
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி வட்டம் பொன்பாடி சோதனை சாவடியில் நேற்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர்
.கே.ஏ.செங்கோட்டையன். உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் .பி. வெங்கட்ராமணன் ஆகியோர் மாவட்ட ஆட்சித்தலைவர்
.ச.கவிதா, முன்னிலையில் பிற மாநிலங்களில் இருந்து நெல் ஏற்றி வரும் வாகனங்களை பரிசோதனை செய்வது தொடர்பாகவும், பராமரிக்கப்படும் பதிவேடுகளையும் ஆய்வு செய்து விபரங்களை கேட்டறிந்து, வாகனங்களை எவ்வித இடையூறுமின்றி செல்லும் வகையில் போக்குவரத்தை முறைபடுத்தி கண்காணித்து விழிப்புடன் பணியாற்ற சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டனர். திருத்தணி கூடுதல் காவல் கண்காணிப்பாளர்
.சுபம் திமான், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் .ராமகிருஷ்ணன், திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் .
ராஜகோபால், திருத்தணி வட்டாட்சியர்
செந்தில்குமார் மற்றும் பல்துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.
