
கோவை மாவட்டம் சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனமும், மவுண்ட் கார்மல் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியும் இணைந்து நடத்திய உலக சாதனை நிகழ்வில், 75 மாணவர்கள் 40 நிமிடங்களில் 365 நாட்களுக்கான சிறப்பு தினங்களை வரிசைப்படுத்தி சாதனை படைத்தனர் மாணவர்களின் தன்னம்பிக்கை, நினைவாற்றல் மற்றும் தனித்திறன்களை ஊக்குவிக்கும் நோக்கில், நடைபெற்ற இந்நிகழ்வில் சோழன் உலக சாதனைப் புத்தகத்தின் நிறுவனர் டாக்டர் நிலவன், பொதுச் செயலாளர் கோன் ஆதிரை, மேலாளர் நீலமேகம், கோவை மாவட்டத் தலைவர் பாலமுரளிகிருஷ்ணன், மாவட்டச் செயலாளர் திலகவதி ஆகியோர் கலந்து கொண்டனர் மேலும், பள்ளியின் தாளாளர் ஏ.சுகிர்தா ரோசலிண்ட், அறங்காவலர் ஐ. வனிதா, ஏக்னஸ் நர்சரி மற்றும் தொடக்கப்பள்ளி தாளாளர் சுரேஷ், பையோலிவ் மற்றும் டி.என்.ஏ. ஹோட்டல்களின் செயல்பாடு மற்றும் விற்பனை இயக்குநர் பூர்ண சந்திர குப்தா, யூகோ வங்கியின் பிரதான கிளை தலைமை மேலாளர் ரஞ்சித்குமார், ஸ்ரிடெக்ஸ் நிறுவன இயக்குநர் ஸ்ரீராம் பிரபு, ஜேகேடிசி கலாச்சாரக்கூட நிறுவனர் சிரில் வினோத், பள்ளியின் முன்னாள் மாணவர் யோகேஷ் உள்ளிட்டோர் பங்கேற்று மாணவர்களின் சாதனையைப் பாராட்டினர் இச்சாதனை நிகழ்வு மவுண்ட் கார்மல் பள்ளியின் கல்விப் பயணத்தில் குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமைந்தது. நிகழ்வை பள்ளியின் தாளாளர் ஏ. சுகிர்தா ரோசலிண்ட் மற்றும் அறங்காவலர் ஐ.வனிதா ஆகியோர் முன்னின்று ஒருங்கிணைத்தனர். நிகழ்ச்சிக்கு ஒத்துழைப்பு வழங்கிய ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
