எஸ்.ஆர்.எம் கல்விக்குழுமம் மற்றும் எஸ்.ஆர்.எம் கலைஅறிவியல் கல்லூரி விளையாட்டுத் துறை. இந்திவியாவின்தேசிய விளையாட்டான ஹாக்கி விளையாட்டில் ஒரு உலகசாதனையை நிகழ்த்தியுள்ளது. ஆம் தொடர்ந்து 25 மணிநேரம் இடைவிடாது ஹாக்கி விளையாட்டை மாணவர்களைக்கொண்டு ஆட வைத்து இவ்வுலக சாதனைநிகழ்த்தப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சி ஜூலை 11ம் தேதி காலை9.10 மணிக்கு ஆரம்பித்து ஜூலை 12ம் தேதி காலை 10.10 வரை காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம் அறிவியல்கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்வை எஸ்.ஆர்.எம் கலைஅறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் விளையாட்டுத்துறையும், கலை அறிவியல் கல்லூரியும் இணைந்து ஏற்பாடுசெய்திருந்தனர். ஜூலை 11ம் தேதி காலை 9.10 மணியளவில்நிகழ்ச்சியின் தொடக்க விழா நடைபெற்றது. இதில்எஸ்.ஆர்.எம் அறிவியல் கல்லூரியின் முதல்வர் டாக்டர் இரா. வாசுதேவராஜ், எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பநிறுவனம் விளையாட்டு துறையின் இயக்குநர் டாக்டர் R. மோகனகிருஷ்ணன், நோவா உலகச் சாதனை விருதுஅமைப்பின் மதிப்பீட்டாளர் ஆகியோர் முன்னிலையில்நிகழ்ச்சி தொடங்கியது. இச்சாதனை நிகழ்வில் கலைஅறிவியல் கல்லூரி ஹாக்கி அணி வீரர்கள், எஸ்.ஆர்.எம்அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன அணி வீரர்கள்கலந்து கொண்டனர். தொடர்ந்து 25 மணிநேரம் மாணவர்கள்விளையாட்டை சளைக்காமல் விளையாடி இந்த உலகச்சாதனை நிகழ்த்தியுள்ளனர். இந்நிகழ்வை தொடர்ந்துகண்காணித்து வந்த நோவா உலகச் சாதனை அமைப்பினர்இன்று (12.07.2025.) காலை 10.10. மணிக்கு நிறைவுற்றஇச்சாதனையைப் பாராட்டி உலகச் சாதனை விருதினைஅறிவித்தனர். விழாவில் இந்நிகழ்வு முழுவதையும் ஏற்பாடுசெய்த எஸ்.ஆர்.எம் அறிவியல் கல்லூரி முதல்வர் மற்றும்ஹாக்கி விளையாட்டின் பயிற்சியாளரும் உடற்கல்விஇயக்குநருமான மற்றும் முனைவர் K. கோவர்தனன், இயக்குநர் முனைவர் R. மோகனகிருஷ்ணன், துணைமுதல்வர், நிர்வாக அதிகாரி, கணினி துறைத்தலைவர்ஆகியோர் பங்கேற்றனர். விளையாட்டில் சிறப்பாக விளங்கியமாணவர்களுக்கும், சிறப்பு அழைப்பாளர்களுக்கும் நோவாஉலகச் சாதனை அமைப்பினர் பதக்கங்கள் அணிவித்துபாராட்டினர்.
இந்நிகழ்வு இந்திய அளவில் முதன் முறையாகநிகழ்த்தப்பட்டுள்ளது என்பது பெருமிதத்துக்குரியது.
