சென்னை, நவம்பர் 2026: சர்வதேச போட்டிகளில்நேர்த்தியான சாதனைகளைப் படைத்து, தங்களது கல்விநிறுவனத்திற்கும், நாட்டிற்கும் பெருமை சேர்த்த ஆறுமாணாக்கர்கள் மற்றும் ஒரு முன்னாள் மாணவியின் சிறப்பானசெயல்பாட்டைக் கவுரவிக்கும் விதமாக, எஸ்.ஆர்.எம் அறிவியல்மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (SRMIST) அவர்களுக்குரொக்கப் பரிசுகளாக ரூ.23 லட்சம் என்ற தொகைவழங்கப்படுவதை மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது.
ஜப்பானில் நடைபெற்ற 20-வது ஆசிய விளையாட்டுப்போட்டிகளில் (ஐச்சி-நகோயா 2026) பதக்கம் வென்றவர்கள்மற்றும் 2025-26 கல்வியாண்டில் சதுரங்கத்தில் (செஸ்) மதிப்புமிக்க கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை வென்ற 3 மாணவர்களைப் பாராட்டுவதற்காக இந்த விழாவைஇப்பல்கலைக்கழகம் சிறப்பாக நடத்தியது. SRMIST-ன்நிறுவனர் மற்றும் வேந்தர் டாக்டர் டி.ஆர்.பாரிவேந்தர் அவர்கள்இவ்விழாவிற்குத் தலைமை தாங்கினார்.
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், மூன்றாம் ஆண்டு பி.சி.ஏ(தரவு அறிவியல்) மாணவரான திருமுரு கணேஷ் மணி ரத்னம், வில்வித்தையில் ஒருங்கிணைந்த ஆடவர் குழு பிரிவில் தங்கப்பதக்கமும், ஒருங்கிணைந்த தனிநபர் பிரிவில் வெண்கலப்பதக்கமும் வென்று இப்போட்டியில் சிறந்த வீரர் என்பதைநிரூபித்திருக்கிறார். இரண்டாம் ஆண்டு பி.டெக் (ECE) மாணவியான ஷமீனா ரியாஸ் மகளிர் ஸ்குவாஷ் போட்டியில்வெண்கலப் பதக்கம் வென்றார். எம்பிஏ முடித்த SRMIST – ன்முன்னாள் மாணவி நேத்ரா குமணன், ILCA 6 மகளிர் பாய்மரப்படகோட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கத்தைக்கைப்பற்றினார்.
சர்வதேச விளையாட்டு அரங்கில் இந்த சிறப்பானசாதனைகளை நிகழ்த்தி, ஆசிய விளையாட்டுப் போட்டியில்பதக்கம் வென்ற 3 பேருக்கும் SRMIST சார்பில் மொத்தத்தில்ரூ.20 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படுகிறது. இதில் திருமுருகணேஷ் மணி ரத்னத்திற்கு ரூ.10 லட்சமும், ஷமீனா ரியாஸ்மற்றும் நேத்ரா குமணனுக்கு தலா ரூ.5 லட்சமும் பரிசாகவழங்கப்படவுள்ளது.
SRMIST-ன் விளையாட்டுச் சாதனைகள் வரலாற்றில் மற்றொருமைல்கல்லாக, இக்கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த ஸ்ரீஹரிL.R.,ஹரி கிருஷ்ணன் A. RA, மற்றும் V. S. ராகுல் ஆகியமூன்று செஸ் வீரர்கள் 2025-2026 கல்வியாண்டில் மதிப்புமிக்ககிராண்ட்மாஸ்டர் பட்டத்தைப் பெற்றுள்ளனர். இதன் மூலம், ஒரே கல்வியாண்டில் மூன்று கிராண்ட்மாஸ்டர்களைஉருவாக்கிய இந்தியாவின் முதல் பல்கலைக்கழகம் என்றபெருமையை இது பெற்றுள்ளது.
வடபழனி வளாகத்தைச் சேர்ந்த மூன்றாம் ஆண்டு பி.காம்மாணவரான ஸ்ரீஹரி, இந்தியாவின் 86-வது கிராண்ட்மாஸ்டராகஉருவெடுத்துள்ளார். வடபழனி வளாகத்தின் இரண்டாம் ஆண்டுஎம்.காம் மாணவர் ஹரி கிருஷ்ணன் இந்தியாவின் 87-வதுகிராண்ட்மாஸ்டராகவும், காட்டாங்குளத்தூர் வளாகத்தின்இரண்டாம் ஆண்டு எம்பிஏ மாணவர் ராகுல் இந்தியாவின் 91-வது கிராண்ட்மாஸ்டராகவும் தகுதி பெற்றுள்ளனர். கௌரவம்மிக்க இச்சாதனையை அங்கீகரிக்கும் வகையில், மூன்றுகிராண்ட்மாஸ்டர்களுக்கும் தலா ரூ.1 லட்சம் என்றபரிசுத்தொகையை SRMIST வழங்குகிறது.
விளையாட்டுப் போட்டிகளில் தங்களின் திறமைகளைவெளிப்படுத்திய 6 சாதனையாளர்களையும் கௌரவிக்கும்விதமாக மொத்தம் ரூ.23 லட்சத்தை SRMIST ரொக்கப் பரிசாகவழங்குகிறது. இதில் ஆசிய விளையாட்டுப் போட்டியில்பதக்கம் வென்ற 3 பேருக்கு ரூ.20 லட்சமும், 3 கிராண்ட்மாஸ்டர்களுக்கு ரூ.3 லட்சமும் வழங்கப்படுகிறது.
இது குறித்துப் பேசிய *டாக்டர் T. R. பாரிவேந்தர்* , “அர்ப்பணிப்பு, ஒழுக்கம், விடாமுயற்சி மற்றும்வரம்பெல்லைகளையும் கடந்து சாதிக்க வேண்டும் என்றமனஉறுதி ஆகியவற்றின் வழியாக மட்டுமே சிறப்பானவெற்றிகளையும், சாதனைகளையும் அடைய முடியும் என்றுஇப்பல்கலையில் நாங்கள் நம்புகிறோம். சர்வதேச அளவில்எங்கள் மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவி படைத்துள்ளமகத்தான சாதனைகளும், ஒரே கல்வியாண்டில் சதுரங்கத்தில்மூன்று மாணவர்கள் மதிப்புமிக்க கிராண்ட்மாஸ்டர் பட்டத்தைவென்றதும், எங்கள் கல்வி நிறுவனத்தில் வழங்கப்படும்ஊக்கத்திற்கும், முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளுக்கும் சிறந்தசான்றாகும். இந்த சாதனைகள் எமது பல்கலைக்கு மட்டுமின்றி, நம் நாட்டிற்கும் பெருமையை சேர்த்திருக்கின்றன” என்றுகூறினார்.
இந்தியாவின் 2036 ஒலிம்பிக் கனவுகளுக்குப் பங்களிக்கும்வகையில், விளையாட்டுத் திறன்களை வளர்ப்பது, சிறப்பானசெயல்பாட்டை ஊக்குவிப்பது மற்றும் எதிர்காலசாம்பியன்களை உருவாக்குவது ஆகியவற்றை நோக்கமாகக்கொண்ட இப்பல்கலையின் மாண்புமிகு நிறுவனர் – வேந்தரின்தொலைநோக்குப் பார்வை மற்றும் அர்ப்பணிப்பின் சிறப்பானபலன்களை இச்சாதனைகள் பிரதிபலிக்கின்றன.
