
வேலூர் மாவட்டம் அரசு மாதிரி பத்திரப்பதிவு மையத்தை தொடங்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு பத்திரம் நகல் எழுதுவோர் சங்கம் வேலூர் மாவட்டம் சார்பில் 26.10.2026, கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் காட்பாடி சார் பதிவாளர் அலுவலகம் வளாகத்தில் மாநில துணை அமைப்புச் செயலாளர் டாக்டர் ஆர் எஸ் ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது. பொதுமக்களின் சொத்து பாதுகாப்பு கேள்விக்குறியாகும் எனவும் தனியார் மையம் மூலம் பத்திரங்கள் உருவாக வாய்ப்புள்ளதாகவும் இதனால் 5 லட்சம் குடும்பங்கள் பாதிக்கப்படும் என்றும் தற்போதுள்ள பத்திரம் எழுதர்கள் வாழ்வாதாரம் காக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.உடன் தமிழ்நாடு பத்திரம் நகல் எழுதுவோர் சங்கம் வேலூர் மாவட்டம் காட்பாடி நிர்வாகிகள் உறுப்பினர்கள்
பலர் கலந்து கொண்டனர்.
