சென்னை மார்ச் ஆம் தேதி 2026: சென்னையில் உள்ள ராயபுரம் பகுதியில் இயங்கி வரும் MV. Diabetes மற்றும் பேராசிரியர் எம் விஸ்வநாதன் Diabetes Research Centre இணைந்து 40 வது பேராசிரியர் எம் விஸ்வநாதன் தங்கப்பதக்கம் உரை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தனர்.
AVA குழுமத்தின் மேலாண்மை இயக்குனர் டாக்டர் AV அனுப் அவர்கள் இந்த வருடத்திற்கான MV Con Lifetime Achievement award என்ற வாழ்நாள் சாதனை விருதால் கௌரவிக்கப்பட்டார். ஆயுர்வேதம் மூலிகை மற்றும் உணவுப் பொருட்கள் துறையில் செயல்படும் இவர் ஆயுர்வேதம் மற்றும் நவீன மருத்துவத்தை இணைத்து பணியாற்றியுள்ளார். நீரிழிவு மருத்துவத்தில் ஆயுர்வேதத்தின் பங்கு முக்கியமானது என்று அவர் வலியுறுத்தினார்.
இந்த சிறப்பான நிகழ்வில் சென்னையில் உள்ள CFTI இயக்குனர் திரு முரளி K அவர்கள் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார். இந்திய அரசின் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் CFTI காலனி மற்றும் அதன் தொடர்புடைய துறைகளில் திறமையான பணியாளர்களை உருவாக்கும் முக்கிய நிறுவனமாகும்.
MV. Diabetes மற்றும் பேராசிரியர் எம் விஸ்வநாதன் Diabetes Research Centre-ன் தலைமை மருத்துவரான டாக்டர் விஜய் விஸ்வநாதன் அவர்கள் நிகழ்ச்சியில் வெளியிடப்பட்ட ‘Diabetic Foot’ புத்தகத்தைப் பற்றி விவரித்து பேசினார். இந்த சிறப்புமிக்க புத்தகமானது அவரின் மேம்பட்ட அனுபவத்தையும் ஆராய்ச்சி திறனையும் அவர் ஏன் Diabetic Foot ஆராய்ச்சியில் முன்னோடியாக உள்ளார் என்பதையும் பிரதிபலிக்கிறது.
மேலும் அவர் IWGDF (International working group on the diabetic foot) on wound healing and offloading guidlines 2027 ஆண்டிற்கான வழிகாட்டு நெறிமுறைகளிலும் அவருக்கான சிறந்த பங்களிப்பாற்றி வருகிறார்.
புதுச்சேரி மகாத்மா காந்தி மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் டீன் மற்றும் எமரிடஸ் பேராசிரியரான டாக்டர் அசோக் குமார் தாஸ் அவர்கள் இந்த 40-ஆம் ஆண்டிற்கான தங்கப்பதக்கம் உரையை வழங்கி அரசு மற்றும் நீரிழிவு தொடர்பான தனது கருத்துக்களையும் சிறப்பான முறையில் பகிர்ந்தார். இளம் வயது நீரிழிவு பதிவேடு YDR (Young Diabetes Registry). திட்டத்தில் முக்கிய பங்களிப்பு செய்தவர் என்பது அவரின் தனிச்சிறப்பு.
தனது உரையில் டாக்டர் தாஸ் அவர்கள் குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளில் நீரிழிவு அதிகமாக இருப்பதாகவும் 30 வயதிற்குட்பட்ட இளம் வயதினருக்கு நீரிழிவு அதிக பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் கூறி விளக்கினார்.
டாக்டர் விஜய் விஸ்வநாதன் அவர்கள் இந்த உரை மற்றும் புத்தக வெளியீடு நிகழ்வானது இந்தியாவில் நீரிழிவு சிகிச்சை குறித்து விழிப்புணர்வு முக்கியத்துவத்தை அதிகரிக்கும் என தெரிவித்தார். மேலும் ஒருங்கிணைந்த மற்றும் முழுமையான அணுகுமுறை அவசியம் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.
அரசு மருத்துவ நிர்வாக கட்டமைப்புகளும் மற்றும் பொது பொதுமக்களும் இணைந்து செயல்பட்டால் தான் இந்தியாவில் நீரிழிவு பிரச்சினையை கட்டுப்படுத்த முடியும் என்றும் அவர் கூறினார்.
RSSDI அமைப்பு பல துறைகளை இணைத்து நீரிழிவு பராமரிப்பில் முழுமையான அணுகு முறையை உருவாக்க முயலுகிறது. Save the feet keep walking 2.0 என்ற திட்டத்தின் மூலம் Diabetic Foot Ulcer’ பற்றிய தகவல்களை சேகரித்து சிகிச்சை முன்னேற்றத்தை மேம்படுத்துகிறது.
70 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்துடன் MV Diabetes நிறுவனமானது நீரிழிவு மற்றும் அதன் தொடர்புடைய பாதிப்புகளுக்கு முழுமையான சிகிச்சையை வழங்கும் திறமையான அணியை கொண்டு செயல்பட்டு வருகிறது.
