
திருவண்ணாமலை ஸ்ரீ சரஸ்வதி விகாஸ் பள்ளியில் குழந்தைகள் தின விழா
திருவண்ணாமலை நவம்பர் 13
திருவண்ணாமலை ஸ்ரீ சரஸ்வதி விகாஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் விழா
கொண்டாடப்பட்டது இந்த நிகழ்ச்சிக்கு பள்ளியின் செயலாளர் ரூபவள்ளி ராமச்சந்திரன் அனைவரையும் வரவேற்று பேசினார்
இந்த நிகழ்ச்சிக்கு பள்ளியின் பொருளாளர் கிருஷ்ணன் முன்னிலை வகித்தார் பள்ளியின் நிறுவனர் & தாளாளர் முனைவர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி.எஸ். விஜயகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார் தமிழ் புலவர் சபரி ரவி வாழ்த்துரை வழங்கினார் குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு பல்வேறு கலை நிகழ்ச்சிகள் போட்டிகள் நடைபெற்றன விழா முடிவில் நன்றியுரை ஷாருலதா ராமச்சந்திரன் கூறினார்.
