
செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் அருகே உள்ள பெரிய ஏரிக்கரை பகுதியில்
3000-த்துக்கும் மேற்பட்ட
பனை விதைகள் நடும் நிகழ்ச்சி விதையின் சிறகுகள் பொதுநல அமைப்பின் சார்பாக நடைபெற்றது.
இதில் செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் தியாகராஜன், நந்திவரம் கூடுவாஞ்சேரி நகர மன்ற தலைவர் வழக்கறிஞர் லோகநாதன், வண்டலூர் வட்டாட்சியர் தேவேந்திரன், விதையின் சிறகுகள் அமைப்பின் நிறுவனத் தலைவர் ஜான் ஜோயல் ஆகியோர் கலந்து கொண்டு பனை விதைகளை நடவு செய்து துவக்கி வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து
எஸ் ஆர் எம் கல்லூரி மாணவ மாணவிகள், அரசுபள்ளி மாண மாணவிகள் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு ஏரிக்கரை முழுக்க பனை விதைகளை நடவு செய்தனர்.
மேலும் நிகழ்ச்சியில் நந்திவரம் கூடுவாஞ்சேரி நகர த வெ.க. நிர்வாகி தமிழன் பார்த்தசாரதி, மற்றும் நகர நிர்வாகிகள்,
சமூக ஆர்வலர்கள், இயற்கை ஆர்வலர்கள் கலந்து கொண்டு பிளாஸ்டிக்கை ஒழிப்போம் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
