சென்னை, பிப். :
ஆழ்வார்பேட்டையில் உள்ள C.P. ஆர்ட் சென்டரில் “பாரம்பரியம்” கைநெசவு & கைவினைப் பொருட்கள் கண்காட்சி சிறப்பாக தொடங்கியுள்ளது. பிப்ரவரி 12 முதல் 15 வரை நடைபெறும் இந்நிகழ்வை எழுத்தாளர், வரலாற்றாளர் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர் டாக்டர் நந்திதா கிருஷ்ணா அவர்கள் திறந்து வைத்தார். Aurv Organics நிறுவனர் விக்னேஸ்வரி D மற்றும் நடிகர் மகேஷ் பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கைவினைஞர்கள் தங்கள் கைநெசவு துணிகள் மற்றும் கைவினைப் பொருட்களை காட்சிப்படுத்தியுள்ளனர். மண்பாண்டம் தயாரித்தல் மற்றும் பேப்பர் மேஷே பொம்மைகள் உருவாக்குதல் போன்ற நேரடி கைவினைப் பயிற்சி மையங்கள் பார்வையாளர்களை ஈர்த்து வருகின்றன. குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் ஆர்வமுடன் பங்கேற்று பாரம்பரிய கலைகளை அனுபவித்து வருகின்றனர்.
பாரம்பரிய கைவினை மற்றும் கலாச்சாரத்தை இளம் தலைமுறைக்கு கொண்டு செல்லும் நோக்குடன் நடைபெறும் இக்கண்காட்சி பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
