
ஜீலை:29
ஆண்டு வருமான உச்சவரம்பை பூசாரிகள் நலவாரிய உறுப்பினர்களுக்கு ரூ.1 லட்சமாக உயர்த்தப்பட்டது போல் பூசாரி ஓய்வூதியம் பெறவும் வருமான உச்சவரம்பை ரூ 1லட்சமாக உயர்த்த வேண்டும்….கோவில் பூசாரிகள் நலச் சங்கம் மாநிலத் தலைவர் வாசு பூசாரி அறிக்கை…
கடந்த காலங்களில் கிராம கோவில் பூசாரிகள் நல வாரியத்தில் உறுப்பினர்களாகச் சேருவதற்கும் 60 வயதுக்கு மேற்பட்ட கிராம கோவில் முதிய பூசாரிகள் ஓய்வூதியம் பெறுவதற்கும் ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.72 ஆயிரம் என்ற அளவில் இருந்தது.
இந்நிலையில் நல வாரிய உறுப்பினர்களாகச் சேருவதற்கு ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.1 லட்சம் வரை என இந்து சமய அறநிலையத்துறை அனுமதி அளித்துள்ளது. அதே சமயம் பூசாரிகள் ஓய்வூதியம் பெறுவதற்கான ஆண்டு வருமான உச்சவரம்பு உயர்த்தப்படாமல் ரூ 72,000 என்ற அளவிலேயே இருந்து வருவது பல்வேறு முரண்பாடுகளும், குழப்பங்களும்,
பூசாரிகளிடத்தில் எழுந்துள்ளது, பூசாரிகள் நலவாரியமும், பூசாரிகள் ஓய்வூதியம், இத்துறை காட்டுப்பாட்டில் இல்லாத திருக்கோவில்களில் பணியாற்றும் பூசாரிகளுக்கான திட்டம் இதில் நலத்திட்ட பெறுவதற்கு இரண்டு விதமான வருமான உச்சவரம்பு பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்துகிறது. இது தொடர்பாக கடந்த ஆண்டு அரசுக்கும், ஆணையருக்கும், பூசாரி ஓய்வூதியம் பெற வருமான உச்சவராம்பு ரூ 1லட்சமாக உயர்த்த தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது எனவே ஆணையர் மேற்கண்ட கோரிக்கையினை ஏற்று அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும்.கிராமப்புற பூசாரிகள் நலவாரிய உறுப்பினர்களுக்கு மற்றும் ஒருகால பூஜை நடைபெறும் திருக்கோவில்களில் பணியாற்றும் 10,000 பூசாரிகளுக்கு இருசக்கர வாகனம் வாங்க அரசு மானியம் பூசாரி ஒருவருக்கு ரூ.12 ஆயிரம் வீதம்
ரூ.12 கோடி நிதி ஒதுக்கி திட்டம் அறிவிக்கப்பட்டது
இருசக்கர வாகனம் வாங்குவதற்கு சுமார் ரூ.80 ஆயிரம் வரை தேவைப்படும் நிலையில் இருசக்கர வாகனம் வாங்க பூசாரி ஒருவருக்கு ரூ.12 ஆயிரம் மானியம் வழங்கப்படும் என அவசர கோலத்தில் அறிவித்த திட்டம் மேற்கண்ட திட்டத்தின் படி
ரூ.12ஆயிரம் ரூபாய் அரசு மானியம் பெற பூசாரிகள் முன்வைரவில்லை மீதி தொகையை செலுத்தி வாகனம் வாங்க பூசாரிகளிடம் போதிய வசதி இல்லை பள்ளிவாசலில் பணியாற்றும்
முல்லா மார்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க ரூ.50,000 ரூபாய் மானியம் வழங்கும் அரசு ஆண்டுக்கு பலகோடி ரூபாய் திருக்கோவில் மூலம் வருவாய் வரும் நிலையில் பூசாரிகளுக்கு இருசக்கர வாகனம் வாங்க ரூ.12,000 ரூபாய் மானியம் வழங்குவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் ரூ.12000 தை
ரூ.50,000 மாக அரசு மானியத்தை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தற்பொழுது தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் புதிய அரசு சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில் அனைவருக்கும் பாகுபாடின்றி பூசாரிகள் இருசக்கர வாகனம் வாங்க ரூ.50,000 அரசு மானியம் வழங்க நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.சென்னையில் செயல்படும் ஆணையர் அலுவலகம் நிர்வாக நலன்கருதி இரண்டாக பிரித்து கிளை அலுவலகம் ஏற்படுத்த வேண்டுமென தொடர்ந்து கோவில் பூசாரிகள் நலச் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது, தற்பொழுது அறநிலையத்துறை நிர்வாக வசதிக்காக வடக்கு (சென்னை) தெற்கு (திருச்சி) என இரண்டு மண்டலங்கள் பிரிப்பு புதிய மண்டலங்களுக்கு கூடுதல் ஆணையர்களை நியமித்ததின் மூலம் பல்வேறு பணிகள் வேகமாக செயல்படும் இதன்மூலம் பணிச்சுமை பயண நேரம் குறைக்கப்படுவதால் திட்டங்கள் திருக்கோவில்களுக்கும், பக்தர்களுக்கும் விரைந்து சென்றடையும். இதற்கு முதல்வருக்கும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.பூசாரி ஓய்வூதியம் பெற வருமான உற்சவரம்பு ஒரு லட்சமாக உயர்த்த வேண்டும்.பூசாரிகள் இருசக்கரம் வாகனம் வாங்க அரசு மானியம் 12000 என்பதை ஐம்பதாயிரம் ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
