தூத்துக்குடி ஸ்காட் வேளாண் அறிவியல் நிலையம் மற்றும் தமிழ்நாடு பாசன மேலாண்மை பயிற்சி நிலையம் திருச்சிராப்பள்ளி இணைந்து நடத்திய மானாவாரி நிலங்களில் மண் மற்றும் பாசன நீர் மேலாண்மை குறித்த பயிற்சி ஸ்காட் வேளாண் அறிவியல் நிலையத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. இப்பயிற்சியில் நிலைய முதுநிலை விஞ்ஞானி மற்றும் தலைவர் முனைவர் பழனிச்சாமி அவர்கள் வரவேற்புரையாற்றினார். மேலும் தமிழ்நாடு பாசன மேலாண்மை பயிற்சி நிலையம் துணை இயக்குனர் வசந்தா சிறப்புரையாற்றினார். செல்வம் உதவி இயக்குனர் இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். இப்பயிற்சியில் ஸ்காட் வேளாண் அறிவியல் நிலைய தொழில்நுட்ப வல்லுநர்கள் முருகன், வேல்முருகன், ஆனந்த், முத்துக்குமார், சுமதி மற்றும் மாசாணச்செல்வம் ஆகியோர் தொழில்நுட்ப உரையாற்றினர். இப் பயிற்சியில் 40 விவசாயிகள் கலந்து கொண்டனர், கலந்து கொண்ட அனைத்து விவசாயிகளுக்கும் பங்களிப்பு சான்றிதழ் வழங்கப்பட்டது.