சென்னை, நவம்பர் 2026: சர்வதேச போட்டிகளில்நேர்த்தியான சாதனைகளைப் படைத்து, தங்களது கல்விநிறுவனத்திற்கும், நாட்டிற்கும் பெருமை சேர்த்த ஆறுமாணாக்கர்கள் மற்றும் ஒரு முன்னாள் மாணவியின் சிறப்பானசெயல்பாட்டைக் கவுரவிக்கும் விதமாக, எஸ்.ஆர்.எம் அறிவியல்மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (SRMIST) அவர்களுக்குரொக்கப் பரிசுகளாக ரூ.23 லட்சம் என்ற தொகைவழங்கப்படுவதை மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது. ஜப்பானில் நடைபெற்ற 20-வது ஆசிய விளையாட்டுப்போட்டிகளில் (ஐச்சி-நகோயா 2026) பதக்கம் வென்றவர்கள்மற்றும் 2025-26 கல்வியாண்டில் சதுரங்கத்தில் (செஸ்) மதிப்புமிக்க கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை வென்ற 3 மாணவர்களைப் பாராட்டுவதற்காக இந்த விழாவைஇப்பல்கலைக்கழகம் சிறப்பாக நடத்தியது. SRMIST-ன்நிறுவனர் மற்றும் வேந்தர் டாக்டர் டி.ஆர்.பாரிவேந்தர் அவர்கள்இவ்விழாவிற்குத் தலைமை தாங்கினார். ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், மூன்றாம் ஆண்டு பி.சி.ஏ(தரவு அறிவியல்) மாணவரான திருமுரு கணேஷ் மணி ரத்னம், வில்வித்தையில் ஒருங்கிணைந்த ஆடவர் குழு பிரிவில் தங்கப்பதக்கமும், ஒருங்கிணைந்த தனிநபர் பிரிவில் வெண்கலப்பதக்கமும் வென்று இப்போட்டியில் சிறந்த வீரர் என்பதைநிரூபித்திருக்கிறார். இரண்டாம் ஆண்டு பி.டெக் (ECE) மாணவியான ஷமீனா ரியாஸ் மகளிர் ஸ்குவாஷ் போட்டியில்வெண்கலப் பதக்கம் வென்றார். எம்பிஏ முடித்த SRMIST – ன்முன்னாள் மாணவி நேத்ரா குமணன், ILCA 6 மகளிர் பாய்மரப்படகோட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கத்தைக்கைப்பற்றினார். சர்வதேச விளையாட்டு அரங்கில் இந்த சிறப்பானசாதனைகளை நிகழ்த்தி, ஆசிய விளையாட்டுப் போட்டியில்பதக்கம் வென்ற 3 பேருக்கும் SRMIST சார்பில் மொத்தத்தில்ரூ.20 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படுகிறது. இதில் திருமுருகணேஷ் மணி ரத்னத்திற்கு ரூ.10 லட்சமும், ஷமீனா ரியாஸ்மற்றும் நேத்ரா குமணனுக்கு தலா ரூ.5 லட்சமும் பரிசாகவழங்கப்படவுள்ளது. SRMIST-ன் விளையாட்டுச் சாதனைகள் வரலாற்றில் மற்றொருமைல்கல்லாக, இக்கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த ஸ்ரீஹரிL.R.,ஹரி கிருஷ்ணன் A. RA, மற்றும் V. S. ராகுல் ஆகியமூன்று செஸ் வீரர்கள் 2025-2026 கல்வியாண்டில் மதிப்புமிக்ககிராண்ட்மாஸ்டர் பட்டத்தைப் பெற்றுள்ளனர். இதன் மூலம், ஒரே கல்வியாண்டில் மூன்று கிராண்ட்மாஸ்டர்களைஉருவாக்கிய இந்தியாவின் முதல் பல்கலைக்கழகம் என்றபெருமையை இது பெற்றுள்ளது. வடபழனி வளாகத்தைச் சேர்ந்த மூன்றாம் ஆண்டு பி.காம்மாணவரான ஸ்ரீஹரி, இந்தியாவின் 86-வது கிராண்ட்மாஸ்டராகஉருவெடுத்துள்ளார். வடபழனி வளாகத்தின் இரண்டாம் ஆண்டுஎம்.காம் மாணவர் ஹரி கிருஷ்ணன் இந்தியாவின் 87-வதுகிராண்ட்மாஸ்டராகவும், காட்டாங்குளத்தூர் வளாகத்தின்இரண்டாம் ஆண்டு எம்பிஏ மாணவர் ராகுல் இந்தியாவின் 91-வது கிராண்ட்மாஸ்டராகவும் தகுதி பெற்றுள்ளனர். கௌரவம்மிக்க இச்சாதனையை அங்கீகரிக்கும் வகையில், மூன்றுகிராண்ட்மாஸ்டர்களுக்கும் தலா ரூ.1 லட்சம் என்றபரிசுத்தொகையை SRMIST வழங்குகிறது. விளையாட்டுப் போட்டிகளில் தங்களின் திறமைகளைவெளிப்படுத்திய 6 சாதனையாளர்களையும் கௌரவிக்கும்விதமாக மொத்தம் ரூ.23 லட்சத்தை SRMIST ரொக்கப் பரிசாகவழங்குகிறது. இதில் ஆசிய விளையாட்டுப் போட்டியில்பதக்கம் வென்ற 3 பேருக்கு ரூ.20 லட்சமும், 3 கிராண்ட்மாஸ்டர்களுக்கு ரூ.3 லட்சமும் வழங்கப்படுகிறது. இது குறித்துப் பேசிய *டாக்டர் T. R. பாரிவேந்தர்*...
Day: November 3, 2026
சென்னை, நவம்பர் , 2026: பாரத் பல்கலைக்கழகம் என்று பரவலாக அறியப்படும் பாரத் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) 2025–2026...
