சென்னை, செப்டம்பர் 2025: அவ்தார் மனித மூலதனஅறக்கட்டளை ஆண்டுதோறும் உத்யோக் உத்சவ் என்றதொழில் தொலைநோக்கு நிகழ்வை நடத்துகிறது. ப்ராஜெக்ட்புத்திரி முயற்சியின் கீழ் நடத்தப்படும் இந்த நிகழ்வு, அரசு பள்ளிமாணவிகளுக்கு தொழில் நோக்கத்தை வளர்த்துக் கொடுத்து,பொருளாதார ரீதியாக சுதந்திரமாகவும் சமூக நம்பிக்கையுடனும்இருக்க அவர்களுக்கு வழிவகுக்கிறது.
இதன் சென்னை பதிப்பு அவதார் மனித மூலதனஅறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலரும் அவதார்குழுமத்தின் நிறுவனர்-தலைவருமான டாக்டர் சவுந்தர்யாராஜேஷின் தொடக்க உரையுடன் தொடங்கியது.
பின்தங்கிய வாழ்வாதாரத்தை சேர்ந்த மாணவிகளின் நிலையானவேலை நோக்கத்திற்காக முதன்முதலில் புராஜெக்ட் புத்ரிஎன்னும் முன்முயற்சியை அவதார் அறக்கட்டளை துவங்கியது. துவங்கப்பட்ட நாள் முதல் புத்ரி திட்டம் தமிழ்நாடு, புதுச்சேரி, தெலுங்கானா மற்றும் கர்நாடகா முழுவதும் 22,000க்கும்மேற்பட்ட பின்தங்கிய பள்ளி மாணவிகளின் வாழ்க்கையைமாற்றியுள்ளது. 130க்கும் மேற்பட்ட பள்ளிகளின் 8 முதல் 12 ஆம்வகுப்பு வரையிலான மாணவிகள் இந்த திட்டத்தில்ஈடுபடுத்தப்படுகிறார்கள். இத்திட்டம் தலைமைத்துவம், முடிவெடுத்தல், விமர்சன சிந்தனை மற்றும் மீள்தன்மைஉள்ளிட்ட 40 வகையான வாழ்க்கைத்திறன்களில்மாணவிகளுக்கு வாராந்திர பயிற்சி அளிக்கிறது. கூடுதலாக, 10 மற்றும்12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குமனோவியல் மதிப்பீடுகள் மற்றும் தொழில் வழிகாட்டுதல்வழங்கப்படுகிறது.
இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவிகளின் உறுதிமொழி, பங்கேற்ற பள்ளிகளுக்கு அங்கீகாரங்கள், பல்வேறுபோட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான விருதுகள், கலைநிகழ்ச்சிகள் புத்ரி மற்றும் நிபுணி மாணவிகளின்உணர்வுபூர்வமான சாட்சியங்கள் மேலும் 4 சிறந்தமாணவிகளுக்கான உதவித்தொகையும் வழங்கப்பட்டது. விழாவில் பங்கேற்ற முன்னணி கல்வி நிறுவனங்கள் மற்றும்தொழில்களின் அறிவுப்பகிர்வு அமர்வுகள் உயர்கல்வி மற்றும்தொழில் வாய்ப்புகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தின. 20க்கும் மேற்பட்ட தொழிற் நிறுவனங்கள் பங்கேற்றதன் மூலம், புத்ரி மாணவிகளுக்கான விலைமதிப்பற்ற அறிவுப்பகிர்வுதளத்தை இந்நிகழ்ச்சி வழங்கியது. 2017 ஆம் ஆண்டுதொடங்கப்பட்ட புத்ரி திட்டம் 13 முதல் 18 வயதுக்குட்பட்டபெண்களிடையே தொழில் நோக்கத்தை வளர்ப்பதில் கவனம்செலுத்தும் இந்தியாவின் முதல் முயற்சியாகும்.
நிகழ்வின் போது டாக்டர் சவுந்தர்யா ராஜேஷ் கூறுகையில், “ஒவ்வொரு பெண் குழந்தையும் அர்த்தமுள்ள ஒரு தொழிலைவிரும்ப வேண்டும், தனது வாழ்க்கையையும் பாதுகாப்பையும்பொறுப்பேற்கவேண்டும், பொருளாதார சுதந்திரத்தை அடையவேண்டும். ஒரு இடைவெளி எடுத்துக் கொண்டு மீண்டும்பணியிடத்தில் நுழைவதில் உள்ள சவால்களை நான்எதிர்கொண்ட போது, எண்ணற்ற பெண்கள் அதேபோராட்டத்தை எதிர்கொள்கிறார்கள் என்பதை உணர்ந்தேன். இது ஒரு சமூக நிறுவனத்தை உருவாக்க என்னைத் தூண்டியது, இது இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட இரண்டாம்நிலைப்பெண்கள் வேலைக்குத் திரும்புவதற்கு உதவியது. பெண்கள் நிதிரீதியாக சுதந்திரமாக இருக்கும் போது, அவர்கள்தங்கள் சொந்த வாழ்க்கையைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியையும் கணிசமாகஉயர்த்துகிறார்கள்.” என்று கூறினார்.
முதன்மை விருந்தினராக கலந்துகொண்ட ரேஸ் நிறுவனர்மற்றும் வெராண்டா போட்டித்தேர்வுகளின் தலைவர் திரு. பாரத்சீமான், கூட்டத்தில் உரையாற்றி, புத்திரி அறிஞர்கள் தங்கள்இலக்குகளை தைரியமும் உறுதியும் கொண்டு தொடரவேண்டும்என்று ஊக்கமளித்தார். “பெரிதினும் பெரியது கேள்” என்ற தமிழ்பழமொழியை மேற்கோள் காட்டிய அவர், சிறிய வாய்ப்புகளில்திருப்தி அடையாமல், உயர்ந்த இலக்குகளை நோக்கி பாடுபட்டுசிறப்பான வாழ்க்கையை உருவாக்குமாறு மாணவிகளைக்கேட்டுக் கொண்டார்
மேலும் பாட்ரிஷியன் கல்லூரி ஆஃப் ஆர்ட்ஸ் அண்ட் சயன்ஸ்துணைமுதல்வர் டாக்டர்பி. மீனா, இந்தியன் ஆயில்கார்ப்பரேஷன் லிமிடெட், எல்.பி.ஜி., TNSO பிரிவு தலைமைபொது மேலாளர் திரு. என். மனோகரன், யு.பி.எஸ். இந்தியாடெக்னாலஜி சென்டர் மூத்த இயக்குநர் திருமதி எஸ். வைஜயந்தி ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றிஇந்நிகழ்ச்சியினை சிறப்பித்தனர்.
