
திருச்சி, ஜூலை 28
இந்தியாவின் மிகவும் நம்பகமான தனியார் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ், 2026 ஆம் ஆண்டிற்கான பாரா விளையாட்டுப் போட்டிகள் பருவத்திற்கான இந்திய குழுவினரின் ‘முதன்மை பங்காளராக’ மாறுகின்ற வகையில், இந்திய பாராலிம்பிக் குழுவுடன் தனது கூட்டாண்மையை வலுப்படுத்துவதாக அறிவித்துள்ளது. கிளாஸ்கோவில் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் பாரா விளையாட்டுப் போட்டிகள் 2026 மற்றும் ஜப்பானின் ஐச்சி- நகோயாவில் நடைபெறவிருக்கும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் 2026க்குச் செல்லவிருக்கும் இந்திய பாராலிம்பிக் குழுவினருக்கு இந்நிறுவனம் ‘அதிகாரப்பூர்வ ஆயுள் காப்பீட்டு கூட்டாளர்’ ஆக செயல்படும். நம்பிக்கை, தயார் நிலை மற்றும் ஆதரவு ஆகியவற்றின் மூலம் தனிநபர்கள் தொடர்ந்து எல்லைகளைத் தாண்டி விதிவிலக்கான பயணங்களை உருவாக்க முடியும் என்ற பகிரப்பட்ட நம்பிக்கையை இந்த கூட்டாண்மை வலுப்படுத்துகிறது.
இந்த கூட்டாண்மை குறித்து, எஸ்பிஐ லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் பிராண்ட், கார்ப்பரேட் கம்யூனிகேஷன் மற்றும் சிஎஸ்ஆர் தலைவர் ரவீந்திர ஷர்மா கூறும்பொழுது,” 2026-ம் ஆண்டு பாரா விளையாட்டு பருவத்திற்கான இந்திய அணியின் முதன்மை கூட்டாளராக பிசிஐ உடனான எங்களின் கூட்டாண்மையை நாங்கள் வலுப்படுத்தும் வேளையில், உலக மேடையில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்த மிகச் சிறந்த விளையாட்டு வீரர்களுடன் நிற்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குவதை ஆதரிப்பதையும் தாண்டி, தனிநபர்களும் குடும்பங்களும் எதிர்காலத்தை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளத் தயார்படுத்திக்கொள்ள உதவுவதிலும், இதன் மூலம் தங்களுக்கு மிக முக்கியமானவற்றில் கவனம் செலுத்த அவர்களை ஊக்குவிப்பதிலும் உள்ள எங்கள் பரந்த அர்ப்பணிப்பை இந்த கூட்டாண்மை பிரதிபலிக்கிறது. “என்று கூறினார்.
