப்பட்டதன் காரணமாக உட்கொள்ளும் ஊட்டச்சத்தை உறிஞ்ச சிறுகுடல்களால் இயலாத நிலையே குடல் செயலிழப்பு என அழைக்கப்படுகிறது. இத்தகைய குழந்தைகள், சிரை வழியாக ஊட்டச்சத்துகள் வழங்கப்படுவதை சார்ந்திருக்காது. இக்குழந்தைகளுக்கு மருத்துவ ரீதியாகவும், அறுவைசிகிச்சை ரீதியாகவும் குடலின் உறிஞ்சும் திறனை அதிகரிப்பதற்கான மறுவாழ்வு சிகிச்சையில் இக்குழு ஆதரவளிக்கும். இச்செயல்முறைக்கு பல மாதங்கள் ஆகலாம் மற்றும் இக்காலகட்டத்தில், குருதிக்குழாய் வழி ஊட்டம் தேவைப்படும். வீட்டு சூழலிலேயே சிரை வழியாக ஊட்டச்சத்துகளை வழங்கும் இந்த செயல்முறையானது, மற்றபடி உடல்நலத்துடன் உள்ள குழந்தைகளுக்கு மேற்கொள்ளப்படும்.
குடல் செயலிழப்பு மற்றும் இரைப்பை குடல் பாதிப்புகளுக்கு இம்மையம் சிகிச்சை அளிக்கிறது. சேதமடைந்திருக்கும் / குறுகியிருக்கும் குடல் பாதிப்பால், குறைந்திருக்கும் குடல் இயக்கம், குடல்களால் உணவை முறையாக நகர்த்த இயலாத நாட்பட்ட குடல் அடைப்பு, நாட்பட்ட செரிமானப்பாதை அழற்சி வெளிப்படும் அழற்சியுள்ள மலக்குடல் நோய்கள், பெருங்குடலில் நரம்பு உயிரணுக்கள் இல்லாத காரணத்தால் கடுமையான மலச்சிக்கலை விளைவிக்கும் நோய், பிறப்பின்போது அடிவயிற்று உறுப்புகள் துருத்தி புடைத்திருப்பது, குறைப்பிரசவ குழந்தைகளில் குடல் சேதம் மற்றும் இரத்தஓட்டத்தை துண்டிக்கின்ற குடல் சுருண்டிருத்தல் என்ற ஆபத்தான நிலை ஆகிய பாதிப்பு நிலைகளுக்கு இம்மையத்தில் சிறந்த சிகிச்சை வழங்கப்படும்.
தனிச்சிறப்பான சேவைகளின் தொகுப்பின் வழியாக விரிவான சேவையை இம்மையம் வழங்கும். இத்தகைய பச்சிளம் குழந்தைகள் / குழந்தைகளுள் பெரும்பான்மையானவர்களுக்கு உடல்நலம் தேறுவதற்கு பச்சிளம் குழந்தைகளுக்கான / குழந்தைகளுக்கான தீவிரசிகிச்சை பராமரிப்பு தேவைப்படும். குழந்தைகளின் வளர்ச்சிக்குப் போதுமான கலோரிகளை வழங்க சிறப்பு ஃபார்முலாக்களுடன் வாய்வழி ஊட்டமளிப்பு, குடல்களுக்கு குருதிக்குழாய் வழி ஊட்ட முறையோடு சேர்த்து, குடல்களுக்கு சிறப்பு உணவூட்டல் உத்திகளை இரைப்பை குடலியல் மற்றும் ஊட்டச்சத்து குழுவினர் செயல்படுத்துவார்கள். பிறந்ததிலிருந்து வாய் வழியாக எதையும் உட்கொண்டிராத குழந்தைகளுக்கு எப்படி உணவு உண்பது என்பது தெரிந்திருக்காது. அத்தகைய குழந்தைகளுக்கு தகவல் தொடர்பு மற்றும் விழுங்கல் அறிவியல் துறையிலிருந்து சிறப்பு ஆதரவு தேவைப்படும். சாத்தியமானால், குடலின் நீளத்தை அதிகரிக்கும் அறுவைசிகிச்சை செய்யப்படும். அனைத்து வழிமுறைகளும் பலனளிக்கவில்லை என்றால், அத்தகைய குழந்தைகளுக்கு இறுதியாக குடல் உறுப்புமாற்று சிகிச்சை தேவைப்படும்.
ரேலா மருத்துவமனையின் தலைவர் புரொஃபசர் முகமது ரேலா இது தொடர்பாக கூறியதாவது: “பொதுவாக குடல்சார் செயலிழப்பு என்பது, குழந்தைகளில் அரிதானது என்றாலும், குறைப்பிரசவ குழந்தைகளை இது கணிசமாக பாதிக்கிறது. ஏறக்குறைய 100,000 குழந்தைகளுள் 24 குழந்தைகளுக்கு இப்பாதிப்பு ஏற்படுகிறது. இந்தியாவில் குடல் உறுப்புமாற்று சிகிச்சையே பெரும்பாலும் ஒரே நேரத்தில் மாற்றுவது என்பது பெரும்பாலும் பிரதான சிகிச்சையாக இருக்கிறது. எனினும், குழந்தைகளுக்கு தனித்துவமான சிகிச்சை சேவைகளின் விரிவான தொகுப்பை வழங்குவதன் மூலம் உறுப்புமாற்று சிகிச்சைகளுக்கான தேவையை குறைப்பதே எமது நோக்கமாகும். இயற்கையான முறையில் குடல் வளர்ச்சியை ஊக்குவிக்க மேம்பட்ட சர்வதேச தரநிலைகளையொட்டி, மருத்துவம், அறுவைசிகிச்சை மற்றும் ஊட்டச்சத்து வழிமுறைகளுக்கு நாங்கள் முன்னுரிமையளிக்கிறோம். இச்சேவைகளை வழங்குவதில் கேர்வியூ ஹெல்த் அமைப்புடன் ஒரு கூட்டாண்மை செயல்பாட்டை தற்போது நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். இந்தியாவிலிருந்தும் மற்றும் அண்டை நாடுகளிலிருந்தும் அதிக எண்ணிக்கையிலான குழந்தைகள் இப்புதிய மையம் வழங்கும் சேவைகளினால் பலனடைவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.”
