March 12, 2026

Day: March 12, 2026

சர்வதேச மகளிர் தினம், 8 மார்ச் 2026 அன்று திருநின்றவூர் அருகே கசுவா கிராமத்தில்அமைந்துள்ள சேவாலயாவின் மையத்தில் கொண்டாடப்பட்டது. எ ஃபியூச்சர் ஃபார்எவ்ரி சைல்டு (AFEC) தொண்டு நிறுவன இணை நிறுவனர்மற்றும் தலைவர் கீதா கோபால் மற்றும் நிர்வாக இயக்குனர்அனுசூயா ராவ் ஆகியோர் விழாவில் சிறப்பு விருந்தினர்களாகக்கலந்து கொண்டனர். விழாவில் தன்னார்வலர்களாகபணிபுரிந்து வரும் வழக்கறிஞர் சரஸ்வதி அவர்களும்இங்கிலாந்து, ஸ்காட்லாந்து மற்றும் கனடா ஆகிய நாடுகளைசேர்ந்த ஈவ், மார்த்தா மற்றும் அர்ச்சனா ஆகியோரும்பங்கேற்றனர். எ ஃபியூச்சர் ஃபார் எவ்ரி சைல்டு என்பது குழந்தைகள்பராமரிப்பு இல்லங்களிலிருந்து வெளியேறும்இளைஞர்களுக்கு உயர் கல்வி அளித்து வேலைவாய்ப்புக்களைஉருவாக்கும் நோக்கத்தில் செயல்படும் நிறுவனம் ஆகும். AFEC சேவாலயாவுடன் இணைந்து இத்திட்டத்தைதமிழ்நாட்டில் செயல்படுத்தி வருகிறது. விழாவில் பேசுகையில் அனுசூயா ராவ்  அவர்கள், “பெண்கள்பல காலமாக பல்வேறு தடைகள் மற்றும் பின்னடைவுகளைசந்தித்துள்ளனர். அநீதிகளுக்கு எதிராக பெண்கள் பலஇடங்களில் போராடினர். பெண்களின் உரிமைகளை காக்கவேண்டும். ஆணும் பெண்ணும் சமம் என்ற கொள்கையைபின்பற்ற வேண்டும்” என்று கூறினார். கீதா கோபால் அவர்கள் தனது உரையில், “என் அப்பாவுக்குஇரண்டு பெண் குழந்தைகள்தான். ஆண் குழந்தை இல்லை. ஒருநாளும் நாங்கள் யாரையும் விட குறைவானவர்கள் என்றுஉணர வைக்கவில்லை. பதினேழு வயதிலேயே என்னைவெளியூரில் படிக்க அனுப்பினார். பலர் அவரிடம் கேள்விகேட்டார்கள். ஆனால் அவர் என்னை முழுமையாக நம்பினார். சில நேரங்களில் ஒரே ஒரு மனிதரின் நம்பிக்கை போதும். ஒருவரை முன்னேற்றத்திற்கு கொண்டு செல்ல. இன்றுநாங்கள் உங்களுக்காக அந்த ஒரே மனிதராக இருக்கவிரும்புகிறோம். உங்களுள் பலர் மற்றவர்களை விட மிகவும்சீக்கிரமே பெரிய பொறுப்புகளை ஏற்றிருக்கிறீர்கள். சிலருக்குஇழப்புகளும் வந்திருக்கலாம். ஆனால் இதையெல்லாம்தாண்டி, நீங்கள் உங்கள் வாழ்க்கையை உருவாக்கிக்கொண்டிருக்கிறீர்கள். இது மிகப்பெரிய வலிமை. நாளையஉலகம் உங்களைப் போன்ற பெண்களால் தான் உருவாகப்போகிறது” என்று கூறினார். வழக்கறிஞர் சரஸ்வதி அவர்கள் பேசுகையில், “சந்தோஷம்நமக்குள்ளேயே இருக்கிறது. யாரையும் முழுமையாகநம்புவதற்கு முன் முதலில் நம்மை நாமே நம்ப வேண்டும்”, என்று கூறினார். தன்னார்வலர் அர்ச்சனா  பேசுகையில்“எங்கள் நாட்டிலும் பெண்கள் பல தடைகளை கடந்து பலசாதனைகளைப் படைத்து வருகின்றனர். நானும் அவர்களைபோல் பல சாதனைகளைப் படைப்பேன்” என்று கூறினார். தன்னார்வலர்கள் ஈவ் மற்றும் மார்த்தா பேசுகையில்“ஆண்களால் செய்ய முடிந்த எல்லாவற்றையும் பெண்களால்செய்ய முடியும். பல துறைகளில் பெண்கள் முன்னேற்றம்அடைந்து வருகின்றனர்” என்று கூறினார். ஆசிரியர்கள் வழிகாட்டுதலுடன் சேவாலயா பள்ளி மாணவர்கள்  தயாரித்து வெளியிடும்மாதாந்திர கையெழுத்து இதழான ‘விடியல்’ வெளியிடப்பட்டது.  முன்னதாகமாணவர்களுக்கு ஊக்க மனநிலை பற்றிய ஒரு காணொளிஒளிபரப்பப்பட்டது. முன்னதாக, சேவாலயாவின் ஈ ஆர் பி துறைத்  தலைவர் சுஜாதாபெ அவர்கள் வரவேற்புரை வழங்கி பேசினார். “மாதர் தம்மைஇழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்” என்றபாரதியாரின் கவிதையை முன்  மொழிந்து, சிறப்பு விருந்தினர்அவர்கள் நமது சேவாலயா நிறுவனத்தின் மூலம் பல பெண்குழந்தைகளுக்கு உதவி செய்து வருகின்றனர்” என்று கூறி, சேவாலயாவின் பல்வேறு செயல்பாடுகள் குறித்து விளக்கினார். மாணவ மாணவியர் வண்ணமயமான கலை நிகழ்ச்சிகளைவழங்கினர். சிறப்பு விருந்தினருக்கு  நினைவுப் பரிசினை இல்லங்கள்மற்றும் பண்புக்கல்வி துறைத் தலைவர்  காஞ்சனா ச அவர்கள்வழங்கினார்.  நிறைவாக  சேவாலயாவின் கல்வித் துறைத்தலைவர் விஜயா ஆர் அவர்கள் நன்றியுரை வழங்கினார். சர்வதேச பெண்கள் தினம், சேவாலயாவின் அம்பத்தூர், உத்திரமேரூர், தர்மபுரி, ஜமீன் எண்டத்தூர் மற்றும் தஞ்சாவூர்மையங்களிலும் கொண்டாடப்பட்டது....