வேலூர் மாவட்டம், வேலூர் மாவட்ட தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் சங்க மாநிலத் தலைவர் சின்னசாமி தலைமையில் நடைபெற்றது. மாநில கவுரவத் தலைவர் வெங்கடாசலம் ,துணைத் தலைவர்கள் வாசு ரேணு ,மணி லிங்கம் ,ஆகியோர் முன்னிலை வகித்தனர் .வேலூர் நேஷனல் சிக்னல் பகுதியிலிருந்து தொடங்கிய ஊர்வலம் காட்பாடி சாலை ,பழைய பஸ் நிலையம் ,அண்ணா சாலை தெற்கு போலீஸ் நிலையம் வழியாக சென்று அண்ணா கலையரங்கம் அருகே நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகத்தாதுவில் அணைக்கட்ட முயலும் கர்நாடக அரசின் நடவடிக்கைக்கு மத்திய அரசு அனுமதி தரக்கூடாது என்றும் தென்பெண்ணை பாலாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்றும் 15 அம்ச கோரிக்கையை முன்வைத்து பொதுக்கூட்டம் நடைபெற்றது .இதில் விவசாய சங்கத்தின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.