ரேலா மருத்துவமனையின் குடல் மறுவாழ்வு மற்றும் ஊட்டச்சத்து ஆதரவு மையத்தின் இயக்குனர் புரொஃபசர் அனில் வைத்யா கூறுகையில், “சிறுகுடல் (பச்சிளம் குழந்தைகளில் 10 அடி மற்றும் வயது வந்த நபர்களில் 20 அடி) மற்றும் பெருங்குடல் (ஏறக்குறைய 5 அடி) ஆகியவற்றை உள்ளடக்கிய மனித குடல் அமைப்பு செரிமானத்தில் மிக முக்கியப் பங்காற்றுகிறது. பெருங்குடல் இழப்பு குறைவான பாதிப்பை கொண்டிருக்கலாம் என்ற போதிலும், பெரும்பாலான செரிமானப் பணி நிகழும் சிறுகுடல் நமக்கு மிக அத்தியாவசியமானது. இதன் செயலிழப்பு, செரிமானமின்றி உணவு அனுப்பப்படுவதை விளைவிக்கும். குடல் செயலிழப்பு நேர்வுகளில் உயிர் பிழைப்பதற்கு சிரை வழியாக ஊட்டச்சத்து (குருதிக்குழாய் வழி ஊட்டம்) வழங்குவது அவசியமாகிறது. குடல் செயலிழப்பு மற்றும் சிக்கலான இரைப்பை குடல் பாதிப்புகள் உள்ள பச்சிளம் குழந்தைகள், குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத்தினருக்கு பல்வேறு துறைகள் சார்ந்த விரிவான ஆதரவை வழங்குவதில் எங்களது மையம் தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறது.” என்று கூறினார்.
ரேலா மருத்துவமனையின் மகளிர் மற்றும் குழந்தை நல துறையின் இயக்குனரும், குழந்தைகளுக்கான இரைப்பை குடலியல் நிபுணருமான டாக்டர். நரேஷ் சண்முகம் கூறியதாவது: “அறுவைசிகிச்சை அல்லது உறுப்புமாற்று சிகிச்சை வழங்கப்படுவதற்கு ஏதுவாக போதுமான உடல் எடையை பச்சிளம் குழந்தைகள் எட்டும் வரை, மருத்துவமனையிலும், வீட்டிலும் அவர்களுக்கு ஊட்டச்சத்து மற்றும் மருத்துவ ஆதரவை உள்ளடக்கிய விரிவான சேவைகள் தொகுப்பை இந்த குடல் மறுவாழ்வு மையம் வழங்கும். குடல் செயல்பாட்டிற்கு ஆதரவளிக்கும் மேம்பட்ட சிகிச்சை முறைகள், நோயாளிகளின் சிறப்பான சிகிச்சை விளைவுகளுக்கு தனிப்பயனாக்கப்பட்ட சிகிச்சை முறைகள், தடங்கலற்ற தொடர் சிகிச்சைக்காக கூட்டாளி மருத்துவமனைகளுடன் ஒத்துழைப்பு ஆகியவை இம்மையத்தின் சேவைகளுள் உள்ளடங்கும். மிக முக்கியமாக வீட்டிலேயே இன்றியமையாத ஊட்டச்சத்தை நோயாளிகள் பெறுவதை ஏதுவாக்க வீட்டில் குருதிக்குழாய் வழி ஊட்டம் (HPN) என அழைக்கப்படும் திட்டத்தை நாங்கள் வழங்குகிறோம். சிரை வழியாக ஊட்டம் வழங்கப்படும் முறையிலிருந்து வாய் வழியாக ஊட்டம் பெறுவதற்கு ஏற்றவாறு நோயாளிகளை மாற்றுவதற்கு எமது மருத்துவக்குழு செயலாற்றுகிறது. உறுப்புமாற்று சிகிச்சைக்கான தேவைகளை குறைக்கவும், நீண்டகால சிகிச்சை விளைவுகளை மேம்படுத்தவும் மற்றும் உடல்நல சிகிச்சைக்கான செலவுகளை குறைப்பதும் எமது நோக்கமாகும்.”
ரேலா மருத்துவமனையின் தலைமை செயலாக்க அதிகாரி டாக்டர். இளங்குமரன் கலியமூர்த்தி பேசுகையில், “எண்ணற்ற குழந்தைகள் பயனடையக்கூடிய தனித்துவமான சேவைகளுள் இதுவும் ஒன்றாக இருக்கும். இந்தியா மட்டுமல்லாது, அண்டை நாடுகளைச் சேர்ந்த குழந்தைகளும், பச்சிளம் குழந்தைகளும் இதனால் பயனடைவார்கள்.” என்று கூறினார்.